அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Friday, October 22, 2010

இது எப்படி இருக்கு?

ஒரு வக்கீல் வீட்டு வாசல்ல ஒரு  போர்டு வச்சிருந்தாராம் அதில "மூன்று கேள்விகளுக்கு ஆயிரம் ருபாய்"னு எழுதி வச்சிருந்தாராம். ஒரு கிளையன்ட் வந்து "ஏன் சார், மூணு கேள்விக்கு ஆயிரம் ரூபாயா?"ன்னு கேட்டாராம். வக்கீல் "ஆமாம் சார்!"னு சொன்னாராம்."இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாத் தெரியலையா?"ன்னு கேட்டாராம், அந்த கிளையன்ட். "எனக்கு சரியாத் தான் படுது"ன்னு சொன்னார் வக்கீல், "மக்கள் எப்படி இதை ஒத்துகிட்டு உங்களைத் தேடி வராங்க?"ன்னு ஆச்சரியத்தோட கேட்ட  கிளையன்டைப் பார்த்து வக்கீல் சொன்னாராம், "நிறைய பேரு வர்றாங்க! ஓகே, மூணு கேள்வி முடிஞ்சுது, எடுங்க ஆயிரம் ரூபாயை!"

*************************************************************************************

ஒரு டாக்டர்கிட்ட ஒரு பேஷன்ட் வந்து, "டாக்டர்! எனக்கு எதைப் பாத்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது!"ன்னு சொன்னார்.

அதுக்கு அந்த டாக்டர் "உங்க மூணு பேருக்கும் அதே ப்ராப்ளம் தானா?"ன்னு கேட்டாராம்.

*************************************************************************************
ஒருத்தர் ஆபீசுக்கு லேட்டா வந்தாராம், மேனேஜர், "ஏன்யா, லேட்?"னு கோபமா கேக்க, "சாரி சார். பஸ்ல வரும்போது தூங்கிட்டேன் ஸ்டாப் தாண்டிப் போய்ட்டதால லேட்டாயிடுச்சு!"ன்னு சொன்னார் அவரு.

"என்னது, பஸ்ல தூங்கினியா? ஆபீஸ்னு ஒண்ணு இருக்கறதையே மறந்துட்டியா?"ன்னார் மேனேஜர்.

*************************************************************************************

"குற்றம் சாட்டப் பட்டவர் உங்களை என்ன சொல்லித் திட்டினாரு?" கேட்டார் வக்கீல்

"ஐயோ! அந்த வார்த்தைகளை எல்லாம் நல்லவங்க கேட்டா நாண்டுகிட்டு செத்துடுவாங்க, நான் சொல்ல மாட்டேன்!"ன்னாரு சாட்சி.


"ஆனா சாட்சிக்கு முக்கியமாச்சே! அப்போ, அந்த வார்த்தைகளை நீதிபதி காதுலயாவது சொல்லுங்க" என்றார் வக்கீல்.


***************************************************************************************


டிஸ்கி : ஜோக்ஸ் எல்லாம் நல்லா இருக்கா? தேங்க்ஸ்!

டிஸ்கிக்கு டிஸ்கி : என்னாது, எல்லாம் கேட்ட ஜோக்கு போல இருக்கா? அப்போ சரி, மங்குனியைத் திட்டிட்டு இங்க வாங்க!

டிஸ்கிக்கு டிஸ்கிக்கு டிஸ்கி : மங்குனியைத் திட்டிட்டுத்தான் இங்க வரீங்களா? ஒரே விஷயத்துக்கு எத்தனை பேரைத்தான் திட்டுவீங்க? கூல்............!

16 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ ....ஹா ..........ஹா ..........

மாதேவி said...

முதல் இரண்டும் ரொம்ப :)).

Madhavan said...

எது எப்படி இருந்தா என்ன.. இன்ட்லில ஒட்டு போட்டாச்சு..

வெங்கட் நாகராஜ் said...

முதலிலேயே படித்திருந்தாலும் மீண்டும் சிரிக்க வைத்தது உங்களின் இப்பதிவு. நன்றி.

அருண் பிரசாத் said...

திட்டரதுக்கு நாங்க சோம்பேறித்தனம் படவே மாட்டோம்.... அது சக்கரை பொங்கல் சாப்பிடுற மாதிரி.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன வில்லத்தனம் இன்னிக்கு ஒரே திருட்டு பசங்களா இருக்காங்க. ஆனா மாமூல்தான் கிடைக்கல. அவ்வ்வ்வ்வ்

வெங்கட் said...

// என்னாது, எல்லாம் கேட்ட ஜோக்கு
போல இருக்கா? அப்போ சரி, மங்குனியைத்
திட்டிட்டு இங்க வாங்க! //

ம்ம்.. நான் மங்குனியை திட்டி இருக்கேன்..
அதை போயி படிச்சிக்கோங்க..

ஒரு நாளைக்கு நான் ஒருத்தரை தான்
திட்டுவேன்.. It's My Policy..!!

நாகராஜசோழன் MA said...

அப்படியே போலீசுக்கும் மாமூல் கொடுத்திடுங்க :)

philosophy prabhakaran said...

கேட்டது போலவே இருந்தாலும் உங்களது எழுத்துநடையில் இன்னும் நன்றாகவே இருந்தது...

ஸ்ரீராம். said...

ஹா....ஹா....ஹைய்யோ.........ஹைய்யோ....

மங்குனி அமைசர் said...

ஆள் வச்சு எல்லாம் இப்ப திட்ட ஆரம்பிச்சிட்டாங்களா ? எங்கங்கடா இது புது டிரண்டா இருக்கு , அடிக்கிறதுக்கு தான் ஆள் வப்பாங்கன்னு பாத்தா இப்ப திட்டுறதுக்கும் ஆள் வந்க்கிரான்களா ? அவ்வ்வ்வ்வ்வ்...................

ப.செல்வக்குமார் said...

//"நிறைய பேரு வர்றாங்க! ஓகே, மூணு கேள்வி முடிஞ்சுது, எடுங்க ஆயிரம் ரூபாயை!"//

யாருங்க அந்த புத்திசாலி வக்கீல் ..!

ravikumar said...

super pa...............

நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா போயும் போயும் மாண்புமிகு நீதிபதி காலை வாரிட்டீங்களே.........
//உங்க மூணு பேருக்கும் அதே வியாதிதானா//
அடங்கொய்யால டாக்டரே.....

swathi said...

hahaha hi hi hi

ரோஸ்விக் said...

உங்களுக்கும் கொஞ்சம் குசும்பு ஜாஸ்தின்னு உங்க டிஸ்கி சொல்லுதே! உண்மையா?