ரமலான் மாதத்தின் சிறப்புகள்:
-
நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது.(திர்மிதீ) -
சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. (திர்மிதீ) -
ரமலான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.(நஸயீ) -
ரமலான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும்.(திர்மிதீ) -
ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார். (திர்மிதீ) -
அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.(புகாரி) -
நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். (நஸயீ) -
ஆயிரம் மாதங்களை விட மகத்துவமிக்க ஓர் இரவு (லைலத்துல் கத்ர்) இம்மாதத்தில் தான் இருக்கிறது. -
ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது -
ரமலானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து சிலரை விடுதலை செய்கின்றான். (இப்னுமாஜா) -
புனிதமிக்க அல்-குர்ஆன் ரமலானில் தான் இறக்கியருளப்பட்டது. (2:185)
நோன்பு நோற்பதன் சிறப்புகள்
-
நோன்பு கெட்ட செயல்களில் இருந்து பாதுகாக்கும் (புகாரி) -
நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகும். (அஹ்மத்) -
நோன்பு சுவர்கத்திற்குள் நுழைவதற்கு காரனமான அமலாக இருக்கிறது (நஸயீ) -
நோன்பு அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் (அஹ்மத்) -
நோன்பாளிகள் மட்டுமே ரய்யான் என்னும் வாசல் வழியாக சுவனத்திற்குள் பிரவேசிப்பார்கள் (புகாரி) -
நோன்புக்குரிய கூலியை அல்லாஹ்வே கொடுக்கின்றான். (திர்மிதி) -
நோன்பு தக்வாவுக்கு (அல்லாஹ்வை பயப்படுவதற்கு) முக்கிய காரணமாக அமைகின்றது. (2:183) -
நோன்பாளியின் வாய்வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரி வாடையை விட மிக நறுமணமுள்ளது. (புகாரி) -
நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை அவருக்காக மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றனர். -
நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. (பைஹகி)(நன்றி: http://suvanathendral.com/portal/?p=1272)
7 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
நல்ல கருத்துகள்...
பண்டிகைகள் கொண்டாடும் போது அவைகளின் உண்மை அர்த்தம் புரிந்து கொண்டாட படவேண்டும் என சொல்லி இருக்கிறீர்கள். நன்றி நண்பரே!
சரியான நேரத்தில் சரியான பதிவு! வன்முறையை கைவிட்டு அன்பு வழியில் மானுடம் நடக்க அந்த பரம்பொருள் அருள்புரியட்டும்!
எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது ..
இப்பொழுது தெரிந்து கொண்டேன் ..!!
நன்றி ..
ரொம்ப டீடைலா சொல்லிட்டீங்க .. .. நா சிம்பிள சொல்லியிருக்கேன்.
நல்ல தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.
நல்ல தொகுப்பு. எனக்கு புதிது. தெரிந்து கொண்டேன்.
மிக மிக நல்ல பதிவு....
நிறைய விஷயங்களை உள்ளடக்கிய மற்றுமொரு சிறப்பான பதிவை பதிந்தமைக்கு வாழ்த்துக்கள் தல...
Post a Comment