அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, September 7, 2010

சொந்தமாக சில வரிகள்.............

நம்ம மாதவன் ஒரு பதிவு போட்டிருக்காரு! அதில சொந்த முயற்சியில தான் எதுவும் எழுதனும்னு சொல்லியிருக்காரு. நம்ம கோகுலம் வெங்கட் வேற அந்தப் பதிவுல "இனிமே நானும் உங்களை மாதிரியே சொந்தமா ( !!! ) எதாவது எழுத Try பண்றேன்"னு வேற சொல்லிட்டாரு. ஸோ, அவருக்கு முன்னாடியே நாம ஏதாவது சொந்தமா எழுதலாமேன்னு தான் இந்த பதிவு!

கீழே உள்ள எல்லாமே சொந்த வரிகள் என்பதை அறுதியிட்டு உறுதியாகவும், ஆணித்தரமாகவும்...........ஓகே, நீங்க நம்பினா போதும்!

தாய் சொல்லைத் தட்டக் கூடாது!
தகப்பன் தெய்வத்துக்கும் மேலானவன்!
அண்ணன் இருக்கும்வரை நமக்குக் கவலை இல்லை!
அக்கா, தங்கை உள்ளவன் அடுத்த பெண்ணை தவறாக நினைக்க மாட்டான்!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!
மாமனுக்கு மிஞ்சின சொந்தமில்லை!

இது போதும்னு நினைக்கிறேன், நல்லா பாருங்க எல்லா வரியிலேயும் ஏதாவது ஒரு "சொந்தம்"பத்தி எழுதியிருக்கேன்.

டிஸ்கி : தயவு செய்து திட்டாதீர்கள்.அடுத்த பதிவு கொஞ்சம் சீரியசாவே எழுதிடறேன்!

19 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

அருண் பிரசாத் said...

கடவுளே! இந்த குரூப் தொல்லைதாங்களைடா சாமி!

இது உங்க சொந்த பிளாக்தானா?

என்னது நானு யாரா? said...

பங்காளி! அருமையா பின்னி எடுத்திட்டீங்க!

இப்படி ஒரு போடு போடுவிங்கன்னு சத்தியா எதிர்பார்கல பங்காளி! மனுஷன அசர வெச்சிட்டீங்க போங்க!!1

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sonthamaa yosichchathaa?

Madhavan said...

ஆஹா.. 'சொந்தமா' அசத்துறீங்க.
அதுசரி, நாம சொன்னா எவன் சரியா கேக்குறான். ஆண்டவா, காப்பாத்துடா.


//அருண் பிரசாத் said.
"இது உங்க சொந்த பிளாக்தானா?"//

இல்லையே.. 'கூகிள்' தான owner

வெங்கட் நாகராஜ் said...

சொந்தமா யோசிச்சு, சொந்தத்த பத்தி பதிவு எழுதி இருக்கீங்க. அதுக்கு நானும் சொந்தமா யோசிச்சேன் - நல்லாவே இருக்குங்க!

வெங்கட்.

நாஞ்சில் பிரதாப் said...

தம்பி உடையான படைக்கு அஞ்சான்

மச்சான் இருந்தா மலையேறி பொழைக்கலாம்...

இதெல்லாம் கூட எழுதியிருக்கலாம்...இதுவும் "சொந்த"மான சரக்குத்தான்...

ப.செல்வக்குமார் said...

///கடவுளே! இந்த குரூப் தொல்லைதாங்களைடா சாமி!

இது உங்க சொந்த பிளாக்தானா?
///
எப்பா ஒரே கட்சிக்குள்ள சண்டை ..!!!

ப.செல்வக்குமார் said...

/// தயவு செய்து திட்டாதீர்கள்.அடுத்த பதிவு கொஞ்சம் சீரியசாவே எழுதிடறேன்!
///
இல்ல நீங்க இப்படியே எழுதுங்க ..!! சீரியஸா எல்லாம் வேண்டாம் ..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ப.செல்வக்குமார் said...
இல்ல நீங்க இப்படியே எழுதுங்க ..!! சீரியஸா எல்லாம் வேண்டாம் .. //

are you serious?????!!!!!!!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sonthamaa yosichchathaa?//

pinna, mandapaththila vera yaaraavathu ezhuthik koduththu naanaa publish panninen, ennudaiyathuthaan, ennudaiyathuthaan aiyaa!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ அருண் பிரசாத்

அதெல்லாம் இல்ல, ஒத்திக்கு எடுத்திருக்கேன் சாமி...........கூகிள் கிட்டே இருந்து!

@ வெங்கட் நாகராஜ் said...

சொந்தமா யோசிச்சு, சொந்தத்த பத்தி பதிவு எழுதி இருக்கீங்க. அதுக்கு நானும் சொந்தமா யோசிச்சேன் - நல்லாவே இருக்குங்க!
//

ஹிஹி........தாங்ஸ்ங்க! அப்புறம், உங்க சொந்த பந்தம்லாம் நல்லா இருக்காங்களா?

TERROR-PANDIYAN(VAS) said...

நான் சொந்தமா ஒரு அறுவா வாங்கலாம் இருக்கேன்....

Chitra said...

நொந்த நூடுல்ஸ் ஆயிட்டோமே.....!!!!

வானம்பாடிகள் said...

அந்த தமிழ்மணப் பட்டிய கீழ வையுங்கோ. மேல இருக்கிற பட்டியில பல பதிவில வாக்களிக்க முடியல. நான் இத சொந்தமா கண்டு புடிச்சேன்:))

என்னது நானு யாரா? said...

//அந்த தமிழ்மணப் பட்டிய கீழ வையுங்கோ. மேல இருக்கிற பட்டியில பல பதிவில வாக்களிக்க முடியல. நான் இத சொந்தமா கண்டு புடிச்சேன்:))//

நன்றி வானம்பாடிகள் ஐயா!

இப்போது தான் நீங்க சொன்னது மாதிரி முயற்சி செய்து பார்த்தேன். நீங்க சொன்ன மாதிரி கீழே கொண்டு வந்தா நல்லபடியா வேலை செய்கிறது.

நன்றிகள்! இதுக்கு தான் உங்கள போல ஒரு ஐன்ஸ்டின் வேணுங்கறது.

ரொம்ப மகிழ்ச்சி!

வெங்கட் said...

@ டெரெர்.,

// நான் சொந்தமா ஒரு அறுவா வாங்கலாம் இருக்கேன்.... //

அப்படியே எனக்கும் ஒண்ணு

அடுத்த பதிவு சீரியஸா எழுதறாராம்ல..
எழுதுவாரு., எழுதுவாரு...,
ஆஸ்பத்திரியில இருந்து..

R.Gopi said...

வர வர அட்டகாசம் தாங்க முடியல...

ஆனாலும், இவ்ளோ “சொந்தமா” எழுத கூடாது தலைவா.....

போதும், இத்தோட நிப்பாட்டிக்குவோம். இந்த கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்... பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்...

Anonymous said...

ஆண்டவா,ஏடு குண்டல வாடா வெங்கட ரமணா !!! பெ.சொ.வி ..,அந்த சொந்தம் வேற ,இந்த சொந்தம் வேற ..,

Anonymous said...

நான் சொந்தமா அம்மோனியம் நைட்ரேட் ல வெடி குண்டு செய்ய போறேன்