அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, October 30, 2010

நான் "பல்பு" வாங்கின கதை

முன் டிஸ்கி: ஒருத்தன் பல்பு வாங்கின கதையைப் படிக்க எத்தனை பேருக்கு ஆர்வம்பா.............நல்லா இருங்க!


அதில பாருங்க அன்னிக்குத்தான் முதன்முதலா மார்கெட்டுக்கு போய் (சரி, சரி, ரொம்ப கலாய்க்காதீங்க, வழக்கம்போல நான்தான் மார்க்கெட்டுக்கு போனேன்) காய்கறி எல்லாம் வாங்கினேன். ("வெண்டைக்காய் இளசா இருக்கணும், வாழைக்காய் முத்தலா இருக்கணும், மாத்தி வாங்கினா குப்பையில்தான் போடணும் இல்லன்னா நீங்கதான் சாப்பிடனும்" என்று தங்கமணி அறிவுரை வேறு)

"எல்லா காய்கறியும் சேர்ந்து ஒரு நாப்பத்தோரு ரூபா ஆச்சு சார்" என்றார் கடைக்காரர்.  ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினேன். "ஒரு ரூபாய் சில்லறை இருக்குமா, சார்?" என்ற கடைக்காரரிடம் உதட்டைப் பிதுக்கினேன். "பக்கத்தில இருக்கற கடைல சில்லறை மாத்தி வரீங்களா?" என்று அறிவுரை கூறினார்.

பக்கத்தில ஒரு கடை இருந்தது. அங்கே சென்று சில்லறை கேட்டேன். "இப்பதான் சார், கடை தொறந்தேன். முதல் போணி ஆகாம சில்லறை குடுக்க மாட்டேன்" என்றார் அவர். "நம்மகிட்ட ஏதாவது வாங்கிக்குங்க" என்று அட்வைஸ் வேறு.

கொஞ்சம் யோசித்து "ஒரு நாப்பது வாட்ஸ் பல்பு குடுங்க" என்றேன். ஐம்பது ரூபாய்த் தாளை நீட்டினேன். ஒன்பது ரூபாய் போக பாக்கி நாற்பத்தோரு ரூபாய் கொடுத்தார். சந்தோஷத்தோடு காய்கறிக் கடை சென்று பணத்தைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன்.

இதுதான் சார், நான் "பல்பு" வாங்கின கதை.

டிஸ்கி : என்னது, நீங்க வேற ஏதோ நினைச்சுகிட்டு பதிவைப் படிக்க வந்தீங்களா? அப்போ உங்க கோவம் நியாயம்தான். திட்ட வேண்டியதெல்லாம் கமெண்டா போட்டுட்டு கொசுறா வோட்டும் போட்டுட்டு போங்க.:)

35 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

செல்வா said...

//முன் டிஸ்கி: ஒருத்தன் பல்பு வாங்கின கதையைப் படிக்க எத்தனை பேருக்கு ஆர்வம்பா.............நல்லா இருங்க!//

பல்பு வாங்கினதெல்லாம் பதிவா போட்டா என்ன பண்ணுறது ..?
அப்படின்னா எலெக்ட்ரீசியன் எவ்ளோ பல்பு வாங்குறாரு ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அட தலைவா இப்படி கூட பல்பு வாங்கலாமா....

Ponchandar said...

உங்களுக்கு எந்த ஊர்ல 9 ரூபாய்-க்கு 40 வாட்ஸ் பல்பு கொடுக்கிறாங்க ! ! ! ! நோ வாட்ஸ் பல்பே 10 ரூவா ஆகுதே ! ! !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி மொக்கை ராசு கூட கூடு சேர் வைக்கிறே

NaSo said...

என்ன பிராண்ட் பல்பு வாங்குனீங்க?

vasu balaji said...

நாப்பத்தியொம்போது ரூபாய்க்கு காய்கறி? காலையில கோவை பழமுதிர்சோலைல போய் (மழையாச்சேன்னு )ரூ350 காலி. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.கத்தரிக்கா தவிர ஒன்னு கூட அரை கிலோ எட்டலை.

Unknown said...

அந்த பல்பு பீசா போய்டும்

அன்பரசன் said...

மத்தபடி அந்த பல்பு எத்தனை வாட்ஸ்னு சொல்லவே இல்லியே?

Ravi kumar Karunanithi said...

ungala avaru tube light'ah aakkittaru.. unaku indha avamanam thaevaya says vadivelu....

Chitra said...

பளிச்!!

வெங்கட் said...

Match-க்கு போறதுக்கு முன்னாடி
கொஞ்சம் Warmup., Exercise எல்லாம்
பண்ணுவாங்கல்ல.. அதுமாதிரி

உங்க Blog-க்கு Enter ஆகறதுக்கு
முன்னாடி நாங்க கொஞ்சம் ஓரமா
உக்கார்ந்து குதர்க்கமா யோசிச்சிட்டு
தான் வருவோம்..

So.., எனக்கு இன்னிக்கு ' பல்பு ' இல்ல..

ஹி., ஹி., ஹி...!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது என்ன பல்பு, பிலிப்ஸா, சூரயாவா? ஒரிஜினலா, டூப்ளிக்கேட்டா? ஒய்ட்டா, ரெகுலரா? வட்டமா, சப்பட்டையா? திரெட் ஹோல்டரா, சாதா ஹோல்டரா? விளக்கம் தேவை!

அந்நியன் said...

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

R. Gopi said...

வாங்குன பல்பை நைசாப் படிக்கிறவங்க தலைல கட்டிட்டீங்க

என்னது நானு யாரா? said...

போன பதிவுக்கு விடை சொல்லாம என்னதுக்கு ஒருப் புதுப்பதிவு அண்ணாச்சி? என்ன ஒருக் கெட்ட பழக்கம் இது? இது தான் உண்மையாக நீங்க வாங்கும் பல்பு!

பெசொவி said...

@ செல்வகுமார்
அதான, ரொம்பதான் ரவுசா போச்சு, இல்ல செல்வா?

@வெறும்பய
ஹிஹி

//Ponchandar said...
உங்களுக்கு எந்த ஊர்ல 9 ரூபாய்-க்கு 40 வாட்ஸ் பல்பு கொடுக்கிறாங்க ! ! ! ! நோ வாட்ஸ் பல்பே 10 ரூவா ஆகுதே ! //

ஆனா நான் ஒன்பது ரூபாய்க்குத்தான் வாங்கினேன். அப்ப கடைக்காரருக்குதான் பல்போ?

பெசொவி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அட ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி மொக்கை ராசு கூட.....//

public, public!

பெசொவி said...

// நாகராஜசோழன் MA said...
என்ன பிராண்ட் பல்பு வாங்குனீங்க?
//

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது என்ன பல்பு, பிலிப்ஸா, சூரயாவா? ஒரிஜினலா, டூப்ளிக்கேட்டா? ஒய்ட்டா, ரெகுலரா? வட்டமா, சப்பட்டையா? திரெட் ஹோல்டரா, சாதா ஹோல்டரா? விளக்கம் தேவை!
//
//வானம்பாடிகள் said...
நாப்பத்தியொம்போது ரூபாய்க்கு காய்கறி? காலையில கோவை பழமுதிர்சோலைல போய் (மழையாச்சேன்னு )ரூ350 காலி. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.கத்தரிக்கா தவிர ஒன்னு கூட அரை கிலோ எட்டலை.
//

பதிவைப் படிச்சோமா, கமெண்ட் போட்டோமான்னு இல்லாம நல்லா கேக்குராங்கையா டீடேயிலு............

பெசொவி said...

// Dhosai said...
ungala avaru tube light'ah aakkittaru.. unaku indha avamanam thaevaya says vadivelu....//

ada puthu peraa irukku. vaanga vaanga, vanakkam.

பெசொவி said...

// Chitra said...
பளிச்!!//

Thanks!

பெசொவி said...

//வெங்கட் said...
Match-க்கு போறதுக்கு முன்னாடி
கொஞ்சம் Warmup., Exercise எல்லாம்
பண்ணுவாங்கல்ல.. அதுமாதிரி

உங்க Blog-க்கு Enter ஆகறதுக்கு
முன்னாடி நாங்க கொஞ்சம் ஓரமா
உக்கார்ந்து குதர்க்கமா யோசிச்சிட்டு
தான் வருவோம்..

So.., எனக்கு இன்னிக்கு ' பல்பு ' இல்ல..

ஹி., ஹி., ஹி...!!!
//

உங்களுக்கு பல்பு குடுக்கத் தான் உங்க தங்கமணி இருக்காங்களே, அது போதாதா?

பெசொவி said...

// அந்நியன் said...
பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..
//

வாங்க அந்நியன், இப்பதான் உங்களை இங்க பாக்கறேன். உங்க கருத்துகளைப் படித்தேன். என்னைப் பொறுத்தவரை வலைப்பூ ஒரு பொழுதுபோக்கு அவ்வளவுதான். அதுக்கு மேல சொல்லனும்னா ஒரு பதிவுதான் போடணும்.

பெசொவி said...

//Gopi Ramamoorthy said...
வாங்குன பல்பை நைசாப் படிக்கிறவங்க தலைல கட்டிட்டீங்க//

வாங்க தல, ஹிஹி!

பெசொவி said...

//என்னது நானு யாரா? said...
போன பதிவுக்கு விடை சொல்லாம என்னதுக்கு ஒருப் புதுப்பதிவு அண்ணாச்சி? என்ன ஒருக் கெட்ட பழக்கம் இது? இது தான் உண்மையாக நீங்க வாங்கும் பல்பு!
//

அந்தப் பதிவுலேயே விடைகள் போட்டுட்டேனுங்க இங்க போய்ப் பாருங்க.

வல்லிசிம்ஹன் said...

நல்ல பல்பா வாங்கினீங்களா:)

இம்சைஅரசன் பாபு.. said...

பல்பு பல்பு .........ன்னு எல்லோரும் சொல்லுறாங்க .நீங்களும் கடைசில எங்களுக்கு பல்பு கொடுக்குறீங்கள .எந்த ஊர்ல 9 ரூபாய்க்கு பல்பு தராங்க .....

Unknown said...

ha haa haa

Ravi kumar Karunanithi said...

kadaisila ennadhan aachi... tube light aagitengala......

பெசொவி said...

//பல்பு பல்பு .........ன்னு எல்லோரும் சொல்லுறாங்க .நீங்களும் கடைசில எங்களுக்கு பல்பு கொடுக்குறீங்கள .எந்த ஊர்ல 9 ரூபாய்க்கு பல்பு தராங்க ..... //

9 ரூபாய்தாம்பா ஆச்சு, ஒரு வேளை, ப்யூஸ் ஆனா பல்பா இருக்குமோ!
:)

R.Gopi said...

பல்பு வாங்கலியோ பல்பு....

தல.... ஒரு மூட்டை பல்பு ஒன்பது ரூவா... வேணுமா... மூட்டையில கால்வாசி பல்புன்னு எழுதின பேப்பர் மட்டும் கிடைக்கும்....

ஸ்ரீராம். said...

:)))

மங்குனி அமைச்சர் said...

உங்க வீட்டுல இந்த அரவா , கத்தி இந்த மாதிரி எல்லாம் வாங்க சொல்ல மாட்டாங்களா ? வாங்கும் போது சொல்லுக நானும் கூட வர்றேன் .... அந்த கொஞ்சம் வேலை இருக்கு

கருடன் said...

// "நம்மகிட்ட ஏதாவது வாங்கிக்குங்க" என்று அட்வைஸ் வேறு.//

ஒரு பென்சில் இல்லைனா பேனா வாங்கி இருக்கலாம் இல்லை?? எதுக்கு தேடி போய் பல்பு வாங்கறிங்க?

Sharfuddeen said...

அய்யய்யோ நான் ஃபீசா போன பல்பையல்லவா உமக்கு கொடுத்துவிட்டேன். சாரி சார்.

வார்த்தை said...

வாங்குனது ஒத்த நாப்பது வாட்ஸ் பல்பு
ஆனா பிளாக் பக்கம் வர்ற இத்தன பேத்துக்கு கொடுக்குறத பாத்தா
ஒரு பல்பு கொடௌனே இருக்கும் போலயே....

http://vaarththai.wordpress.com