அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, September 11, 2010

விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள்!

யாருக்கும் தெரியாத விஷயத்தை நான் இப்போ சொல்லப் போறதில்லை. "முழு  முதற்கடவுள்" என்று எல்லோராலும் வணங்கப் படுகின்ற விநாயகப் பெருமானின் அருள் வேண்டி அனைவரும் இன்று விநாயக சதுர்த்தி கொண்டாடுகிறோம்.

வட இந்தியாவில் கணேஷ் சதுர்த்தி என்று இந்நாளைக் கொண்டாடுகிறார்கள்.

விநாயகப் பெருமானுக்குச் சதுர்த்தி நாளில் கொழுக்கட்டை (மோதகம்) படைத்து வழிபாடு செய்வது ஏன்? 


கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. 


அது மட்டுமின்றி எவரும் அதிகம் விரும்பாத வெள்ளெருக்கு மாலை, மருத்துவக் குணமுடைய அருகன் புல் அர்ச்சனை ஆகியனவும் விநாயகருக்குப் பிடித்தமானவை. "மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் நான் ஆதரவாக நிற்பேன்' என்பதை வெள்ளெருக்கு மாலை தெரிவிக்கின்றது. "விநாயகரை வணங்கினால் நோய்கள் தீரும்; பிறவி நோயும் மாயும்' என்பதை அருகன்புல் அர்ச்சனை அறிவிக்கின்றது.  (இந்த சுட்டிக்கு நன்றி)


கணபதியைத் தொழுவோம்! கவலையெல்லாம் மறப்போம்! 


அனைவருக்கும் என் இனிய விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள்!

டிஸ்கி : இன்று பிறந்த நாள் காணும் இன்னொரு வி.ஐ.பி. யார் தெரியுமா? என் முதல் பெண். அவளுக்கு உங்க சார்பா பிறந்த நாள் வாழ்த்துகளை வேண்டுகிறேன்!ஒன் மோர் டிஸ்கி : ஹலோ, ரெண்டு பதிவுகள் மொக்கை இல்லாம போட்டுட்டேன், இனிமே பீ கேர்புல்! (நான் என்னைய சொன்னேன்!) ஸ்டார்ட் மீசிக்!

14 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

வெங்கட் said...

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி
வாழ்த்துக்கள்..!!

உங்க குட்டி பொண்ணுக்கும்
" Wish u Happy Birthday-டா செல்லம்.."

வெங்கட் said...

// ஒன் மோர் டிஸ்கி : ஹலோ, ரெண்டு பதிவுகள்
மொக்கை இல்லாம போட்டுட்டேன்,
இனிமே பீ கேர்புல்! (நான் என்னைய சொன்னேன்!)
ஸ்டார்ட் மீசிக்! //

Music எதுக்கு..?!!
ஓ.. நாங்க கும்மும் போது
நீங்க "ஐயோ., அம்மான்னு "
சத்தம் போட்டா.. வெளியே கேக்காம
இருக்கவா..?

ஸ்ரீராம். said...

மோதக நாள் வாழ்த்துக்கள்...! (அதே நினைப்புதாங்க...)

உங்கள் பெண்ணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒழுங்க கொழுக்கட்டை அனுப்புங்க.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

உங்க பேபி-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என்னது நானு யாரா? said...

இன்று பிறந்த நாள் காணும் உங்க வீட்டு வி.ஐ.பி -க்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். Many Many Happy returns of the Day!

விநாயகருக்கும் இந்த வாழ்த்தை சொல்லிக்கிறேனுங்க

அண்ணாச்சி! நகைசுவை பதிவு ஒன்னு போட்டிருக்கேன். படிச்சி பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறேன்!

எஸ்.கே said...

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

தங்கள் குழந்தைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! குழந்தையின் வாழ்வு இனிமையாக எல்லா வளங்களோடு அமைய வாழ்த்துக்கள்!

வானம்பாடிகள் said...

உங்களுக்கும் என் வாழ்த்துகள். தமிழ்மணப்பட்டியை இண்ட்லிக்கு அருகே வையுங்கள். வாக்களிக்க இயலவில்லை

Madhavan said...

நேற்றைய விளக்கமும் சூப்பர்..
இன்றைய விளக்கமும் சூப்பரோய்.. ரிபீட்டோய்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ வானம்பாடிகள்
தங்கள் யோசனைப் படி தமிழ்மணம் பட்டியை பதிவுக்குக் கீழே மாற்றிவிட்டேன், நன்றி!

R.பூபாலன் said...

Happy Birth Day to pappu.....கேக்கும் கொளுகட்டையும் எப்போ தருவிங்க

R.Gopi said...

அருமையான பதிவு....

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், வலைத்தோழமைகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..

இன்று பிறந்த நாள் காணும் உங்க வீட்டு வி.ஐ.பி (முதல் பெண்ணுக்கு) என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு சிறப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

வி ஐ பி said...

உங்கள் குழந்தைக்கு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். எல்லா நலனும், வளமும் பெற்று பல்லாண்டு காலம் இனிதாக வாழவேண்டும் என்று உளமார ஆசி கூறுகின்றேன்.

ப.செல்வக்குமார் said...

உங்க பொண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
விநாயகர் பத்தி சொன்னதுக்கு நன்றி ..!!

ப.செல்வக்குமார் said...

நீங்க அடுத்த பதிவு எப்படி வேணா போடுங்க ..
இதுக்கெல்லாமா பயந்துடுவோம் ..!!??