அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, July 15, 2010

மாமனிதரின் பிறந்த நாள் - 15 ஜூலை


தான் கல்லாக் கல்வி
தரணி எங்கும் எட்ட
ஊண் கொடுத்தாய்
உயிர் வளர்த்தாய்

ஏன் என்று கேட்க
எவரும் இல்லா போதும்
தான் எனும் எண்ணமின்றி
தயவோடு ஆட்சி தந்தாய்

பதவி உனை நாடி வர
மற்றவர்க்கு அதைக் கொடுத்தாய்
எதிர்த்தவர்க்கும் அரசில்
இடம் கொடுத்தாய்

காந்தியைக் கண்டவர்,

காணாதவர் எவரும்
உன்னில்
காந்தியைக் கண்டார்
மன
சாந்தியைக் கொண்டார்.

இயல்பில் எளிமை,
ஏழ்மையில் நேர்மை
ஆட்சியில் தூய்மை
அன்பில் தாய்மை

எதுவும் எடுத்துக் கொடுக்கும்
கூகிளாண்டவர்
அவரால் இயலாது
உன்னை ஒத்த ஒருவரைத் தேட!

ஆயிரம் நா படைத்த ஆதிசேஷன்
அவனாலும் இயலாது
உன் புகழனைத்தும் பாட!

வணங்குகிறேன் உன்னை!
உன்னைப் பெற்ற இம்மண்ணை! 

  

6 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan said...

ஒவ்வொரு வரியும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது.

மங்குனி அமைச்சர் said...

me too

அருண் பிரசாத் said...

அருமையான கவிதை.

இப்போதான் தெரியுது! காமராஜர் ஆட்சி! காமராஜர் ஆட்சினு சொல்லுறாங்களே, அது இவர்தானா?

எப்பூட்டு நல்லவருயா இவர்! இவர பாத்து கூட இப்பொ இருக்குரவுங்க திருந்த மாட்டாங்க

ஸ்ரீராம். said...

அவரைப் போன்ற ஒருவரை இனி காண முடியுமா என்று மனம் ஏங்குகிறது.... நல்ல அஞ்சலி..

அண்ணாமலை..!! said...

படிக்காத மேதைக்கு..
உங்களின் வணங்கற்பா கண்டு மிக்க மகிழ்ந்தேன்!
நன்றிகள்!

ப.செல்வக்குமார் said...

////எதுவும் எடுத்துக் கொடுக்கும்
கூகிளாண்டவர்
அவரால் இயலாது
உன்னை ஒத்த ஒருவரைத் தேட!///

உண்மையான வரிகள் ..!!