அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, November 4, 2010

தீபாவளியும் நானும்

முன் டிஸ்கி : சொந்தக் கதை என்பதால் கொஞ்சம் பெரிய பதிவு. சாரி.
நாம் கொண்டாடும் எல்லா பண்டிகைகளுமே நமக்கு முக்கியம்தான் என்றாலும், சிறுவர்களுக்கு கொண்டாட்டம் தரும் பெரிய பண்டிகை தீபாவளி பண்டிகைதான். எங்கள் குடும்பம் கொஞ்சம் நடுத்தரத்திற்கும் கீழ் இருந்ததால், எங்களுக்கெல்லாம் தீபாவளி வந்தால்தான் புதுத் துணி. எனவே, அது எனக்கு ஒரு ஸ்பெஷல் கொண்டாட்டம். என் பெரிய அண்ணன் தான் எங்கள் தீபாவளி தெய்வம். எங்களுக்கு புதுத் துணி எடுப்பது முதல், வெடி வாங்குவது வரை அவர்தான். "எங்க வீட்டில இந்த வருஷம் நூறு ரூபாய்க்கு வெடி வாங்கறோமே, நாங்க இருநூறு ரூபாய்க்கு வெடி வாங்கறோமே" என்று என்னிடம் சொல்லிப் பெருமைப்படும் தெரு பையன்களிடம், "எங்க அண்ணன் எவ்ளோ ரூபாய்க்கு வாங்கறார்னு தெரியலை" என்று ரொம்ப கூச்சத்துடன் சொல்லி,  அவர்கள் ஏளனப் பார்வை தாங்காது,...............அப்பா, சொல்லி மாளாது.
தீபாவளி முதல் நாள் வரை எனக்கு என்ன கலர் சட்டை என்பதே தெரியாது. ஏனென்றால், என் அண்ணன் வெளியூரில் வேளை பார்த்தால், தீபாவளிக்கு முதல் நாள் தான் வீட்டிற்கே வருவார். அதற்காக மாலை முதலே வீட்டு வாசலில் நானும் என் தம்பியும் தவம் இருக்க ஆரம்பித்து விடுவோம்.  அவரிடம் கொஞ்சம் பயமும் இருந்ததால், அவராக பையை எடுத்து துணியை வைக்கும் வரை நாங்கள் எதுவும் தொட மாட்டோம். பிறகு பட்டாசு பையை எடுப்பார். வெடி என்றாலே பயம் எனக்கு, எனவே புஸ்வானம், மத்தாப்பு இதில்தான் கவனம் செலுத்துவேன். இரவு முழுவதும் தூங்கவே மாட்டோம். பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, நானும் என் தம்பியும் தொகுதிப் பங்கீடு நடத்தி யார் யாருக்கு எத்தனை மத்தாப்பு என்று முடிவு செய்து கொண்டிருப்போம்.
அடுத்த நாள் அதிகாலை, பெரிய அண்ணன் சுவாமி சந்நிதியில் ஒரு கலர் தீப்பெட்டி கொளுத்தி தீபாவளியை ஆரம்பித்து வைப்பார்.  (அது இன்று வரை தொடர்கிறது- காரணம் கேட்டபோது அண்ணன் சொன்னார் "என் சின்ன வயசில் இந்த தீப்பெட்டி மட்டும் தான்  தீபாவளி, அதை மறக்காம இருக்கத்தான்") அம்மா வெந்நீர் அடுப்பு பற்றவைக்க, ஒவ்வொருவராக எண்ணெய் தேய்த்துக் குளிப்போம். எங்கள் turn வர கொஞ்சம் நேரமாகும் என்பதால் அது வரை வெடி பாக்கெட்டையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம். எல்லாரும் குளித்து முடித்தவுடன் ஆளுக்கு ஒரு தீப்பெட்டி பாக்கெட், ரெண்டு கம்பி மத்தாப்பு ரெண்டு புஸ்வானம் கொடுப்பார். அவ்வளவுதான், எங்கள் தீபாவளி ஓவர்.

இன்று என் பிள்ளைகளுக்கு மாதம் ஒரு துணி எடுத்துக் கொடுக்கிறேன். பட்டாசு விலையைப் பற்றி சொல்ல வேண்டாம். ஆனால், சிறு வயதில் நான் கொண்டாடிய தீபாவளியின் இன்பம் இந்த நாளில் இருப்பதில்லை. குடும்பத்தில் எல்லோரும் வெளியூரில் இருந்தாலும், அந்த நன்னாளில் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தாருடன் ஒன்றாக கலந்து பேசி, ஒன்றாக சாப்பிட்டு........................இதெல்லாம் இன்று இல்லை. காலை குளித்து முடித்தவுடன் டிவி முன்னால் உட்கார்ந்து, டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டு, டிவியோடு தான் தீபாவளி என்று ஆகிவிட்டது.

நாம் கொண்டாடும் பண்டிகைகளின் கால அளவைப் பாருங்கள். ஜனவரியில் பொங்கல், ஏப்ரலில் தமிழ்ப் புத்தாண்டு,  செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நவராத்திரி, நவம்பர் மாதத்தில் தீபாவளி என்று குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து மகிழ்வதற்காகவே இந்த கால வித்தியாசம். அப்படி இருக்க, வருடத்தில் மூன்று தடவையாவது ஒரு நாள் முழுவதும் டிவியில் காலம் தள்ளாமல் ஒன்றாக இருந்து, குடும்பத்தோடு பண்டிகையைக் கொண்டாடலாமே!

உங்கள் எல்லோருக்கும் என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்! வாங்க என்னோட சேர்ந்து இந்த வான வேடிக்கையைப் பாருங்க!

22 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

இம்சைஅரசன் பாபு.. said...

ennakku tha deepavali specia murukku

இம்சைஅரசன் பாபு.. said...

பசுமையான என்றும் நினைவில் இருந்து மாறாத அனுபவங்கள் .இதை நினைத்து பார்ப்பது கூட சந்தோசம் தான் சார்

இம்சைஅரசன் பாபு.. said...

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

R.Gopi said...

சூப்பர் தல....

படிக்கறப்போவே என்னுடைய சிறு வயது நாட்களின் போது கொண்டாடிய தீபாவளி ஞாபகம் வந்தது...

அப்போதெல்லாம், வருடத்தில் ஒரே முறை, அதுவும் தீபாவளிக்கு தான் புது துணி கிடைக்கும்... பெயரளவில் ஏதோ பட்டாசு...

நல்லா எழுதி இருக்கீங்க....

Madhavan said...

//காலை குளித்து முடித்தவுடன் டிவி முன்னால் உட்கார்ந்து, டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டு, டிவியோடு தான் தீபாவளி என்று ஆகிவிட்டது.//

இதென்ன பிரமாதம்.. நாம நெனைச்சா, டிவி. பாக்காம, நண்பர்கள், உறவினர்களோட தீபாவளிய கொண்டாடலாம்..

மங்குனி அமைசர் said...

பஸ்ட்டு தீபாவளி வாழ்த்துக்கள் சார்

மங்குனி அமைசர் said...

அப்புறம் செகண்டும்

தீபாவளி வாழ்த்துக்கள் சார் ,

மங்குனி அமைசர் said...

சிறு வயதில் நான் கொண்டாடிய தீபாவளியின் இன்பம் இந்த நாளில் இருப்பதில்லை. ///

உண்மை சார்

மங்குனி அமைசர் said...

டிவியில் காலம் தள்ளாமல் ஒன்றாக இருந்து, குடும்பத்தோடு பண்டிகையைக் கொண்டாடலாமே!////

தீபாவளியை மனிதர்களோடு கொண்டாடுங்கள்

http://manguniamaicher.blogspot.com/2010/11/blog-post_01.html

அதேதான் சார் , இத படிச்சிங்களா ?

வானம்பாடிகள் said...

இனிய தீபாவளி வாழ்த்துகள்:)

ப.செல்வக்குமார் said...

//(அது இன்று வரை தொடர்கிறது- காரணம் கேட்டபோது அண்ணன் சொன்னார் "என் சின்ன வயசில் இந்த தீப்பெட்டி மட்டும் தான் தீபாவளி, அதை மறக்காம இருக்கத்தான்") //

இத படிக்கும்போது உண்மைலேயே ஒரு சிலிர்ப்பு வருது அண்ணா ..!!

ப.செல்வக்குமார் said...

உண்மையாவே கலக்கலான பதிவு அண்ணா ..,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ..!!

அருண் பிரசாத் said...

தீபாவளி வாழ்த்துக்கள்....

ரொம்ப நெகிழ்ச்சியான பகிர்வு...

TERROR-PANDIYAN(VAS) said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் தல

வெங்கட் நாகராஜ் said...

உண்மை தான். உங்களது ஆதங்கம் புரிகிறது. நாம் இழந்து கொண்டு இருப்பது ஏராளம். பண்டிகைக் காலங்களில் கூட கூட்டுக் குடும்பமாய் இருக்க முடியாதபடி ஆகிவிட்டது சோகம் தான். நல்ல பகிர்வு.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வெங்கட்.
புது தில்லி.

வெங்கட் said...

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..!!

மாதேவி said...

தீபத்திருநாள் வாழ்த்துகள்.

சிவா said...

எதார்த்தாமான பதிவு.... தீபாவளி வரும் நாளை தினமும் காலண்டர் முன்னாடி நின்று எண்ணிய நாட்கள் இன்னும் கண்ணில் நிழலாடுகிறது!!!

philosophy prabhakaran said...

உங்களது எழுத்துக்கள் எனது பழைய தீபாவளிகளை ஞாபகப்படுத்தின... இப்பொழுதெல்லாம் பட்டாசு பற்றியோ புதுத்துணி பற்றி நினைப்பதுகூட கிடையாது... அவையெல்லாம் அற்பமாகிவிட்டது...

Gopi Ramamoorthy said...

happy diwali

வெறும்பய said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

ஸ்ரீராம். said...

கவலைகள் தெரியாத வயதில் கொண்டாடிய நாட்களின் சுகம் இப்போது இருப்பதில்லை. டிவியின் ஆதிக்கம் வேறு...