அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, October 9, 2010

எந்திரன் - விமரிசனம்

அநேகமாக எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதான்.

முதல் பாதி ஆட்டம் பாட்டம், கொண்டாட்டமாக சென்றாலும், இரண்டாம் பகுதி கொஞ்சம் சண்டை, சச்சரவு, எதிர்பார்ப்பு, ஏமாற்றங்களுடன் கொஞ்சம் திகிலாகத் தான் இருக்கிறது.

அதிலும் பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று கூட தெரியாமல், தன்னுடைய வேலையிலேயே மூழ்கிப் போவது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது.

காலையில் எழுந்து அவசர அவசரமாக ஷேவிங் கூட செய்ய நேரமில்லாமல், மனைவி எடுத்து வைக்கும் டிபனை விழுங்கிவிட்டு, குழந்தைகளை கொண்டுபோய் ஸ்கூலில் விட்டுவிட்டு அப்புறம் ஆபீஸ் போய், அப்பா..........................வேறு எதையும் நினைக்கக் கூட நேரமில்லாமல், இந்த அவசர கதியில் பக்கத்துக்கு வீட்டுக் காரர் என்ன, சொந்த வீட்டுக் காரங்களைக் கூட கவனிக்க முடியாது தானே!

இந்த அவஸ்தைக்கு காரணம் என்ன? வாழ்க்கை எந்திர மயமாகி விட்டது. பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் ஆகிவிட்டதால், ஒவ்வொரு மனிதனும் எந்திரன் ஆகிவிட்டான்.

அந்த எந்திரன் என்று மனிதனாகவே இருக்கிறானோ, அன்றுதான் மனித வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என்று நினைக்கிறேன். சரிதானே?

டிஸ்கி : இன்றைய சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் எந்திரன்தான். ஆகையால் நம்மைப் பற்றித் தான் இந்த விமரிசனம். முதல் பாதி என்று சொன்னது, இருபது வயது வரை நாம் வாழும் வாழ்க்கை.

13 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ப.செல்வக்குமார் said...

உண்மைலேயே சின்ன விமர்சனம் ,, படிச்சிட்டு வரேன் ..

ப.செல்வக்குமார் said...

//அந்த எந்திரன் என்று மனிதனாகவே இருக்கிறானோ, அன்றுதான் மனித வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என்று நினைக்கிறேன். சரிதானே?//

இப்படியெல்லாம் ஏமாத்தி விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா ..
ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு ..

இம்சைஅரசன் பாபு.. said...

நீங்கள் எழுதியது உண்மை .இதை பற்றி நான் ஒரு பதிவு எழுதி இருக்கேன் கூடிய சீக்கிரம் வெளிடுவேன்

Madhavan said...

மூன்றாவது பாரா படிக்கும் போதே என்னால், சரியாக ஊகிக்க முடிந்தது, நீங்கள் சொல்ல நினைத்தது..
ஊகத்திற்கு காரணம்.. எல்லாம் உங்களோட பிலாக்க படிச்சுக்கிட்டு வர்ற அனுபவம்தான்..

எங்க ஊட்டாண்ட வர்ரத நிறுத்திட்டீங்களா?

TERROR-PANDIYAN(VAS) said...

மிக அருமையான விஷயம்.

(@செல்வா

அழாத விடு... என்னை மாதிரி பதிவ படிச்ச மாதிரியே கமெண்ட் போட்டு எஸ்கேப் ஆகிடு... :) )

ஸ்ரீராம். said...

எந்திரன் என்று தந்திரமாக எழுதிய பதிவால் நொந்து போன வந்து போனவன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தல பாப்கார்ன் எங்க கிடைக்கும்

அருண் பிரசாத் said...

ரைட்டு! நானும் எந்திரன்தான்

மேஏஏஏஏஏஏஏஎ........

Chitra said...

மனிதனின் பொய், பொறாமை, வஞ்சம், துரோகம் தெரியாமல் இருப்பதும் எந்திர வாழ்க்கையா? ஹி,ஹி,ஹி,ஹி....

வெங்கட் said...

Today me எந்திரன் Going.
Writting comment after Seeing.
OK.?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இந்தப் பதிவுக்கு கமெண்ட் போட்டவங்களுக்கும், இன்ட்லில வோட்டு போட்டு பிரபலப்படுத்தியவங்களுக்கும் நன்றி!

ஆகாயமனிதன்.. said...

டாப்பு கலண்ட பிறகும்...
டாப் டென்னில்...முதல் பத்து இடமும்...கலாவுக்கே....

shortfilmindia.com said...

அஹா..

cablesankar