அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, November 21, 2010

போட்டிக் கதைகள் - முடிவு

 நான் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்தபோது அது இந்த அளவுக்கு பதிவர்களை யோசிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. (பரிசுகள் என்னவென்று தெரிந்தபிறகும்) அனைவரும் திறம்பட யோசித்து அழகான சிந்திக்க வைக்கும்(?!) கதைகளை பின்னூட்டமாகவும், தங்கள் பதிவுகளிலும் போட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி!
சரி, இந்தக் கதைகளில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுக்கும் பொருட்டு பல பிரபல பதிவர்களை அணுகியபோது அனைவருமே தங்கள் திறமைக்கு இது பெரிய சவால் என்றும், தங்களால் முடியாது என்றும் சொல்லிவிட்டார்கள் ஆகவே, ..........................................................................உங்க எண்ணம் சரி, நானே நீதிபதியா இருந்து சிறந்த கதைகளை தேர்ந்தெடுக்க முடிவு செய்து விட்டேன். (எல்லாம் உங்க நேரம், இப்ப நொந்து என்ன பண்றது, கதை அனுப்பும்போது யோசிச்சிருக்கணும்?)


முதலில் கதைகளை விமரிசனம் செய்வோம். இருக்கறதுலேயே அதுதான் ரொம்ப ஈஸி) கதைகளை பின்னூட்டத்திலேயே படித்திருப்பீர்கள், ஸோ, நேரடியாக விமரிசனம்.

ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா)

//
ଦ,ନଫ, ଦମସଫ୍ ନଵକବକ୍ଷକଵବନସଦ ଦସ୍ଡ଼ ଦ ଫଗସଦଫଗ୍
ಸದ ಸಡ್ ದಸ್ ದ್ಸ್ಫ್ xz ಸಡ್ ಫ್ದಫ್ದ್ಸ ಸಡ್ ದ್ಫ್ಸ್ಫಾಸ್ದ್ಫ್
δσφα δσφ δσφμ σδφξδφσαφ ας
द्स्फ़ दस फ्ड्स फ्द्सफ अस्द्फ़
多少分的是
द्स्फ़ फ्द्स्फ़ सद

//


புரியாத விஷயங்களை புரியாத மொழியில் எழுதினால் எல்லாருக்கும் புரியாது என்ற உன்னத கருத்து இந்த கதையில் இருக்கிறது. இருந்தாலும், கதையின் தலைப்பு என்னவென்றே தெரியாததால் இந்தக் கதை நிராகரிக்கப் படுகிறது. (யோவ் ரமேஷு, அது எப்படி நிராகரிக்கலாம்னு ஏதாவது எழுதினே, வேணாம்.............விட்டுடு..........வலிக்குது!)

அனு

//
ஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃ (தலைப்பு)

ஃஃஃஃ ஃஃஃ ஃஃஃஃ ஃஃஃஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃஃ ஃஃஃஃ ஃஃஃ ஃஃஃஃஃஃஃ ஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃ ஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃ ஃஃ ஃஃஃஃ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃ ஃஃஃஃஃ (கதை)
//

ஆயுத எழுத்து வரக்கூடாது என்ற கண்டிஷன் போடும் முன்னால் வந்த கதை என்பதால், இதை அனுமதிக்கலாம். "ஆயுதம் என்பதே எழுத்தில் மட்டுமே இருக்கவேண்டும் வாழ்க்கையில் இருக்கக் கூடாது, யாரும் ஆயுதத்தைப் பயன்படுத்தாமல், ஆயுத எழுத்தை மட்டும் பயன்படுத்தினால் நல்லது" என்ற சீரிய கருத்தை(?!) வலியுறுத்தும் கதை.

நாகராஜசோழன் (MA )

//-----------------------------!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~+++++++++++++++++++++++========================//


என்ன அருமையான கதை. மைனஸ்களும்(-), ஆச்சரியங்களும்(!) அலைபாயும் எண்ணங்களும்(~)பாசிடிவ் எண்ணங்களும்(+) சமநிலையில்(=) இருக்கும்போது வெற்றி வந்து சேரும் என்ற ஒரு கருத்து உங்கள் கதையில் தெரிகிறது. வாழ்த்துகள்!

அருண் பிரசாத்

//                                                //

//ஹி ஷ ஹா ஷ் ஹ் ஸ்ரீ//

இவரோட ரெண்டு கதைகளும் சூப்பர்! முதல் கதை (அதாங்க ஒண்ணுமே இல்லாத கமெண்ட்) மவுனத்தின் உயர்வைப் பேசுகிறது.
இரண்டாவது கதை (அதாவது "ஹி ஷ ஹா ஷ் ஹ் ஸ்ரீ") ஹி ஹ் மற்றும் ஹா என்பது சிரிப்பையும், ஷ் என்பது மவுனத்தையும் குறிக்கும். ஸ்ரீ என்பது திரு அதாவது செல்வதைக் குறிக்கும். எனவே, நகைச்சுவை உணர்வோடு மவுனமாக இருந்தாலே போதும், செல்வம் வந்து சேரும் என்ற தத்துவத்தை இந்தக் கதை சொல்லாமல் சொல்கிறது.
ஆனால், இந்த இரண்டு கதைகளுக்குமே தலைப்பு இல்லாததால் வேதனையோடு ரிஜெக்ட் செய்கிறேன்.

மதுரை சரவணன் 

//விடிந்த்து...!

ungkal pilaakkil kathai elutha ninaiththu thamilil type seithen ungkal kandisan kettu ellaa eluththum aangkilaththil varukirathu ... ithu eppadi enru yosikkumpothu vidinthathu...//

இவர் தன்னுடைய கதை(?)யை தங்கலீஷில் எழுதியிருக்கிறார். நல்ல கதை.

சே. குமார்

//ஒரு இரவின் ஆரம்பமும் முடிவும் கதையில்..
good night... good morning//

இவர் ஆங்கிலத்தில் கதை எழுதியிருக்கிறார். சாரி, குமார்!

வெங்கட்

//இது " தமிழ் " கதை..!!
----------------------------------

Tamilazhagan-nu enaku oru friend. 
Avanai naanga sellamaa " Tamil " nu koopiduvom.

Tamil sinna vayasula kashtappattu padichchi 
ippa " Infosys " la nalla velaiyila irukkan..
avanukku kalyanam 2006-la aachchi.. 
ippa avanukku oru Daughter irukku
//

இவரும் தங்கலீஷில் எழுதியிருக்கிறார். வாழ்த்துகள். ஆனா, பாருங்க, தமிழ்க் கதை என்பதை தமிழின் கதை என்ற கோணத்தில் எழுதியிருந்தாலும், கதை முற்று பெறாமல் இருப்பது சற்று சோர்வைத் தருகிறது. அது போக, நடுவில் infosys என்று ஆங்கில வார்த்தை வந்துவிட்ட காரணத்தால் சாரி, வெங்கட்! யுவர் ஸ்டோரி ரிஜெக்டெட்.

எஸ்.கே.

//http://www.psychsuresh.50webs.com/psych1/PSV.html//

//(வாழ்க்கை) கணக்கு
----------------------------------------

1-1=0 
1/1=1
1X1=1
1+1=2
//

//தலைப்பு: தத்துவம்!

கதை இதோ!
http://lh4.ggpht.com/_jKnB5UbrDNk/TOT_NildlNI/AAAAAAAABAs/ePL4j5AF2J0/1.jpg

[im]http://lh4.ggpht.com/_jKnB5UbrDNk/TOT_NildlNI/AAAAAAAABAs/ePL4j5AF2J0/1.jpg[im]
//

ஒருவரே ரெண்டு கதைகள் எழுதக் கூடாது என்ற விதி நான் கொடுக்காததால், இவர் மூணு கதைகள் கொடுத்திருக்கிறார். முதல் மற்றும் மூன்றாம் கதைகள் நன்றாக இருந்தாலும், தமிழ் எழுத்துக்கள் வந்துவிட்டதால் வேதனையோடு அவற்றை ரிஜெக்ட் செய்கிறேன். இரண்டாவது கதையான வாழ்க்கைக் கணக்கு உண்மையில் ஒரு பின் நவீனத்துவக் கதை என்று ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். (ஒண்ணும் புரியலை!)

துமிழ்

//
போடா நாயே (தலைப்பு)
...................................................
கதை- போடா நாயே என்று திட்டி விட்டு சாவகாசமாக நடக்கத்தொடங்கினேன்.
நாடு இரவு நிசப்தத்தில் நான் சொன்னது மீண்டும் எதிரொலித்து என்னைத் திட்டியது.
திரும்பிப் பார்த்தேன் என்னிடம் திட்டு வாங்கிய நாய் நாக்கை தொங்கப்போட்டு நக்கலாகப் 
பார்த்தது..
//


இவரும் எஸ்.கே.க்குப் போட்டியாக பின் நவீனத்துவக் கதை எழுதியிருக்கிறார். ஆனா பாருங்க, தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தியதால், வேதனையோடு ரிஜெக்ட் செய்கிறேன்.

சௌந்தர்

//.//

அவனவன் புள்ளி வச்சா கோலமே போடற லெவெல்ல இருக்கும்போது இவரு ஒரே ஒரு புள்ளிய வச்சு அதுதான் கதை என்று சொல்லும்போது நம்ப முடியவில்லை. அது போக, தலைப்பு இல்லை, எனவே, சாரி, சௌந்தர்!

madhavan


இவரோட பதிவுல இருக்கற போட்டோவ மட்டும் பரிசீலனை பண்ணச் சொன்னார். அப்படி பார்த்தால், நல்ல கதையாக இருந்தாலும், தலைப்பு இல்லாததால், அது ரிஜெக்ட் செய்யப் படுகிறது.


LK 

//                           //

அருண் பிரசாத் போலவே இவரும் மவுனத்தின் மேன்மையை அழகாகச் சொல்லியிருக்கிறார். என்றாலும், தலைப்பு இல்லாததால் நிராகரிக்கப்படுகிறது.

R Gopi

//ஏக் காவ் மே ஏக் நரி...
அபி ஏ கஹானி சரி...

தலைவா.... நீங்க கேட்ட கதை ரெடி..

இந்த கதையை எங்க வேணும்னா போடுங்க....

இது பிடிக்கலேன்னா, இந்த டெர்ரர் கதையை படிங்க... இது புரிஞ்சா நீங்க புத்திசாலி... புரியலேன்னா நீங்க அதிர்ஷ்டசாலி...

!@$@$#%$^%%*&*(&()(*()*(&*&*^&%^&#%$#$^&*^(*&)(*))()*)(&*(&*^&#^&()*(((_)()*(&^%&^^#@#$%^&%%^^(&&)&^^*&*
//

இவரு ரெண்டு கதை எழுதியிருக்கிறார். அருமையான ஹிந்தி கதை. ஆனா தமிழ் எழுத்துக்கள் வந்துவிட்டது.அதனால ரிஜெக்டெட். ஆனா, இன்னொரு கதை அற்புதமான பின் நவீனத்துவக் கதை (கதை சுத்தமா புரியலை). வாழ்த்துகள்!

விமரிசனம் முடிஞ்சுடுச்சு. போட்டி முடிவுகளை அறிவிக்க வேண்டியதுதான். ஆனா பாருங்க, நான் அறிவிக்கறதுக்கும் முன்னாடியே என் ப்ளாகில அவங்க பேரோட கதை வந்துடுச்சு. ஸோ, எல்லாருக்கும் முதல் பரிசு (நான் ரிஜெக்ட் செய்த கதைகள் உள்பட).
வெறும் பரிசு அறிவிச்சா போதாது. ஆகையால் உங்கள் ஒவ்வொருவருக்கும் இத்தோடு ஒரு blank cheque.
என்ன பாக்குறீங்க? அமவுண்ட் மட்டும் இல்ல, கையெழுத்து கூட பில்-அப் பண்ணாம கொடுத்திருக்கேன். எவ்ளோ அமவுண்ட் வேணுமோ, அதை எழுதி கையெழுத்தும் நீங்களே போட்டுட்டு Bank of "CHEAT"oor போய் பணத்தை வாங்கிக்குங்க.
கங்ராஜுலேஷன்ஸ்!
பை தி வே, என்னோட இரண்டு சிறுகதைகள் (நான் கொடுத்த விதிகளின்படி) அடுத்த பதிவில்!


டிஸ்கி : ஒரு கவிதை போட்டி வைக்கலாமான்னு.............................................ஓகே, ஓகே, நோ பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ்!

57 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

R.Gopi said...

பரிசுக்கு நன்றி தல....

அடுத்து என்ன கவிதை போட்டியா?

நாங்க ரெடி... பரிசு கொடுக்க நீங்க ரெடியா?


உலகத் தமிழினம்
உன்னைத் தான் தொழுகிறது;
அதிசயமில்லை; உன் பேனாதானே
அவர்க்காக அழுகிறது!
உலக
உருண்டையில் -
ஒரு மூலையில் உள்ள
ஒரு தமிழனுக்கு -
ஜலதோஷம் என்றால் - உனக்குத்
தும்மல் வருகிறது; அவனுக்கு
சந்தோஷம் என்றால் - உனக்குத்
துள்ளல் வருகிறது!

இம்சைஅரசன் பாபு.. said...

என்னோட பேர் இதுல இல்லை என்பதால் நான் வெளி நடப்பு செய்கிறேன் .....

R.Gopi said...

அந்த கவிதைக்கு இல்லேன்னா, அட்லீஸ்ட் இதுக்காவது கொடுங்க... இதுவும் கமல் எழுதினதாம்... இதை வாலி, கமல் ரெண்டு பேரும் சொன்னாங்க....

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்

காமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட
நின்றவன் உதவிட வேண்டும்
சமயலின் போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்

மோதிக் கோபம் தீர்க்க வசதியாய்
பாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்
அதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும்
அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தயும்
மூளை மடிப்புக்கள் அதிகம் உள்ள
மேதாவிலாச மண்டையும் வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கெனச் சுதந்திரம் கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப் போனேன்

பொடி நடைபோட்டே இடை மெலியவெனக்
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்

மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்
எக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்போனேன்

வரவரப் புருஷ லட்சணம் உள்ளவர்
திருமணச் சந்தயில் மிகமிகக் குறைவு
வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ
அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலக்ஷமி நமோஸ்துதே

R.Gopi said...

அட்லீஸ்ட் இதுக்காவது ப்ளீஸ்... கமல் கஷ்டப்பட்டு எழுதினாராம்... வாலியே சொன்னார்...

*-*-*-*-*-*-*-*-*-*-

கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று
இயற்றத் துணியும்
அணி சேர்த்துக்கொள்.

Madhavan Srinivasagopalan said...

'வட போச்சே' இதான் என்னோட கதைக்கு தலைப்பு.... பரவாயில்லை.. எனது கதையை ரிஜெக்ட் செய்தமைக்கு வருத்தமில்லை, பிளான்க் செக்கை பார்த்த பின்னர்'

வெங்கட் said...

// அது போக, நடுவில் infosys என்று
ஆங்கில வார்த்தை வந்துவிட்ட காரணத்தால்
சாரி, வெங்கட்! யுவர் ஸ்டோரி ரிஜெக்டெட். //

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
Infosys என்பது ஆங்கில வார்த்தை அன்று..
அது ஒரு பெயர் சொல்..

பெயர்சொல்லை நாம் தமிழ் படுத்த முடியாது.
தமிழ் படுத்தவும் கூடாது.

நீங்க சொன்ன காரணத்தை பாத்தா

லண்டன்., அமெரிக்கா., ஆஸ்திரேலியா.,
ஒபாமா., ரிக்கி பாண்டிங்., டாம் க்ரூஸ்.,
பென்ஸ்., பெராரி., டொயோட்டோ.,
டைடானிக்., ஹாரி-பாட்டர்.,

இதையெல்லாம் கூட தமிழ்ல தான்
சொல்லணும் போல இருக்கே..!!

NaSo said...

என் கதையை புரிந்து கொண்டு அதை விமர்சனம் செய்து அதற்கு பரிசும் வழங்கிய உங்களுக்கு, எதிர்காலத்தில் நமது கட்சியின் சார்பில் மா செ பதவி வழங்கப்படுமென தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்.கே said...

பரிசு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பரிசு கொடுத்த தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அந்த பிளாங்க் செக் ரொம்ப பிளாங்கா இருக்கே.. உங்க கையெழுத்து கூட இல்லாம!!!

சௌந்தர் said...

சௌந்தர்

//.//

அவனவன் புள்ளி வச்சா கோலமே போடற லெவெல்ல இருக்கும்போது இவரு ஒரே ஒரு புள்ளிய வச்சு அதுதான் கதை என்று சொல்லும்போது நம்ப முடியவில்லை. அது போக, தலைப்பு இல்லை, எனவே, சாரி, சௌந்தர்!////

கோலம் போடுறது எல்லாம் எங்க வேலை இல்லை கல்யாணம் ஆனா உங்கள் வேலை....

ஜெயந்த் கிருஷ்ணா said...

எனக்கு ஒரே அழுகை அழுகையா வருது... நான் எழுதின பெரிய கதையை காணவில்லை... இந்தனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

கருடன் said...

இது அநியாயம், அக்குருமம்... அராஜகம்... எனக்கு ஏன் பரிசு வழங்கபடவில்லை?? போட்டியில் கலந்து கொண்டால் தான் பரிசு என்பது பிற்போக்கு கலாச்சாரம். இதில் நவீனத்துவம் தேவை.... :))

பெசொவி said...

//TERROR-PANDIYAN(VAS) said... 13
இது அநியாயம், அக்குருமம்... அராஜகம்... எனக்கு ஏன் பரிசு வழங்கபடவில்லை?? போட்டியில் கலந்து கொண்டால் தான் பரிசு என்பது பிற்போக்கு கலாச்சாரம். இதில் நவீனத்துவம் தேவை.... :))
//

அமைதி, அமைதி. டெரர் வேண்டுகோளுக்கிணங்க, இந்த செக் அவருக்கும் வழங்கப் படுகிறது.

பெசொவி said...

//R.Gopi said...//

தல, என்ன இப்படி கவிதை மழையா பொழிஞ்சு தள்ளிட்டீங்க?
கமலின் கவிதைக்கு பரிசு கொடுக்க நான் தகுதியானவன்தானா என்பதை எண்ணிப் பார்க்கின்ற அதே வேளையில் அவர் கவிஞன்தான் என்பதை ஏற்கெனவே வாலியும், வைரமுத்துவும் சொல்லிவிட்டபிறகு நான் சொல்வது கொஞ்சம் அதிகப் பிரசங்கம் ஆகி விடுமோவென்ற பயம் எனக்கு வருவதை நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால் இந்தக் கேள்வியே எழ வாய்ப்பிருக்காது, என்றாலும், நான் இன்னமும் கவிதைப் போட்டி வைக்க வில்லை என்பதையும் நீங்கள் கவனித்தால் உங்கள் கருத்தின் மீது எனக்கிருக்கும் மதிப்பு புரியும் என்றுதான் அறிவுள்ளவர்கள் கருதுவார்கள்.

அனு said...

//அமைதி, அமைதி. டெரர் வேண்டுகோளுக்கிணங்க, இந்த செக் அவருக்கும் வழங்கப் படுகிறது.//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவருடைய எழுதாத கதை என்னுடைய கதையை விட எந்த விதத்தில் சிறந்தது?? இது போங்குனி ஆட்டம்.

மேலும், இவ்வளவு லேட்டாக முடிவு அறிவிப்பது செல்லாது. இதை எதிர்த்து இன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 8 மணி வரை உண்ணாவிரதம் இருந்து என் எதிர்ப்பை காட்டயிருக்கிறேன்!!!

பெசொவி said...

@ Venkat

//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
Infosys என்பது ஆங்கில வார்த்தை அன்று..
அது ஒரு பெயர் சொல்..

பெயர்சொல்லை நாம் தமிழ் படுத்த முடியாது.
தமிழ் படுத்தவும் கூடாது.

நீங்க சொன்ன காரணத்தை பாத்தா

லண்டன்., அமெரிக்கா., ஆஸ்திரேலியா.,
ஒபாமா., ரிக்கி பாண்டிங்., டாம் க்ரூஸ்.,
பென்ஸ்., பெராரி., டொயோட்டோ.,
டைடானிக்., ஹாரி-பாட்டர்.,

இதையெல்லாம் கூட தமிழ்ல தான்
சொல்லணும் போல இருக்கே..!!
//

யப்பா............யாராவது இவருக்கு எடுத்துச் சொல்லுங்கப்பா.................
நடுவரின் தீர்ப்பே முடிவானது, எங்கும், என்றும், எப்போதும்!

கருடன் said...

@அனு

//இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவருடைய எழுதாத கதை என்னுடைய கதையை விட எந்த விதத்தில் சிறந்தது?? இது போங்குனி ஆட்டம்.//

எதிர் கட்சி தலைவியின் பேச்சில் பின்நவீனத்துவமும் பொறாமையும் தெரிகிறது.

//மேலும், இவ்வளவு லேட்டாக முடிவு அறிவிப்பது செல்லாது. இதை எதிர்த்து இன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 8 மணி வரை உண்ணாவிரதம் இருந்து என் எதிர்ப்பை காட்டயிருக்கிறேன்!!//

நன் உங்கள் உன்னா விரதத்தை புறக்கனிக்கிறேன். அதை முன்னிட்டு அந்த நேரத்தில் நான் கண்கள் இரண்டும் இருக்க மூடி கொள்வேன்... :))

வெங்கட் said...

// யாராவது இவருக்கு எடுத்துச் சொல்லுங்கப்பா.
நடுவரின் தீர்ப்பே முடிவானது, எங்கும், என்றும், எப்போதும்! //

ஒரு போட்டிக்கு மூணு பேர்
ஜட்ஜா இருந்தாங்களே..

அதுல நடுவுல இருக்கிறவர் ( நடுவர் )
தீர்ப்பு தான் முடிவானதா..??!!
அப்ப சைட் ஜட்ஜெல்லாம்
வேஸ்டுன்னு சொல்றீங்களா..?!!

அனு said...

//எதிர் கட்சி தலைவியின் பேச்சில் பின்நவீனத்துவமும் பொறாமையும் தெரிகிறது.//

எதிர் கட்சி தொண்டரின் பேச்சில் பயமும் பீதியும் தெரிகிறது. எங்கே ப்ளாங்க் செக் கையை விட்டு போய்விடுமோன்னு.. (@டெரர்: இதுக்கு போய் அழழாமா? கண்ணை தொடச்சுக்கோங்க..)

//நான் கண்கள் இரண்டும் இருக்க மூடி கொள்வேன்//

பூனை கண்ணை மூடிகிட்டா உலகம் ஒன்னும் இருண்டுறாது.. என்ன நடந்தாலும் என் போராட்டம் தொடரும்..

Madhavan Srinivasagopalan said...

//அப்ப சைட் ஜட்ஜெல்லாம்//

ரொம்பப் பேரு கூடுற ஹால்ல இன்-கேட், அவுட்-கேட் (எக்சிட்) ரெண்டு பக்கத்துல இருக்கும்....
இன்-கேட் பக்கமா (சைடு) இருக்கும் ஜட்ஜு -- இன்சைடரா ?
அவுட்-கேட் பக்கமா (சைடு) இருக்கும் ஜட்ஜு - அவுட்சைடரா ?
(நடுவுல இருக்கும் ஜட்ஜு -- நடுவர் .. ஒக்கே..)

கருடன் said...

@அனு

//எங்கே ப்ளாங்க் செக் கையை விட்டு போய்விடுமோன்னு.. //

செக் கையை விட்டு பேங்க் போனால் தான் பணம் வரும் என்ற விஷயம்கூட தெரியாத எதிர் கட்சி தலைவி நினைத்து நான் பரிதாபபடுகிறேன்... நான் அழரது உங்க அறியாமை நினைத்து... :))

//பூனை கண்ணை மூடிகிட்டா உலகம் ஒன்னும் இருண்டுறாது.. என்ன நடந்தாலும் என் போராட்டம் தொடரும்..//

பூனை கண்ண மூடினா இருளாது சூரியன் மூடினா இருளும்.. உங்க போராட்டம் நடக்கற நேரத்துல வெளிய வந்து பாருங்க புரியும்... :))

(என்ன அம்மா வீட்டுல போய் நல்லா சாப்டு வந்து தெம்பா சண்டை போடர மாதிரி இருக்கு.. :)) )

Madhavan Srinivasagopalan said...

Ref. Anu's Comment #21 //பூனை கண்ணை மூடிகிட்டா உலகம் ஒன்னும் இருண்டுறாது.. என்ன நடந்தாலும் என் போராட்டம் தொடரும்.. //

ஆமாம், அனு (தங்கச்சி / அக்காவ / ஆன்ட்டியா ) கூட கண்ண மூடிகிட்டு போராட்டம் செய்யுவாங்க..

பெசொவி said...

//அனு said... 16
//அமைதி, அமைதி. டெரர் வேண்டுகோளுக்கிணங்க, இந்த செக் அவருக்கும் வழங்கப் படுகிறது.//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவருடைய எழுதாத கதை என்னுடைய கதையை விட எந்த விதத்தில் சிறந்தது?? இது போங்குனி ஆட்டம். //

ஐயோ, தலைவி எதுக்கு இந்த சத்தம்?
உங்க கதையை நான் ரிஜெக்ட் செய்யவே இல்லையே!

பெசொவி said...

//வெறும்பய said... 10
எனக்கு ஒரே அழுகை அழுகையா வருது... நான் எழுதின பெரிய கதையை காணவில்லை... இந்தனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....
//

அப்ப ஒண்ணு செய்ங்க...............எங்கேயாவது கதையை காணாம அடிக்கற போட்டி இருந்தா, அதில பங்கு பெற முயற்சி செய்ங்க!

Madhavan Srinivasagopalan said...

//பூனை கண்ண மூடினா இருளாது சூரியன் மூடினா இருளும்.. உங்க போராட்டம் நடக்கற நேரத்துல வெளிய வந்து பாருங்க புரியும்... :))//

அட.. அமாம்.. சூரியனுக்கே டார்ச் லைட்டடிக்குற குரூப் ஆளுங்க தான..

அனு said...

//செக் கையை விட்டு பேங்க் போனால் தான் பணம் வரும் என்ற விஷயம்கூட தெரியாத எதிர் கட்சி தலைவி//

@டெரர்

ப்ளாங்க் செக்-க பேங்க்-ல போட்டாலும் பணம் கிடைக்காது-ன்னும், சூரியன் இருளாது-ன்னும் தெரியாத ஒரு குழந்தை கிட்டயா இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தேன்.. டெரர் கண்ணா, போப்பா..போய் அப்பாவ கூட்டிட்டு வா!!

(என்ன பண்ணுறது.. நம்ம ஊரு முருக்கும் அதிரசமும் பண்ற வேலை. யாரையாவது வம்புக்கு இழுக்காட்டி டைஜஸ்ட் ஆக மாட்டேன்னுது :) )

Madhavan Srinivasagopalan said...

//வெறும்பய said... 10
எனக்கு ஒரே அழுகை அழுகையா வருது... நான் எழுதின பெரிய கதையை காணவில்லை...
//

ஒருவேளை போலீசு தூக்கிக்கிட்டு ஓடிட்டாரோ ?
அவர இன்னைக்கு பூரா காணுமே ?

அனு said...

@Madhavan

//ஆமாம், அனு கூட கண்ண மூடிகிட்டு போராட்டம் செய்யுவாங்க//

அதுக்காக, இது ஒரு கண்மூடித்தனமான போராட்டம்னு நினைச்சிட கூடாது..

@பெ.சொ.வி

//ஐயோ, தலைவி எதுக்கு இந்த சத்தம்?//

எங்கள் கதைக்கு ஈக்வலா டெரர் (எழுதாத) கதைக்கும் பரிசு கொடுப்பது என் போன்ற பெரிய எழுத்தாளர்களை சோர்வடைய செய்யும்!!

Madhavan Srinivasagopalan said...

//என் போன்ற பெரிய எழுத்தாளர்களை //

ஃபான்ட்(Font) சைஸ சின்னது பண்ணிக்கங்க மேடம்..

// சோர்வடைய செய்யும்!! //

யாரங்கே.. மேடத்துக்கு தயிர்'சோறு' பார்சல்..

'பரிவை' சே.குமார் said...

பரிசுக்கு நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட பாவி. நீங்கெல்லாம் ஜட்ஜா. ஒரு கவிதை போட்டிக்கு அனுப்ப வேண்டியதை தெரியாம கதை போட்டிக்கு அனுப்பிட்டேன். அதை கதைன்னு நினைச்சு விமர்சனம் பண்றீங்களே. உங்களை எல்லாம் நம்பி கதை எழுதின பயலுகள...............

பெசொவி said...

@ Nagaraja Chozhan MA

//என் கதையை புரிந்து கொண்டு அதை விமர்சனம் செய்து அதற்கு பரிசும் வழங்கிய உங்களுக்கு, எதிர்காலத்தில் நமது கட்சியின் சார்பில் மா செ பதவி வழங்கப்படுமென தெரிவித்துக் கொள்கிறேன்.
//

பதவி கொடுக்கறீங்க, சரி! சம்பளத்துக்கு அதே செக்க திருப்பி குடுப்பீங்களோ? #டவுட்டு

பெசொவி said...

//இம்சைஅரசன் பாபு.. said...
என்னோட பேர் இதுல இல்லை என்பதால் நான் வெளி நடப்பு செய்கிறேன் .....
//

நீங்க போட்டிருந்தது பின்னூட்டம்னு நினைச்சேன், பாஸ், அது நீங்க எழுதியிருந்த கதையா? அதுனால என்ன, உங்களுக்கும் ஒரு பிளான்க் செக் எடுத்துக்குங்க!

பெசொவி said...

// Madhavan Srinivasagopalan said...
'வட போச்சே' இதான் என்னோட கதைக்கு தலைப்பு.... பரவாயில்லை.. எனது கதையை ரிஜெக்ட் செய்தமைக்கு வருத்தமில்லை, பிளான்க் செக்கை பார்த்த பின்னர்'
//
நம்ம கடைப் பக்கம் வந்துட்டு யாரும் வெறுங்கையோடு போகக் கூடாது. உங்களுக்கும் சேர்த்துத் தான் ப்ளாங்க் செக்

பெசொவி said...

//எஸ்.கே said...
பரிசு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பரிசு கொடுத்த தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அந்த பிளாங்க் செக் ரொம்ப பிளாங்கா இருக்கே.. உங்க கையெழுத்து கூட இல்லாம!!!
//

பேங்க் பேர் கூட போடாம இன்னொரு செக் இருக்கு, வாங்கிக்கிறீங்களா?

பெசொவி said...

//சௌந்தர் said...
சௌந்தர்

கோலம் போடுறது எல்லாம் எங்க வேலை இல்லை கல்யாணம் ஆனா உங்கள் வேலை....
//

ஓஹோ, இந்த தொல்லைல இருந்து தப்பிக்கத்தான் லிவிங் டுகெதர் இருக்குதோ!

பெசொவி said...

நன்றி ஸ்ரீராம் & Gopi Ramamurthy

பெசொவி said...

//நன் உங்கள் உன்னா விரதத்தை புறக்கனிக்கிறேன். அதை முன்னிட்டு அந்த நேரத்தில் நான் கண்கள் இரண்டும் இருக்க மூடி கொள்வேன்... :))
//

யோவ் உன் கமெண்டையே நான் கண்ணை மூடிக்கிட்டுதான் படிக்கணும் போலிருக்கு, வரிக்கு வரி, ஸ்பெல்லிங் மிஸ்டேக்!

பெசொவி said...

//வெங்கட் said...
ஒரு போட்டிக்கு மூணு பேர்
ஜட்ஜா இருந்தாங்களே..

அதுல நடுவுல இருக்கிறவர் ( நடுவர் )
தீர்ப்பு தான் முடிவானதா..??!!
அப்ப சைட் ஜட்ஜெல்லாம்
வேஸ்டுன்னு சொல்றீங்களா..?!!
//

இங்க நான் மட்டும்தான் நடுவர், இடதுவர், வலதுவர் எல்லாமே, புரியுதா?

பெசொவி said...

// Madhavan Srinivasagopalan said...
//அப்ப சைட் ஜட்ஜெல்லாம்//

ரொம்பப் பேரு கூடுற ஹால்ல இன்-கேட், அவுட்-கேட் (எக்சிட்) ரெண்டு பக்கத்துல இருக்கும்....
இன்-கேட் பக்கமா (சைடு) இருக்கும் ஜட்ஜு -- இன்சைடரா ?
அவுட்-கேட் பக்கமா (சைடு) இருக்கும் ஜட்ஜு - அவுட்சைடரா ?
(நடுவுல இருக்கும் ஜட்ஜு -- நடுவர் .. ஒக்கே..)
//

அப்போ, என்னதான் சொல்ல வர்றீங்க?

பெசொவி said...

//அனு said...
@Madhavan

//ஆமாம், அனு கூட கண்ண மூடிகிட்டு போராட்டம் செய்யுவாங்க//

அதுக்காக, இது ஒரு கண்மூடித்தனமான போராட்டம்னு நினைச்சிட கூடாது..//

கவித,கவித!

//பூனை கண்ணை மூடிகிட்டா உலகம் ஒன்னும் இருண்டுறாது.. என்ன நடந்தாலும் என் போராட்டம் தொடரும்..

//
போச்சு, டெரர போய்ப் பூனைன்னு சொல்லிட்டாங்க, இனிமே பூனைங்க கோவத்த எப்படி தாங்கிக்கப் போறாங்களோ?

பெசொவி said...

@ Anu

//ப்ளாங்க் செக்-க பேங்க்-ல போட்டாலும் பணம் கிடைக்காது-ன்னும், சூரியன் இருளாது-ன்னும் தெரியாத ஒரு குழந்தை கிட்டயா இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தேன்.. டெரர் கண்ணா, போப்பா..போய் அப்பாவ கூட்டிட்டு வா!//

அதுக்குள்ளயா பேங்க் போயிட்டு வந்துட்டீங்க, தலைவி ஸ்பீட் யாருக்கு வரும்?

வெங்கட் said...

@ அனு.,

// பூனை கண்ணை மூடிகிட்டா உலகம்
ஒன்னும் இருண்டுறாது.. //

இந்த எலிங்க தொல்லை தாங்கலைப்பா..
புலியை பாத்தாலும் " ஐயோ..
பெரிய பூனைன்னு..!! " ஒரே சவுண்ட்...

வெங்கட் said...

@ அனு.,

// எங்கள் கதைக்கு ஈக்வலா டெரர் (எழுதாத)
கதைக்கும் பரிசு கொடுப்பது என் போன்ற
பெரிய எழுத்தாளர்களை சோர்வடைய செய்யும்!! //

கதையின் மைய கருத்தை பாத்து தான்
பரிசு தரப்படணுமே தவிர
பெரிய எழுத்தாளரா ., சிறிய எழுதாளரான்னு
பாத்து தரக்கூடாது..

டெரர் (எழுதாத) கதையின் மூலமா
இந்த வாழ்க்கை என்பதே ஒரு மாயை.,
அது ஒண்ணுமே இல்லாத ஒரு வெறுமைன்னு
ஒரு உயர்ந்த கருத்தை வலியுருத்தி இருக்கார்..

இந்த கதையை விடவா. உங்க கதை சிறந்தது..??

கருடன் said...

@அனு

//ப்ளாங்க் செக்-க பேங்க்-ல போட்டாலும் பணம் கிடைக்காது-ன்னும், சூரியன் இருளாது-ன்னும் தெரியாத ஒரு குழந்தை கிட்டயா இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தேன்.. டெரர் கண்ணா, போப்பா..போய் அப்பாவ கூட்டிட்டு வா!!//

புரியுது புரியுது.. ப்ளாங்க் செக்க அப்படியே பேங்க்ல கொடுத்து திட்டு வாங்கிட்டு வந்த உங்க சோகம் புரியுது... நாங்க ஒரு வார்த்தை சொன்னா சூரியன் மட்டும் இல்லை சுனாமி கூட சுருண்டு படுக்கும்... :))

கருடன் said...

@பெ.சொ.வி

//யோவ் உன் கமெண்டையே நான் கண்ணை மூடிக்கிட்டுதான் படிக்கணும் போலிருக்கு, வரிக்கு வரி, ஸ்பெல்லிங் மிஸ்டேக்!//

னீங்க கன்ன மூடிட்டு பாடிங்க ஈல்லை பீளாஅக் மூடீட்டு படீங்க. அது ஊங்க ஈஷ்டாம்...

இப்பொ சரியா இருக்கா??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

(0) (0)
/ \
---
-

(இது ஒரு பின்நவீனத்துவக் கதை!)

கருடன் said...

50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//அனு said...
@Madhavan

//ஆமாம், அனு கூட கண்ண மூடிகிட்டு போராட்டம் செய்யுவாங்க//

அதுக்காக, இது ஒரு கண்மூடித்தனமான போராட்டம்னு நினைச்சிட கூடாது..//

கவித,கவித!

//பூனை கண்ணை மூடிகிட்டா உலகம் ஒன்னும் இருண்டுறாது.. என்ன நடந்தாலும் என் போராட்டம் தொடரும்..

//
போச்சு, டெரர போய்ப் பூனைன்னு சொல்லிட்டாங்க, இனிமே பூனைங்க கோவத்த எப்படி தாங்கிக்கப் போறாங்களோ?/////

அய்யய்யோ அப்போ புனைவு எல்லோருக்கும் புரிஞ்சுடும் போல இருக்கே?

கருடன் said...

@பன்னிகுட்டி

//(இது ஒரு பின்நவீனத்துவக் கதை!)//

மச்சி வந்துட்டியா!!ஒரு காலத்துல இந்த ப்ளாக்கர்... மாட்ரேஷ்ன் போட்டு அட்டகாசம் பண்ணாரு. நான் எல்லாம் இந்த பக்காம் வரவே மாட்டேன்... இப்பொ இந்த ப்ளாக்கும் நம் கும்மி சாம்ராஜ்யத்தில் இனைந்தது... ஹா..ஹா.ஹா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//(இது ஒரு பின்நவீனத்துவக் கதை!)//

மச்சி வந்துட்டியா!!ஒரு காலத்துல இந்த ப்ளாக்கர்... மாட்ரேஷ்ன் போட்டு அட்டகாசம் பண்ணாரு. நான் எல்லாம் இந்த பக்காம் வரவே மாட்டேன்... இப்பொ இந்த ப்ளாக்கும் நம் கும்மி சாம்ராஜ்யத்தில் இனைந்தது... ஹா..ஹா.ஹா..////


யாருகிட்டே, நம்மலாம் டாகுடரு விஜய்கிட்டே டிரெய்னிங்க் எடுத்தவிங்கள்ல? ஷட்டரப் போட்டு மூடினாலும், வெல்டிங்க் பண்ணி கமென்ட் போடடுவோம்ல!

கருடன் said...

@பன்னிகுட்டி

//யாருகிட்டே, நம்மலாம் டாகுடரு விஜய்கிட்டே டிரெய்னிங்க் எடுத்தவிங்கள்ல? ஷட்டரப் போட்டு மூடினாலும், வெல்டிங்க் பண்ணி கமென்ட் போடடுவோம்ல!//

மச்சி வர வர கமெண்ட்ல எல்லாம் கலக்கறிங்க.. :))).

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//யாருகிட்டே, நம்மலாம் டாகுடரு விஜய்கிட்டே டிரெய்னிங்க் எடுத்தவிங்கள்ல? ஷட்டரப் போட்டு மூடினாலும், வெல்டிங்க் பண்ணி கமென்ட் போடடுவோம்ல!//

மச்சி வர வர கமெண்ட்ல எல்லாம் கலக்கறிங்க.. :))).///

இதுக்கு நீ கெட்ட வார்த்தைலேயே திட்டி இருக்கலாம்! வரவர கமென்ட்லேயே புனைவு போடுவானுங்க போல இருக்கு!

R.Gopi said...

// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//R.Gopi said...//

தல, என்ன இப்படி கவிதை மழையா பொழிஞ்சு தள்ளிட்டீங்க?
கமலின் கவிதைக்கு பரிசு கொடுக்க நான் தகுதியானவன்தானா என்பதை எண்ணிப் பார்க்கின்ற அதே வேளையில் அவர் கவிஞன்தான் என்பதை ஏற்கெனவே வாலியும், வைரமுத்துவும் சொல்லிவிட்டபிறகு நான் சொல்வது கொஞ்சம் அதிகப் பிரசங்கம் ஆகி விடுமோவென்ற பயம் எனக்கு வருவதை நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால் இந்தக் கேள்வியே எழ வாய்ப்பிருக்காது, என்றாலும், நான் இன்னமும் கவிதைப் போட்டி வைக்க வில்லை என்பதையும் நீங்கள் கவனித்தால் உங்கள் கருத்தின் மீது எனக்கிருக்கும் மதிப்பு புரியும் என்றுதான் //

********

தலைவா...

நீங்கள் சொல்வது புரிந்தால் நாங்கள் புத்திசாலி... புரியவில்லை என்றால் நாங்கள் அதிர்ஷ்டசாலி....

பெசொவி said...

//வெங்கட் said... 45
@ அனு.,

// பூனை கண்ணை மூடிகிட்டா உலகம்
ஒன்னும் இருண்டுறாது.. //

இந்த எலிங்க தொல்லை தாங்கலைப்பா..
புலியை பாத்தாலும் " ஐயோ..
பெரிய பூனைன்னு..!! " ஒரே சவுண்ட்...
//
அது எப்படி, எலிபன்ட்ல பாதி மட்டும் பாத்துட்டு எலின்னு நினைக்கறீங்களே, அது மாதிரியா?

கருடன் said...

@பெ.சொ.வி

//அது எப்படி, எலிபன்ட்ல பாதி மட்டும் பாத்துட்டு எலின்னு நினைக்கறீங்களே, அது மாதிரியா?//

பெருச்சாளிக்கு இங்லிஷ்ல எலிபன்ட் இல்லைனு எத்தைவாட்டு சொல்லி இருக்கேன்... :))

செல்வா said...

என் கதைக்குப் பரிசே கொடுக்கப்படவில்லை .,
இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் ..!!
மேலும் இந்தப் போட்டி நடத்திய PSV இக்கு தக்க தண்டனை வளகவேண்டும் .!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
என் கதைக்குப் பரிசே கொடுக்கப்படவில்லை .,
இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் ..!!
மேலும் இந்தப் போட்டி நடத்திய PSV இக்கு தக்க தண்டனை வளகவேண்டும் .!!/////

என்ன பண்ணலாம்? அம்மிக்கல்லுல வெச்சித் தேச்சிடலாமா?