
என்னோட இந்தப் பதிவுல நான் கிண்டலடிசேன் ஆனா இப்போ பயமா இருக்கு 2012-ல் உலகம் அழியும்னு சொன்னது சரிதானோ? என்னடா இப்படி கேக்கறேன்னு யோசிக்கிறீங்களா?
டைட்டில பார்த்துட்டு வந்தா இவரு இப்படி பில்டப் கொடுத்துகிட்டே போறாரே தவிர விஷயத்துக்கு வரவே இல்லையேன்னு மண்டையைப் பிச்சுக்காதீங்க இன்னிக்கு தெரியாத்தனமா ஆபீஸ்லேர்ந்து சீக்கிரமே வந்தது தப்பு, கரண்ட் இருக்கேன்னு டிவியைப் பார்த்தது அதை விட தப்பு. என்னன்னா நாளைக்கு சன்டிவியில மதியம் "சுறா" மாலை "மூணு" படம் போடறாங்க (காலையிலேயே சந்திரமுகி போடறாங்க, ஆனா பிராயச்சித்தம் தப்பு பண்ணினப்புறம் தானே பண்ணனும் முன்னாடியே பண்ற பிராயச்சித்தத்துக்கு பலன் இருக்காதே!)
அதுனால எனக்கு என்ன தோணுதுன்னா "அது நம்மகிட்ட தான் வந்துகிட்டிருக்கு எல்லாரும் ஒடுங்க!"
டிஸ்கி 1: விளம்பரத்துல என்ன வேடிக்கைன்னா மதியம் சுறா படம்னு சொன்னப்புறம் தனுஷ் வந்து "ஒய் திஸ் கொலைவெறி"ன்னு பாடறது நல்ல "டைமிங்".
டிஸ்கி 2 : ஆனா மாலை "மூணு"ன்னு சொன்னப்புறம் அதே சாங்கை விஜய் பாடறதா நினைச்சுப் பார்த்தேன்.
டிஸ்கி 3 : இருந்தாலும் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு, கரண்ட் இருந்தாதானே படம் பார்க்கறதை பத்தி யோசிக்கணும் "அம்மா வாழ்க"ன்னு அட்வான்சா சொல்லி வச்சுக்கறேன்