அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, September 18, 2012

2012-ல் உலகம் அழியும்னு சொன்னது சரிதானோ?

என்னோட இந்தப் பதிவுல நான் கிண்டலடிசேன்  ஆனா இப்போ பயமா இருக்கு 2012-ல் உலகம் அழியும்னு சொன்னது சரிதானோ? என்னடா இப்படி கேக்கறேன்னு யோசிக்கிறீங்களா?


பின்ன என்ன சார்? ஒரு கொடுமையை தாங்கிக்கவே மனசுல தைரியம் கிலோ கணக்குல வேணும் ஆனா ரெண்டு கொடுமையை அதுவும் அடுத்தடுத்து வந்தா, ஆண்டவன் மேல பாரத்தை போட வேண்டியதுதான்.

டைட்டில பார்த்துட்டு வந்தா இவரு இப்படி பில்டப் கொடுத்துகிட்டே போறாரே தவிர விஷயத்துக்கு வரவே இல்லையேன்னு மண்டையைப் பிச்சுக்காதீங்க  இன்னிக்கு தெரியாத்தனமா ஆபீஸ்லேர்ந்து சீக்கிரமே வந்தது தப்பு, கரண்ட் இருக்கேன்னு டிவியைப் பார்த்தது அதை விட தப்பு. என்னன்னா நாளைக்கு சன்டிவியில மதியம் "சுறா" மாலை "மூணு" படம் போடறாங்க  (காலையிலேயே சந்திரமுகி போடறாங்க, ஆனா பிராயச்சித்தம்  தப்பு பண்ணினப்புறம் தானே பண்ணனும் முன்னாடியே பண்ற  பிராயச்சித்தத்துக்கு பலன் இருக்காதே!)

அதுனால எனக்கு என்ன தோணுதுன்னா "அது நம்மகிட்ட தான் வந்துகிட்டிருக்கு எல்லாரும் ஒடுங்க!"

டிஸ்கி 1: விளம்பரத்துல என்ன வேடிக்கைன்னா மதியம் சுறா படம்னு சொன்னப்புறம் தனுஷ் வந்து "ஒய் திஸ் கொலைவெறி"ன்னு பாடறது நல்ல "டைமிங்".

டிஸ்கி 2 : ஆனா மாலை "மூணு"ன்னு சொன்னப்புறம் அதே சாங்கை விஜய் பாடறதா நினைச்சுப் பார்த்தேன்.

டிஸ்கி 3 : இருந்தாலும் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு, கரண்ட் இருந்தாதானே படம் பார்க்கறதை பத்தி யோசிக்கணும் "அம்மா வாழ்க"ன்னு அட்வான்சா சொல்லி வச்சுக்கறேன் 

5 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

Moon... nilavu.. nice to see..
It gives cool feeling

அப்பாதுரை said...

எல்லாம் பிரமாதமான படங்களோ?

எல் கே said...

கவலை வேண்டாம் மதியம் ஆஸ்திரேலியா மேட்ச் பார்க்கவும் மாலை இந்தியா மேட்ச் பாக்கவ்ம்

@அப்பாதுரை...

சந்திரமுகியை தவிர்த்து மற்ற இரண்டு திராபை

வல்லிசிம்ஹன் said...

அவரேதான் கொலவெறி இஸ் அ மிஸ்டேக்னு ஒத்துக் கிட்டாரே அதைப் பார்க்கலையா:)

ரஜினி படம் எம்ஜிஆர் படம் பாருங்க. கவலை எல்லாம் ஓடிடும்:)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7.htmll) சென்று பார்க்கவும்...

நன்றி...