இன்று என் தாத்தாவின் 120வது பிறந்த நாள். இதை த்விதீய சஷ்டியப்த பூர்த்தி (இரண்டாவது மணி விழா என்று பொருள்) என்று கொண்டாடுவார்கள்.
நான் என் தாத்தாவை நேரில் பார்த்ததில்லை, ஆனால் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். தன் வாழ்நாள் முழுதும் வேதம் ஒதுவதிலேயே கழித்தவர். பிரபல கர்நாடக வித்வான் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் இள வயது நண்பர். தானும் நன்றாக சங்கீதம் பாடுவாராம்.
என் அப்பாவைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன் .
என் அப்பா மற்றும் அவரின் மூதாதையர் செய்த நற்செயல்-களினால் இன்று எங்கள் குடும்பமே நல்ல நிலையில் இருக்கிறது என்பதால் என்றென்றும் அவர்கள் பொற்பாதங்களில் வணங்கி என்னுடைய நன்றிக் கடனை செலுத்துகிறேன்.
7 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
'தாத்தா, பாட்டி' பெருமைகைளை நினைவு கூற வைத்தமைக்கு நன்றிகள்..
பெரியவர்களை என்றும் நினைவு கொள்ளும் உங்களுக்கு எல்லா செல்வங்களும் கிட்டும்
பெற்றொரையே மறக்கும் இந்த கால சந்ததியில், உங்கள் தாத்தாவை பற்றி பதிவு போட்டிருக்கும் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்
வாழ்த்துக்கள்! வீட்டின் பெரியவர்களை, பெருமிதத்துடன் நினைவு கூர்ந்து நன்றி கூறும் நல்ல பழக்கம், எல்லோருக்கும் இருந்தால் - ........... ம்ம்ம்......
ரொம்ப நல்ல விசயம் சார். இப்போ அப்பா அம்மாவையே யாரும் ஞபாகம் வச்சுக்கறதில்லை.... பெரியவர்களின் ஆசியிருந்தால் வாழ்க்கை நல்லா இருககும்..
மேலே உள்ள அத்தனை பின்னூட்டங்களையும் வழிமொழிகிறேன்.
பெரியவர்கள் / மூத்தவர்களின் ஆசி நம் வாழ்க்கைக்கு என்றென்றும் தேவை...
அவர்கள் மறைந்தாலும், நம்மை, நம் வாழ்வை செம்மையாக வழிநடத்துவர்...
வாழ்த்துக்கள் பாஸ்ஸ்.....
Post a Comment