அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, November 13, 2010

சிரிப்பு போலீஸும் சிக்கிய நானும்

எப்பவும் போலதான் அன்னிக்கும் எல்லார்கிட்டயும் பேசிகிட்டிருந்தேன். ஆனா பாருங்க, என் போன ஜன்மத்து சாபமோ என்னவோ, சிரிப்பு போலீஸ்கிட்ட பேசும்போது மட்டும் நம்ம ஊருக்கு வாங்கன்னு சொல்லிட்டேன். ஊரு பேரு தூத்துக்குடின்னும் சொல்லிட்டேன்.  யாராவது கூப்பிட மாட்டாங்களான்னு ஏங்கிக்கிட்டு இருந்தாரோ   என்னவோ, "ஆஹா, உடனே வர்றேன்"னு சொல்லிட்டாரு. "சரி கொஞ்சம் முன்னாடியே சொல்லிட்டு வாங்க"ன்னு வேற சொல்லியிருந்தேன். (முன்னாடியே தெரிஞ்சா "எஸ்" ஆகிடலாம்னுதான்,ஹிஹி!)

ஆனா  பாருங்க, சிங்கம் சிங்கிளா வரும், ஆனா, துன்பம்  சிங்கிளா வராது போலிருக்கு. அதான், கூடவே நம்ம இம்சையையும் கூட்டிகிட்டு வரேன்னாரு.  சரி வாங்கன்னுட்டேன். நமக்குத் தெரிந்த ஒருத்தர் துறைமுகத்துல வொர்க் பண்றாரு. அதுனால, பாஸ் வாங்கிகிட்டு உள்ள போனோம். ஒரு கப்பலைக் காமிச்சு, இதுதான் சரக்கு கப்பல்னு சொன்னேன். உடனே, "அந்தக் கப்பல் முழுக்க சரக்கு இருக்குமா?"ன்னு ஜொள்ளு விட்டுகிட்டே கேட்டாரு பாருங்க................என்னது, யாரு கேட்டாங்களா? சொல்லிடவா..........சொல்லட்டுமா..........வேணாம், விட்டுடுங்க, சொன்னா நம்ம போலிஸ் வருத்தப் படுவார். யோவ், அது இல்லையா, சரக்குன்னா   இறக்குமதியாகற பொருட்கள் அப்படின்னு விளக்கினேன்.

சிரிப்பு போலிஸ், இம்சை & பெசொவி.

ஒரு கப்பல் உள்ளார போய்ப் பாக்கனும்னு வேற கெஞ்சினாரு. சரின்னு  மரத்துண்டு  (WOODEN LOGS ) வர கப்பல் மேல போனோம். அங்க, போலீசப்  பாத்ததுமே அந்தக் கப்பல் கேப்டன் மிரண்டு போயிட்டாரு. யாரை வேணும்னாலும் உள்ள விடுவேன், இந்த ஆள மட்டும் விடவே மாட்டேன்னு முரண்டு பண்ணினாரு. அப்புறம் நம்ம பவர யூஸ் பண்ணி மேல கூட்டிகிட்டு போனேன். 

இம்சை(வலது ஓரம்) -  இரண்டு புத்தர்களுடன் (ஹிஹி!)

கப்பல் மேல் தளத்துல இருந்துதான் கப்பல  இயக்குவாங்க.  A/C செய்யப்பட்ட அந்த ரூமை காட்டி  "இந்த இடத்துக்குப் பேருதான் பிரிட்ஜ் (bridge)"ன்னேன். "ஓஹோ, ப்ரிஜ்ஜா, அதுதான் ஜில்லுனு இருக்கு" அப்படின்னாரு போலீஸ். bridge-க்கும் fridge-க்கும்  வித்தியாசம் தெரியாத போலிச அப்பத்தான் பாத்தேன்.
தான் வாங்கிய கப்பலின் மேல்தளத்தில் இம்சை அரசன்
(அப்படின்னு எழுதத் தான் ஆசை, ஆனா ஒரிஜினல் ஒனர் உதைக்க வருவாரே!) 
ஒரு வழியா ரெண்டு மூணு போட்டோ எடுத்ததுக்கு அப்புறம் கீழ வந்தோம். இம்சை என்னப் பார்த்து "இதுக்கு ஏன் சரக்குக் கப்பல்னு பேர் வச்சாங்கன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு. எப்பவுமே தண்ணில இருக்கு, ரொம்ப தள்ளாடுது, அதுனாலத்தானே?" அப்படின்னாரு.

மொத்ததுல நான் முழிச்ச முகமே சரியில்லை. (முதல்ல பெட்-ரூம்ல இருக்கற முகம் பாக்கற கண்ணாடிய மாத்தணும்-ஹிஹி).

86 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the firstu...

ப.செல்வக்குமார் said...

வடை வாங்குறதுல நான் தான் எப்பவுமே முதல் .!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/ப.செல்வக்குமார் said...

வடை வாங்குறதுல நான் தான் எப்பவுமே முதல் .!!
//

அசிங்கப்பட்டான் கோமாளி.

ப.செல்வக்குமார் said...

//அசிங்கப்பட்டான் கோமாளி.//

கிடையாது நான்தான் முதல்ல வந்து சொன்னேன் ., அவரு மாடுரேசன் போட்டதால வட போச்சு ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஒரு கப்பலைக் காமிச்சு, இதுதான் சரக்கு கப்பல்னு சொன்னேன்.//

அதெப்படி கப்பலைக் காமிச்சு, இதுதான் சரக்கு கப்பல்னு சொல்லலாம். சரக்கு கப்பலை காட்டித்தான சரக்கு கப்பல்ன்னு சொல்லணும். இது போங்காட்டம்..

Madhavan said...

//A/C செய்யப்பட்ட அந்த ரூமை காட்டி //

இதுதான் பாங்க் (வங்கி) ன்னு சொன்னீங்களா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மரத்துண்டு அப்டின்னா இங்கிலிஷ்ல Tree towel தான? யார ஏமாத்துறீங்க?

எஸ்.கே said...

நீங்களாவது முத்துக்குளிப்பதை பார்த்தீர்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ங்க, போலீசப் பாத்ததுமே அந்தக் கப்பல் கேப்டன் மிரண்டு போயிட்டாரு. //

அவரு கள்ளக் கடத்தல் பேர்வழியா இருக்கும்..

ப.செல்வக்குமார் said...

//bridge-க்கும் fridge-க்கும் வித்தியாசம் தெரியாத போலிச அப்பத்தான் பாத்தேன்./

நீங்க வேற , Assistant Commissioner (AC) இக்கும் Air Conditioner (AC) இக்குமே அவருக்கு வித்தியாசம் தெரியாது ..!!

ப.செல்வக்குமார் said...

//(முதல்ல பெட்-ரூம்ல இருக்கற முகம் பாக்கற கண்ணாடிய மாத்தணும்-ஹிஹி).//

முகம் பார்க்குற கண்ணாடி அப்படினா அது வந்து உங்க முகத்தைப் பார்த்துட்டு போகுமா ..?

மங்குனி அமைச்சர் said...

ஆனா பாருங்க, சிங்கம் சிங்கிளா வரும், ஆனா, துன்பம் சிங்கிளா வராது போலிருக்கு. அதான்,///

இது சூப்பர் சார்

Madhavan said...

//அவரு கள்ளக் கடத்தல் பேர்வழியா இருக்கும்..//

'கள்ளம்' -- தப்பான மேட்டர் (நெகடிவ்)
'கடத்தல்' -- இது கூட தப்புதான் (நெகடிவ்)

டபுள் நெகடிவ் = பாசிடிவ்
அப்ப அந்த கப்பல் காப்டன்
(சத்தியமா ரொம்ப ) நல்லவருதான்.

மங்குனி அமைச்சர் said...

bridge-க்கும் fridge-க்கும் வித்தியாசம் தெரியாத போலிச அப்பத்தான் பாத்தேன். ///

சிரிப்பு போலீசு சுத்த பைத்தியக்காரன் சார் , (bridge )பாலத்துக்கும், ( fridge ) குளிர்சாதனப்பெட்டிக்கும் வித்தியாசம் தெரியல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/மங்குனி அமைச்சர் said...

bridge-க்கும் fridge-க்கும் வித்தியாசம் தெரியாத போலிச அப்பத்தான் பாத்தேன். ///

சிரிப்பு போலீசு சுத்த பைத்தியக்காரன் சார் , (bridge )பாலத்துக்கும், ( fridge ) குளிர்சாதனப்பெட்டிக்கும் வித்தியாசம் தெரியல//
சுத்த பைத்தியக்காரன்னா குளிச்சிட்டு சுத்தமா இருப்பவனா?

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

நீங்களாவது முத்துக்குளிப்பதை பார்த்தீர்களா?///

இல்லை நம்ம ரமேச முத்துக்குளிக்க வச்சிருங்க .........(தக்காளி ஒழிந்தான் விரோதி )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைச்சர் said...

ஆனா பாருங்க, சிங்கம் சிங்கிளா வரும், ஆனா, துன்பம் சிங்கிளா வராது போலிருக்கு. அதான்,///

இது சூப்பர் சார்//

இருந்தாலும் ஒரு துன்பத்தை விட்டுட்டுதான் வந்தோம்(மங்க்குவை சொல்லலை)

Madhavan said...

//சுத்த பைத்தியக்காரன்னா குளிச்சிட்டு சுத்தமா இருப்பவனா?//

குளிச்சிட்டு சுத்தமா இருக்குற பைத்தியக்கார பய..

ப.செல்வக்குமார் said...

//குளிச்சிட்டு சுத்தமா இருக்குற பைத்தியக்கார பய..//

சுத்தமா குளிச்சிட்டு இருக்குறவன் யாரு ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// bridge-க்கும் fridge-க்கும் வித்தியாசம் தெரியாத போலிச அப்பத்தான் பாத்தேன். /////

அப்போ கமிசனர் விஜயகுமாருக்கும், நடிகர் விஜயகுமாருக்கும் கூட போலீஸ்காருக்கு வித்தியாசம் தெரியாதா? டிப்பார்ட்மென்ட்ல ப்ராப்ளம் வருமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/ப.செல்வக்குமார் said...

வடை வாங்குறதுல நான் தான் எப்பவுமே முதல் .!!
//

அசிங்கப்பட்டான் கோமாளி./////

அங்க உள்ள கிழி கிழின்னு கிழிச்சிருக்கு, இங்க போலீசு வடைக்கு சண்ட போடுறாரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// சரின்னு மரத்துண்டு (WOODEN LOGS ) வர கப்பல் மேல போனோம். ///

அப்படின்னா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அங்க, போலீசப் பாத்ததுமே அந்தக் கப்பல் கேப்டன் மிரண்டு போயிட்டாரு. யாரை வேணும்னாலும் உள்ள விடுவேன், இந்த ஆள மட்டும் விடவே மாட்டேன்னு முரண்டு பண்ணினாரு./////

ஏன் போலீஸ்காருக்கும் கப்பல் ஓட்டத் தெரியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அப்புறம் நம்ம பவர யூஸ் பண்ணி மேல கூட்டிகிட்டு போனேன்.///

எப்பிடி ஆற்காட்டாரு கிட்ட கடன்வாங்கியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சை என்னப் பார்த்து "இதுக்கு ஏன் சரக்குக் கப்பல்னு பேர் வச்சாங்கன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு. எப்பவுமே தண்ணில இருக்கு, ரொம்ப தள்ளாடுது, அதுனாலத்தானே?" அப்படின்னாரு.////

சரியாத்தானே சொல்லியிருக்காரு? உங்களுக்கு போறாம சார், இத்தனூண்டு பைய்யனுக்கு இம்புட்டு மூளையான்னு!

நாஞ்சில் பிரதாப்™ said...

அப்ப வாரமலர் அந்துமணி நீங்கதானா???? :)))

அடுத்த வெக்கஷன்ல நான் வந்து மீட் பண்றேன்...எங்கேயும் எஸ்ஸாடாதீங்க... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////யாராவது கூப்பிட மாட்டாங்களான்னு ஏங்கிக்கிட்டு இருந்தாரோ என்னவோ, "ஆஹா, உடனே வர்றேன்"னு சொல்லிட்டாரு. /////

ஓசி சோத்துக்காக 500 கிலோமீட்டரு போயி அசிங்கபட்டிருச்சு சிரிப்பு போலீசு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////யாராவது கூப்பிட மாட்டாங்களான்னு ஏங்கிக்கிட்டு இருந்தாரோ என்னவோ, "ஆஹா, உடனே வர்றேன்"னு சொல்லிட்டாரு. /////

ஓசி சோத்துக்காக 500 கிலோமீட்டரு போயி அசிங்கபட்டிருச்சு சிரிப்பு போலீசு!//
நமக்கு சோறுதான் முக்கியம். ஓசி சோறுக்கு சிங்கபூரே போயிட்டு வந்தாச்சு. தூத்துக்குடி என்ன ?

மாணவன் said...

"இதுக்கு ஏன் சரக்குக் கப்பல்னு பேர் வச்சாங்கன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு. எப்பவுமே தண்ணில இருக்கு, ரொம்ப தள்ளாடுது, அதுனாலத்தானே?" அப்படின்னாரு”

செம கலக்கல்...

அனுபவங்களை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

வெறும்பய said...

யாரவது இருக்கீங்களா...

மாதேவி said...

ப்ரிஜ்,சரக்குக் கப்பல், :)))

அருண் பிரசாத் said...

அட நானும் ரொம்ப நாளா கப்பல் பார்க்கனும்னு ஆசைபட்டுட்டு இருக்கேன்... உங்க அட்ரஸ் பிளீஸ்...

(தக்காளி... ஓனருக்கே தெரியாம இந்தமுறை கப்பலை விற்காமவிடுறது இல்லை)

இம்சைஅரசன் பாபு.. said...

//தான் வாங்கிய கப்பலின் மேல்தளத்தில் இம்சை அரசன்//
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது PSV

மோகன் குமார் said...

அல்லோ உங்களை பத்தி ரெண்டு தகவல் தெரிஞ்சுடுச்சு. ஒன்னு நீங்க தூத்துக்குடியில் இருக்கீங்க. ரெண்டாவது நீங்க ஒல்லியா இருக்கீங்க. இதை வச்சு உங்களை நான் தூத்துக்குடி வந்து கண்டு பிடிக்க போறேன். Be careful :))

philosophy prabhakaran said...

பெயர் சொல்ல தான் விருப்பமில்லை... முகம் காட்டவும் விருப்பமில்லையோ...

நாகராஜசோழன் MA said...

//மொத்ததுல நான் முழிச்ச முகமே சரியில்லை. (முதல்ல பெட்-ரூம்ல இருக்கற முகம் பாக்கற கண்ணாடிய மாத்தணும்-ஹிஹி). //

நீங்க பாவம்ங்க. ஒரு நாள் வந்தாலும் உங்களை ரொம்ப படுத்திட்டார் போலீஸ் கார்.

வெங்கட் said...

// அப்புறம் நம்ம பவர யூஸ் பண்ணி மேல
கூட்டிகிட்டு போனேன். //

என்னா பெரிய பவர்..??

" இவரை இப்ப உள்ளே விடலைன்னா..
நாளைல இருந்து உங்களுக்கு டிபன்.,
டீ இதல்லாம் வாங்கிட்டு வர மாட்டேன்"-னு
மிரட்டினீங்களா..?!!

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//சரின்னு மரத்துண்டு (WOODEN LOGS ) வர கப்பல் மேல போனோம்.//

அட ஒரு மரமண்டை
மரதுண்டு வர கப்பலை
பார்கிறதே!!

அனானி(நல்ல‌) said...

போட்டோவில தம்னெயிலை ரிமுவ் பண்ணுங்க பாஸ். EXIF data பற்றி அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

R.Gopi said...

//"இதுக்கு ஏன் சரக்குக் கப்பல்னு பேர் வச்சாங்கன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு. எப்பவுமே தண்ணில இருக்கு, ரொம்ப தள்ளாடுது, அதுனாலத்தானே?" அப்படின்னாரு//

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///அப்புறம் நம்ம பவர யூஸ் பண்ணி மேல கூட்டிகிட்டு போனேன்.///

எப்பிடி ஆற்காட்டாரு கிட்ட கடன்வாங்கியா?//

//மோகன் குமார் said...
அல்லோ உங்களை பத்தி ரெண்டு தகவல் தெரிஞ்சுடுச்சு. ஒன்னு நீங்க தூத்துக்குடியில் இருக்கீங்க. ரெண்டாவது நீங்க ஒல்லியா இருக்கீங்க. இதை வச்சு உங்களை நான் தூத்துக்குடி வந்து கண்டு பிடிக்க போறேன். Be careful :))//

*********

haa...haa...haa.... Juperuuuuuu....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Ramesh
//me the firstu...//

raittu.............

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ப.செல்வக்குமார் said...
வடை வாங்குறதுல நான் தான் எப்பவுமே முதல் .!!
//

வட போச்சே!
@ Ramesh
//அசிங்கப்பட்டான் கோமாளி.//

அட, இதெல்லாம் அவனுக்கு சாதாரணமப்பா...!

@ Selvaa
//மாடுரேசன் போட்டதால வட போச்சு ..!!
//
செல்வா, அப்பவும் கமெண்ட் போட்ட வரிசயில தான் வரும். முதல் கமெண்ட் ரமேஷ் தான் போட்டிருக்காரு.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ஒரு கப்பலைக் காமிச்சு, இதுதான் சரக்கு கப்பல்னு சொன்னேன்.//

அதெப்படி கப்பலைக் காமிச்சு, இதுதான் சரக்கு கப்பல்னு சொல்லலாம். சரக்கு கப்பலை காட்டித்தான சரக்கு கப்பல்ன்னு சொல்லணும். இது போங்காட்டம்..
//

:)
(இந்த மாதிரி நேரத்துல ஸ்மைலி தான் கை குடுக்குது)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Madhavan said...
//A/C செய்யப்பட்ட அந்த ரூமை காட்டி //

இதுதான் பாங்க் (வங்கி) ன்னு சொன்னீங்களா ?
//

ஆஹா..........நம்மகிட்டயேவா!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//எஸ்.கே said...
நீங்களாவது முத்துக்குளிப்பதை பார்த்தீர்களா?
//

hihi!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ப.செல்வக்குமார் said...
//bridge-க்கும் fridge-க்கும் வித்தியாசம் தெரியாத போலிச அப்பத்தான் பாத்தேன்./

நீங்க வேற , Assistant Commissioner (AC) இக்கும் Air Conditioner (AC) இக்குமே அவருக்கு வித்தியாசம் தெரியாது ..!//

அப்படி சொல்லு, செல்வா.

ஆமா, Air-Conditionerனா என்ன, காத்துக்கு கூடவா கண்டிஷன் போடுவாங்க?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ப.செல்வக்குமார் said...
//(முதல்ல பெட்-ரூம்ல இருக்கற முகம் பாக்கற கண்ணாடிய மாத்தணும்-ஹிஹி).//

முகம் பார்க்குற கண்ணாடி அப்படினா அது வந்து உங்க முகத்தைப் பார்த்துட்டு போகுமா ..//

அப்ப செல்வான்னா, போயிட்டு வான்னு அர்த்தமா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Madhavan said...
//அவரு கள்ளக் கடத்தல் பேர்வழியா இருக்கும்..//

'கள்ளம்' -- தப்பான மேட்டர் (நெகடிவ்)
'கடத்தல்' -- இது கூட தப்புதான் (நெகடிவ்)

டபுள் நெகடிவ் = பாசிடிவ்
அப்ப அந்த கப்பல் காப்டன்
(சத்தியமா ரொம்ப ) நல்லவருதான்.//

முடியல..........யப்பா, அந்த கொசு மருந்த அடிங்கப்பா!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// மங்குனி அமைச்சர் said...
ஆனா பாருங்க, சிங்கம் சிங்கிளா வரும், ஆனா, துன்பம் சிங்கிளா வராது போலிருக்கு. அதான்,///

இது சூப்பர் சார்
//

தேங்க்ஸ் பா!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//மங்குனி அமைச்சர் said...

சிரிப்பு போலீசு சுத்த பைத்தியக்காரன் சார் , (bridge )பாலத்துக்கும், ( fridge ) குளிர்சாதனப்பெட்டிக்கும் வித்தியாசம் தெரியல
//

இப்பவே கண்ணக் கட்டுதே.........!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சுத்த பைத்தியக்காரன்னா குளிச்சிட்டு சுத்தமா இருப்பவனா?//

//Madhavan said...
//சுத்த பைத்தியக்காரன்னா குளிச்சிட்டு சுத்தமா இருப்பவனா?//

குளிச்சிட்டு சுத்தமா இருக்குற பைத்தியக்கார பய.//

ஹலோ, கொசு மருந்து இன்னும் வரல.........!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/// bridge-க்கும் fridge-க்கும் வித்தியாசம் தெரியாத போலிச அப்பத்தான் பாத்தேன். /////

அப்போ கமிசனர் விஜயகுமாருக்கும், நடிகர் விஜயகுமாருக்கும் கூட போலீஸ்காருக்கு வித்தியாசம் தெரியாதா? டிப்பார்ட்மென்ட்ல ப்ராப்ளம் வருமே?
//

நானும் கேட்டேன், பன்னி! ரமேஷ் சொல்றான், "இது கூட தெரியாதா? நடிக்கிறவரு நடிகரு, கமிஷன் வாங்கறவரு கமிஷனரு" அப்படின்னு!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/// சரின்னு மரத்துண்டு (WOODEN LOGS ) வர கப்பல் மேல போனோம். ///

அப்படின்னா?
//

அதாவது பெரிய பெரிய மரத் துண்டுகள் (Wooden Logs) இறக்குமதிக்காக கொண்டு வர உதவும் கப்பல்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அங்க, போலீசப் பாத்ததுமே அந்தக் கப்பல் கேப்டன் மிரண்டு போயிட்டாரு. யாரை வேணும்னாலும் உள்ள விடுவேன், இந்த ஆள மட்டும் விடவே மாட்டேன்னு முரண்டு பண்ணினாரு./////

ஏன் போலீஸ்காருக்கும் கப்பல் ஓட்டத் தெரியுமா?
//

அதில்ல பன்னி, கேப்டனப் பார்த்து ரமேஷ் "ஏன் சார், நடுக் கடல்ல கப்பல் திடீர்னு நின்னுடுச்சுன்னா, கீழே இறங்கித் தள்ளிவிட ஆளுங்க இருக்காங்களா?"ன்னு ஒரு கேள்வி கேட்டான் பாருங்க, அதான்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///அப்புறம் நம்ம பவர யூஸ் பண்ணி மேல கூட்டிகிட்டு போனேன்.///

எப்பிடி ஆற்காட்டாரு கிட்ட கடன்வாங்கியா?
//

கிழிஞ்சுது, அவர் பேர சொன்ன, water Current-ஏ நின்னு போய்டாதா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////இம்சை என்னப் பார்த்து "இதுக்கு ஏன் சரக்குக் கப்பல்னு பேர் வச்சாங்கன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு. எப்பவுமே தண்ணில இருக்கு, ரொம்ப தள்ளாடுது, அதுனாலத்தானே?" அப்படின்னாரு.////

சரியாத்தானே சொல்லியிருக்காரு? உங்களுக்கு போறாம சார், இத்தனூண்டு பைய்யனுக்கு இம்புட்டு மூளையான்னு!
//

சரியா சொன்னீங்க, பன்னி! இப்ப நீங்க சொன்னத ஒரு கல்வெட்டுல எழுதி தஞ்சாவூர் கோவில் வாசல்ல வச்சுட்டீங்கன்னா, வருங்கால சந்ததிகளுக்கு உதவியா இருக்கும்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நாஞ்சில் பிரதாப்™ said...
அப்ப வாரமலர் அந்துமணி நீங்கதானா???? :)))

அடுத்த வெக்கஷன்ல நான் வந்து மீட் பண்றேன்...எங்கேயும் எஸ்ஸாடாதீங்க... :))//

வா, வா பிரதாப்பு, u r always welcome!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////யாராவது கூப்பிட மாட்டாங்களான்னு ஏங்கிக்கிட்டு இருந்தாரோ என்னவோ, "ஆஹா, உடனே வர்றேன்"னு சொல்லிட்டாரு. /////

ஓசி சோத்துக்காக 500 கிலோமீட்டரு போயி அசிங்கபட்டிருச்சு சிரிப்பு போலீசு!//
நமக்கு சோறுதான் முக்கியம். ஓசி சோறுக்கு சிங்கபூரே போயிட்டு வந்தாச்சு. தூத்துக்குடி என்ன ?
//

அப்போ அடுத்து துபாய் தானா? பி கேர்புல்! (நான் பன்னிய சொன்னேன்!)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//மாணவன் said..//

நன்றி, வருகைக்கும் தொடர்கைக்கும்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மணி விழா!
(ஹிஹி.............Comment NO. 60)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெறும்பய said...
யாரவது இருக்கீங்களா...
//

யாருப்பா அது, ஆளே இல்லாத நேரத்துல டீ ஆத்துனது?

@ மாதேவி

Thanks!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அருண் பிரசாத் said...
அட நானும் ரொம்ப நாளா கப்பல் பார்க்கனும்னு ஆசைபட்டுட்டு இருக்கேன்... உங்க அட்ரஸ் பிளீஸ்...//

இங்க கொடுத்திருக்கேன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//இம்சைஅரசன் பாபு.. said...
//தான் வாங்கிய கப்பலின் மேல்தளத்தில் இம்சை அரசன்//
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது PSV
//

அதுக்காக, என் பதிவ பாராட்டாம ஏன் போறீங்க?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//மோகன் குமார் said...
அல்லோ உங்களை பத்தி ரெண்டு தகவல் தெரிஞ்சுடுச்சு. ஒன்னு நீங்க தூத்துக்குடியில் இருக்கீங்க. ரெண்டாவது நீங்க ஒல்லியா இருக்கீங்க. இதை வச்சு உங்களை நான் தூத்துக்குடி வந்து கண்டு பிடிக்க போறேன். Be careful :))
//

அப்போ உங்களுக்கும் ஒரு பதிவு போட்டா போச்சு!
(இப்போ Be Careful! உங்களுக்குத்தான்)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//philosophy prabhakaran said...
பெயர் சொல்ல தான் விருப்பமில்லை... முகம் காட்டவும் விருப்பமில்லையோ...
//

திருஷ்டி படக் கூடாதில்ல? அதான், ஹிஹி!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நாகராஜசோழன் MA said...

நீங்க பாவம்ங்க. ஒரு நாள் வந்தாலும் உங்களை ரொம்ப படுத்திட்டார் போலீஸ் கார்.
//

ஒரு வார்த்தன்னாலும் திரு வார்த்த, அண்ணே!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@ரமேஷ்

//சரின்னு மரத்துண்டு (WOODEN LOGS ) வர கப்பல் மேல போனோம்.//

அட ஒரு மரமண்டை
மரதுண்டு வர கப்பலை
பார்கிறதே!!
//

எல்லாம் சகோதர பாசம்தான்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அனானி(நல்ல‌) said...
போட்டோவில தம்னெயிலை ரிமுவ் பண்ணுங்க பாஸ். EXIF data பற்றி அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
//

சாரி பாஸ், தெரியாது!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//R.Gopi said...

haa...haa...haa.... Juperuuuuuu....//

தேங்க்ஸ், தல!

TERROR-PANDIYAN(VAS) said...

71

TERROR-PANDIYAN(VAS) said...

72

TERROR-PANDIYAN(VAS) said...

73

TERROR-PANDIYAN(VAS) said...

73

TERROR-PANDIYAN(VAS) said...

74

TERROR-PANDIYAN(VAS) said...

30 + 45

TERROR-PANDIYAN(VAS) said...

@டெரர்

//30 + 45//

என்ன கொடுமைடா இது டெரர்... ஆள் இல்லாத கிரவுண்ட்ல கூட தப்பா தான் நம்பர் போடர... அது 30 + 46

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இந்த VAS-காரங்க தொல்ல தாங்கலப்பா............தப்பு தப்பா கணக்கு போட்டுக்கிட்டு!

TERROR-PANDIYAN(VAS) said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை

//இந்த VAS-காரங்க தொல்ல தாங்கலப்பா............தப்பு தப்பா கணக்கு போட்டுக்கிட்டு!//

தப்பா சொல்லாதிங்க தப்பு கணக்கு போட்டாலும் அது தப்புனு தப்பாம கண்டு பிடிச்சி சரியாக்கர டீம் நாங்க. நாங்க எல்லாம் ஒரு பொருள தவற விடுவோம் ஆனா அது தரை தொடரதுக்கு முன்னாடி தாங்கி பிடிப்போம்... நீங்க எல்லாம் சரி அப்படினு எழுத சொன்னா கூட தப்பாதான் எழுதுவிங்க...

(எவ்வளவு சமாளிக்க வேண்டி இருக்கு...)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// வெங்கட் said...

என்னா பெரிய பவர்..??

" இவரை இப்ப உள்ளே விடலைன்னா..
நாளைல இருந்து உங்களுக்கு டிபன்.,
டீ இதல்லாம் வாங்கிட்டு வர மாட்டேன்"-னு
மிரட்டினீங்களா..?!!
//

அதான் இல்ல.....................உள்ளே விடலைனா, வெங்கட்டோட பதிவுகளை எல்லாம் இ-மெயில் பண்ணிடுவீன்னு மிரட்டினேன்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

செமையா கலாய்ச்சியாச்சு போல

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வடை வாங்குறதுல நான் தான் எப்பவுமே முதல் .//
நாயர் கடையில சூட போட்ருக்காங்க..வாங்கி தர்றேன் வாங்கய்யா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கடைசியில சரக்கு என்னாச்சி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கடைசியில கப்பல் என்னாச்சி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கடைசியில நீங்க என்ன ஆனீங்க?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நீங்களாவது முத்துக்குளிப்பதை பார்த்தீர்களா//
இல்லை அவன் இன்னிக்கு குளிக்கவே இல்லையாம்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்
இப்படி மொத்தமா கேட்டா, நான் எதுக்கு பதில் சொல்றது?