அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, October 10, 2010

பதிவர் ஜோக்ஸ்!

"அந்த பதிவரின் கல்யாணத்துக்கு யாருமே வரலையாமே! ஏன்?"


"அவர் கல்யாண பத்திரிக்கையில எல்லா விவரமும் எழுதிட்டு, பழக்க தோஷத்துல, இது வெறும் புனைவுதான்னு டிஸ்கி போட்டுட்டாராம்"

******
பதிவரும் அவர் பையனோட ஆசிரியரும் சந்தித்தால்?


"சார், நீங்க பதிவரா இருக்கலாம், அதுக்காக உங்க பையனை இப்படியா வளர்க்கறது?"
"ஏன் சார், என்ன ஆச்சு?"
"ஏன்டா பக்கத்துல இருக்கறவனை அடிச்சேன்னு கேட்டா அவன்தான் சார் முதல்ல அடிச்சான், என்னோடது ஒரு எதிர்வினைங்கறான்!"

********

"சார், உங்க பையனை கொஞ்சம் கண்டிச்சு வைங்க"
"ஏன் சார், என்ன பிரச்சினை?"
"என்னடா ஒரு கூட்டம் சேர்த்து வம்பு பண்ணிகிட்டிருக்கீங்கன்னு கேட்டா, இவங்கல்லாம் என்னோட பாலோயர்ஸ் சார்ங்கறான்!"

*********

"சார்,உங்க பையன் பண்ற அலும்பு தாங்கலை!"
"கொஞ்சம் விவரமா சொல்லுங்க, சார்!"
"அக்பர் குறித்து கட்டுரை எழுதுன்னா, இங்கே விவரமா இருக்குதுன்னு, விக்கிபீடியா லிங்க் கொடுக்கறான்"

********

பதிவர் : "சார், என் பையனை அடிக்கறதா இருந்தா, முதுகில மட்டும் அடிங்க, சார்!"
ஆசிரியர் : "யாருமே முதுகில அடிக்காதீங்கன்னுதான் சொல்லுவாங்க, நீங்க ஏன் சார் அப்படி சொல்றீங்க?"
பதிவர் : உங்களோட "பின்"னூட்டங்கள்தான் அவனோட வளர்ச்சிக்கு ரொம்ப உதவும்"

*********

ஆசிரியர் : உங்க பையன் ரொம்ப தொந்தரவு, சார்!"
பதிவர் : ஏன் அப்படி சொல்றீங்க?
ஆசிரியர் : ஒரு கேள்விக்கு எழுதின பதிலையே அடுத்த கேள்விக்கும் எழுதிட்டான். ஏன்னு கேட்டா, "இது மீள்பதிவு சார்"ங்கறான்!"


*********


ஆசிரியர் : "சார், உங்க பையன் ரொம்ப வளர்ந்துட்டான்!"
பதிவர் : "எப்படி சொல்றீங்க?" 
ஆசிரியர் : "ஏன்டா கடைசி ரேங்க் வாங்கினேன்னு கேட்டா, "me the 50"னு சொல்லி சிரிக்கிறான்" 


************

30 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan said...

Me the first....
வடை எனக்குத்தான்.. இத விட்டீங்களே தலைவா..
---

//ஆசிரியர் : "சார், உங்க பையன் ரொம்ப வளர்ந்துட்டான்!"
பதிவர் : "எப்படி சொல்றீங்க?"
ஆசிரியர் : "ஏன்டா கடைசி ரேங்க் வாங்கினேன்னு கேட்டா, "me the 50"னு சொல்லி சிரிக்கிறான்" //


ஆசிரியர் : சார் உங்க பையன கண்டிச்சு வெய்யுங்க..
பதிவர் : ஏன் ?
ஆசிரியர்: தினமும் ஸ்கூலுக்கு மொதல்லேயே வருவானாம்.. அதனால 'ராங்க்' கார்டுல 'மீ, தி பர்ஸ்டு'னு போட்டுத் தரணுமாம்.. ..

shortfilmindia.com said...

நல்லாருக்கு
கேபிள் சங்கர்

அனு said...

எல்லாமே அட்டகாசமா இருக்கு.. கடைசி ஜோக் தான் டாப்..

// "me the 50"னு சொல்லி சிரிக்கிறான்" //

நீங்க டெரரை வச்சு காமெடி கீமெடி பண்ணலயே??

அத்திரி said...

superbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb..............,,,,,,,,,,,,,,,,

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கலக்கலா இருக்கு தலைவரே

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Madhavan

அட இத மிஸ் பண்ணிட்டேனே!
அது சரி, நீங்க ஷாலினிய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Thanks Cable Shanakrji!

@ அனு

//நீங்க டெரரை வச்சு காமெடி கீமெடி பண்ணலயே??
//

என்ன தலைவி, இப்படி சொல்லிட்டீங்க? டெரர வச்சு இந்த காமெடி இல்ல............

மொத்த VAS-ஐயும் வச்சுதான்...............ஹிஹி!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ ஆர்.கே.சதீஷ்குமார் & அத்திரி

நன்றி!

வெங்கட் said...

// அக்பர் குறித்து கட்டுரை எழுதுன்னா,
இங்கே விவரமா இருக்குதுன்னு,
விக்கிபீடியா லிங்க் கொடுக்கறான்" //

இந்த பதிவுக்கான என் Comment-ஐ
படிக்க இங்கே Click பண்ணவும்..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹஹா செம காமெடி.

வெங்கட் said...

ஹி., ஹி., ஹி..!!
என்னடா இதே பதிவு Open
ஆகுதேன்னு முழிக்கறீங்களா..?!!

இந்த பதிவுக்கு இங்கே Comment
போடாம., வேற எங்கே போடுவாங்க..?

அது சரி.. மேல இருக்கிற என் Comment-ஐ
பார்த்தா உங்களுக்கு Comment மாதிரி
தெரியுலையா..?

( இப்படிக்கு., Comment-ல் ஒன்றுமே எழுதாமல்
Comment போடுவோர் சங்கம்.. )

நாஞ்சில் பிரதாப் said...

hahaha... செம காமெடி....:))

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

வெங்கட் said...
// அக்பர் குறித்து கட்டுரை எழுதுன்னா,
இங்கே விவரமா இருக்குதுன்னு,
விக்கிபீடியா லிங்க் கொடுக்கறான்" //

இந்த பதிவுக்கான என் Comment-ஐ
படிக்க இங்கே Click பண்ணவும்..!!

//

ஓஹோ அந்த பையனோட அப்பா நீங்கதானா?

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//அவர் கல்யாண பத்திரிக்கையில எல்லா விவரமும் எழுதிட்டு, பழக்க தோஷத்துல, இது வெறும் புனைவுதான்னு டிஸ்கி போட்டுட்டாராம்//

ஏலேய் ரமேசு...!! இது நீ பண்ணது தான... கல்யாண பெண் என் மண்டபத்துக்கு வரல இப்பொதான் தெரியுது...

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//ஏன்டா பக்கத்துல இருக்கறவனை அடிச்சேன்னு கேட்டா அவன்தான் சார் முதல்ல அடிச்சான், என்னோடது ஒரு எதிர்வினைங்கறான்!//

இது நான் இல்லை!!

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//என்னடா ஒரு கூட்டம் சேர்த்து வம்பு பண்ணிகிட்டிருக்கீங்கன்னு கேட்டா, இவங்கல்லாம் என்னோட பாலோயர்ஸ் சார்ங்கறான்!//

ஹி..ஹி..ஹி.. அனு இது நீங்க தான்.. இனியாவது நாலு ஸ்கூல் பிள்ளைங்கள கூப்பிட்டு வந்து VASல சத்தம் போடாதிங்க....

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//அக்பர் குறித்து கட்டுரை எழுதுன்னா, இங்கே விவரமா இருக்குதுன்னு, விக்கிபீடியா லிங்க் கொடுக்கறான்//

மச்சி!!! சும்மா சமுக விழிப்புனர்ச்சி பதிவு போட்டு லிங்க் கொடுக்காத சொன்னா கேக்கனும். இப்பொ பாரு உங்க ஆளே உன்னை கலாய்க்கறாரு...

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//நீங்க டெரரை வச்சு காமெடி கீமெடி பண்ணலயே??//

சீ..சீ.. நீங்க இருக்கும் போது அவரு ஏன் என்னை வச்சி காமடி பண்ண போறாரு...

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//மொத்த VAS-ஐயும் வச்சுதான்...............ஹிஹி//

டோட்டல் VKS கலாய்ச்சிட்டு.. உங்க தலைவி எது சொன்னாலும் நம்பறாங்க சொல்லி இப்படி ஏமாத்தறிங்களே...

அனு said...

@டெரர்
//ஹி..ஹி..ஹி.. அனு இது நீங்க தான்.. இனியாவது நாலு ஸ்கூல் பிள்ளைங்கள கூப்பிட்டு வந்து VASல சத்தம் போடாதிங்க....//

உங்க லெவல்க்கு ஸ்கூல் பசங்களே ரொம்ப அதிகம்னு சொல்றீங்களா??

//..சீ.. நீங்க இருக்கும் போது அவரு ஏன் என்னை வச்சி காமடி பண்ண போறாரு..//

ஆமா, ஆமா.. உங்களை வச்சி காமெடி பண்ண தான் நான் இருக்கேனே.. அவர் எதுக்கு :-P

//டோட்டல் VKS கலாய்ச்சிட்டு.. //

சொந்த காசுல சூனியம் வைக்க அவர் என்ன VAS மெம்பரா??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//அவர் கல்யாண பத்திரிக்கையில எல்லா விவரமும் எழுதிட்டு, பழக்க தோஷத்துல, இது வெறும் புனைவுதான்னு டிஸ்கி போட்டுட்டாராம்//

ஏலேய் ரமேசு...!! இது நீ பண்ணது தான... கல்யாண பெண் என் மண்டபத்துக்கு வரல இப்பொதான் தெரியுது...///

அது பரவா இல்ல மச்சி நீ பொண்ணு பாக்க போகும்போது பொண்ணு உன் மூஞ்சில சுடு தண்ணிய ஊத்திடுச்சாமே?

வானம்பாடிகள் said...

அப்புடி போடு:))

ஸ்ரீராம். said...

அத்தனையும் கலக்கல்...

இம்சைஅரசன் பாபு.. said...

பதிர்களை பற்றி நான் படித்த முதல் ஜோக்ஸ் இது தான்..................
அனைத்தும் நன்றாக இருக்கிறது .......

நாகராஜசோழன் MA said...

எல்லா ஜோக்ஸும் அருமை!

ப.செல்வக்குமார் said...

//"அவர் கல்யாண பத்திரிக்கையில எல்லா விவரமும் எழுதிட்டு, பழக்க தோஷத்துல, இது வெறும் புனைவுதான்னு டிஸ்கி போட்டுட்டாராம்"//

இப்படியெல்லாமா டிசுக்கி போடுறாங்க .!!

ப.செல்வக்குமார் said...

//பதிவர் : உங்களோட "பின்"னூட்டங்கள்தான் அவனோட வளர்ச்சிக்கு ரொம்ப உதவும்"//

இங்க கூட ஒருத்தர் பின்னூட்டங்கள் அல்ல பிநூக்கங்கள் அப்படின்னு சொல்லுவாரே ..!!

நாஞ்சில் மனோ said...

சூப்பர்லே......மக்கா.....தூள்.....

வரதராஜலு .பூ said...

கலக்கல்ஸ்

ரோஸ்விக் said...

அசத்தல் காமெடி... :-)