அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, November 29, 2010

தமிழ்மணம் டாப் 20 - ஒரு அலசல்

வர வர நம்ம பதிவர்கள் ஒழுங்கா எழுதுறாங்களா இல்லையான்னே தெரியல.

பாருங்க, நம்ம தமிழ்மணம் வாராவாரம் டாப் 20 பட்டியல் வெளியிடறது உங்களுக்கே தெரியும்.

அதில முதல் வாரத்துல நம்ம கோகுலத்தில் சூரியன் எட்டாவது இடத்துல இருந்தாரு. போன வாரம் முதல் இருபது இடத்துலேயே இல்ல. இந்த வாரம் பதினஞ்சாவது இடத்துல 
இருக்காரு.

நம்ம மங்குனி அமைச்சர் முதல் வாரம் இரண்டாவது இடத்துல இருந்தார். போன வாரம் எட்டாவது இடத்துக்கு போனார். இந்த வாரம் முதல் இருபது லிஸ்ட்ல இல்ல.

இப்ப புதுசா நம்ம ரமேஷ் புதுசா பதினாலாவது இடத்துல இருக்காரு.

ஆனா, நானு எப்பவுமே ஒரே மாதிரிதான் எழுதுவேன். அதுனாலதான், பாருங்க, நான் இருபத்தொன்னாவது இடத்துல இருக்கேன். அது மட்டுமில்ல, ஒருவேளை, தமிழ்மணம் முதல் ஐம்பது இடம் லிஸ்ட் போட்டா, நான் அம்பதொன்னாவது இடத்துல இருப்பேன். இருந்தா அந்த மாதிரி மெயின்டெயின் பண்ணனும். 

என்ன, நான் சொல்றது சரிதானே?

டிஸ்கி : இந்த "பொறாமை", "வயித்தெரிச்சல்" அப்படின்னுலாம்  சொல்றாங்களே, அப்படின்னா என்னாப்பா?

31 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

எஸ்.கே said...

ஆஹா!
நீங்களும் முன்னேற வாழ்த்துக்கள்!

TERROR-PANDIYAN(VAS) said...

அலசினது போதும் காய போடுங்க...

எஸ்.கே said...

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் உங்கள் திறமை மேலும் சிறக்கும்!

எஸ்.கே said...

//அலசினது போதும் காய போடுங்க...
//
எங்க போனாலும் சின்சியரா ஆலோசனை சொல்றது டெரர் அவர்கள்தான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னா ஒரு வில்லத்தனம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
அலசினது போதும் காய போடுங்க...///

எத?

Arun Prasath said...

அட சூப்பர் பா

KANA VARO said...

கலக்கல் பதிவு

வார்த்தை said...

#$#%^*^(*)#$%!

மங்குனி அமைச்சர் said...

டிஸ்கி : இந்த "பொறாமை", "வயித்தெரிச்சல்" அப்படின்னுலாம் சொல்றாங்களே, அப்படின்னா என்னாப்பா?///

தலைவா அதெல்லாம் இங்க சரவணா பவன்ல குடுக்குற சைடிஸ்

துமிழ் said...

டிஸ்கி : இந்த "பொறாமை", "வயித்தெரிச்சல்" அப்படின்னுலாம் சொல்றாங்களே, அப்படின்னா என்னாப்பா?///
//
athellaam summa

நாகராஜசோழன் MA said...

பாஸ் நாமெல்லாம் ஒரே இனம். எப்பவுமே நமக்கு இந்த புகழ்ச்சி பிடிக்காது.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விடுங்க பாஸ் இவங்கல்லாம் எப்பவும் இப்படித்தான் அடிச்சிகிட்டே இருப்பாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரிங்க சார் பதிவு எங்க? புது பதிவுன்னு போன் பண்ணி சொன்னீங்க

அருண் பிரசாத் said...

அப்போ நான் எத்தனையாவது இடம்

philosophy prabhakaran said...

ஹி... ஹி... ஹி... ஒரே ஒரு வாரம் மட்டும் ஐந்து அல்லது ஆறு பதிவு போட்டு பாருங்கள் நிச்சயம் நீங்கள் இருபதுக்குள் வந்துவிடுவீர்கள்...

Chitra said...

டிஸ்கி : இந்த "பொறாமை", "வயித்தெரிச்சல்" அப்படின்னுலாம் சொல்றாங்களே, அப்படின்னா என்னாப்பா?

....நீங்க ரொம்ப நல்லவரு!!! :-)

Gopi Ramamoorthy said...

:)

வெங்கட் said...

// இந்த "பொறாமை", "வயித்தெரிச்சல்"
அப்படின்னுலாம் சொல்றாங்களே,
அப்படின்னா என்னாப்பா? //

அது ஒண்ணும் இல்லைங்க..,
தண்ணி தாகத்தை தான் அப்படி
சொல்றாங்க..

நீங்க வேணா Gelusil-ன்னு
ஒரு கூல் டிரிங்க் இருக்கு..
அதை தினமும் ஒரு பாட்டில்
இல்ல இல்ல
ஒரு வேளைக்கு ஒரு பாட்டில்
குடிச்சிட்டு வாங்க..

சரியா போயிடும்..!!

( நாமளே மாரியாத்தா கிட்ட வேண்டுதல்
வெச்சி ஒரு இடம் புடிச்சோம்..
அதையும் கண்ணு வெக்கறாங்களே.. )

வெங்கட் said...

@ பிரபாகரன்.,

// ஒரே ஒரு வாரம் மட்டும் ஐந்து
அல்லது ஆறு பதிவு போட்டு பாருங்கள்
நிச்சயம் நீங்கள் இருபதுக்குள் வந்துவிடுவீர்கள்...//

அது அப்படி இல்ல..

நான் எப்பவும் வாரம் ரெண்டு பதிவு
தான் போடுவேன்.. ஆனா நான்
ரெண்டு தடவை Top 20-ல வந்து
இருக்கேனே..!!

அதுக்கு ஒரு Formula இருக்கு..
அது எனக்கு தெரியும்..!!

இம்சைஅரசன் பாபு.. said...

போஸ்ட் எங்க PSV லென்ஸ் வைச்சு பார்த்தாச்சு கண்ணு தெரிய மாட்டுது ..............ஒரு வேலை என் கண்ணு நொள்ள கண் அகிடுச்சோ...............வர pSV க்கு காமெடி அளவே இல்லாம போய்டுச்சு ...........

நாஞ்சில் பிரதாப்™ said...

இப்படி ஒண்ணு இருக்கறதே இப்பத்தான் தெரியும் இதைல்லாம் பார்கறதேயில்லை...

சிவா என்கிற சிவராம்குமார் said...

என்ன ஒரு திறமை!!! உங்கள் திறமை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ;-)

நாஞ்சில் பிரதாப்™ said...
This comment has been removed by the author.
நசரேயன் said...

//"பொறாமை", "வயித்தெரிச்சல்" அப்படின்னுலாம் சொல்றாங்களே, அப்படின்னா என்னாப்பா?//

தெரியலையே

சௌந்தர் said...

டிஸ்கி : இந்த "பொறாமை", "வயித்தெரிச்சல்" அப்படின்னுலாம் சொல்றாங்களே, அப்படின்னா என்னாப்பா?////

எனக்கும் இதே சந்தேகம் தான் ஆமா ஹி ஹி ஹி

Madhavan Srinivasagopalan said...

அட. அது வேறையா ?
போங்கப்பு.. போய் பொலப்ப பாருங்கப்பு..

Madhavan Srinivasagopalan said...

//Venkat said அதுக்கு ஒரு Formula இருக்கு..
அது எனக்கு தெரியும்..!!//

'formula ' அவருதான் தமிழ்மனத்த நடத்தறாரா ?

ப.செல்வக்குமார் said...

என்னோட இடத்த எப்படி பாக்குறது .>

R.Gopi said...

நான் தமிழ்மணம் பக்கமே போகவில்லை..... ஸோ, நோ ஐடியா.

உங்களுக்கு ஒரு ஈசி கேள்வி...

இந்த "பொறாமை", "வயித்தெரிச்சல்" அப்படின்னுலாம் சொல்றாங்களே, அப்படின்னா என்னங்க?

ஸ்ரீராம். said...

தமிழ் மணத்துக்கும் நமக்கும் ஏழாம் இல்லை இல்லை எட்டாம் பொருத்தம்...!