அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Friday, July 2, 2010

குழந்தையும் தெய்வமும்

பெரும்பாலும் நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் என் குழந்தைகள் முன்னால் பார்ப்பதே இல்லை. ஆனாலும் அபூர்வமாக சில படங்கள் குழந்தைகளுடன் பார்ப்பதுண்டு. இன்று காலை K-TV யில் "ராம் லட்சுமணன்" படம் பார்க்க நேரிட்டது. ("அந்த யானை படமே பார்க்கலாம்பா" என்று என் சின்னப் பெண் சொன்னதால்).

படத்தில் ஒரு சீன், கமல் ஸ்ரீப்ரியாவை விரட்ட ஐடியா செய்து யானையின் காதில் ஏதோ சொல்வார். அப்போது என் பெண் கேட்டாள், "ஏம்பா யானைக்கு நம்ம பாஷை தெரியுமாப்பா?"

இன்னொரு சீன் - கமலையும், ரவீந்தரையும் ஒரு கைவிலங்கால் பிணைக்கிறது போலீஸ். இருவரும் தப்பித்து ஓடுகிறார்கள். ஒரு ரயில் பாலத்தில் இருவரும் கைவிலங்கின் உதவியால் தொங்குகிறார்கள்.  அப்போது ரயில் வர, கைவிலங்கு அறுந்து இருவரும் கீழே விழுகிறார்கள். முதலில் கமலும் பிறகு ரவீந்தரும் ஆற்றில் விழுகிறார்கள். என் பெண் கேட்டாள்: ஏம்பா, ஒரே சங்கிலியால தானே கட்டியிருக்காங்க, அப்ப சங்கிலி அறுந்தா ரெண்டு பேரும் ஒண்ணாதானே விழனும்? ஏன் தனிதனியா விழறாங்க?" இதற்கு நான் விஞ்ஞான ரீதியா ஒரு விளக்கம் சொன்னேன். (யூகிச்சு பின்னூட்டத்துல சொல்லுங்க, அப்புறம் நான் சொல்றேன்).

"குழந்தைதான, அதுக்கு என்ன தெரியும்?"   என்று நினைத்துக் கொண்டு யாரும் ஏமாற வேண்டாம். அவங்க நம்மை விட சிந்தனை ஆற்றல் நிரம்பியவர்கள் என்பதைப் புரிந்து கொண்டவன் என்ற முறையில் இந்நிகழ்ச்சியை ஒரு பதிவாகக் கொடுத்துள்ளேன்.

16 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

ஓங்க பொண்ணு ரொம்ப புத்திசாலிதான்.... அவளது சிங்க்தனை, எண்ணம், திறமைகளுக்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுங்கள்..

Madhavan Srinivasagopalan said...

சிங்க்தனை = சிந்தனை

அனு said...

பரவாயில்லயே.. உங்க பொண்ணு உங்களை மாதிரி இல்ல.. ரொம்ப புத்திசாலியா இருப்பா போல இருக்கு..

//இதற்கு நான் விஞ்ஞான ரீதியா ஒரு விளக்கம் சொன்னேன்.//
ரெண்டு பேரும் வேற வேற வெயிட்.. அதானே..

ஹய்யா.. நானும் புத்திசாலி தான்.. நானும் புத்திசாலி தான்..

பெசொவி said...

//பரவாயில்லயே.. உங்க பொண்ணு உங்களை மாதிரி இல்ல.. ரொம்ப புத்திசாலியா இருப்பா போல இருக்கு//

நான் என்னை எப்பவுமே புத்திசாலின்னு சொல்லிக்கிட்டதில்லை.(இதுக்கும் உங்களோட "ஹய்யா.. நானும் புத்திசாலி தான்.. நானும் புத்திசாலி தான்.." இதுக்கும் சம்பந்தமில்லை :))

பொதுவாகவே, இந்தக் காலத்துக் குழந்தைகள் புத்திசாலிகள் என்பதுதான் என் பதிவின் கருத்து.

vasu balaji said...

வாஸ்தவம். வாண்டுகளோடு படம் பார்த்தால் நமக்கு பல்ப் கேரண்டி:)

CS. Mohan Kumar said...

:))

I have not seen this film yet.

Madhavan Srinivasagopalan said...

மோகன் குமார் said...

:))

I have not seen this film yet.

என்னாத்த சொல்ல.. 'இந்திய தொலைக்காட்சியில் முதன் முறையாகக் கூட இந்த படம் வரவில்லையே' ..

அருண் பிரசாத் said...

//பரவாயில்லயே.. உங்க பொண்ணு உங்களை மாதிரி இல்ல.. ரொம்ப புத்திசாலியா இருப்பா போல இருக்கு..//

ரிப்பீட்டே.....

மங்குனி அமைச்சர் said...

உங்க வீட்ல உங்களுக்கும் என் நிலமைதானா ????

மாட்டுநிங்களா,மாட்டுநிங்களா,மாட்டுநிங்களா,

அருண் பிரசாத் said...
This comment has been removed by the author.
அருண் பிரசாத் said...

அடுத்த தொடர்பதிவு உங்களுக்குதான். http://arunprasathgs.blogspot.com/2010/07/blog-post_05.html

R.Gopi said...

//அனு said...
பரவாயில்லயே.. உங்க பொண்ணு உங்களை மாதிரி இல்ல.. ரொம்ப புத்திசாலியா இருப்பா போல இருக்கு..

//இதற்கு நான் விஞ்ஞான ரீதியா ஒரு விளக்கம் சொன்னேன்.//
ரெண்டு பேரும் வேற வேற வெயிட்.. அதானே..

ஹய்யா.. நானும் புத்திசாலி தான்.. நானும் புத்திசாலி தான்..//

*****

வில்லித்தனத்துல பி.ஹெச்.டி.பட்டம் வாங்கி இருப்பாங்க போல இருக்கு...

யப்பா........

அனு said...

@Gopi

//வில்லித்தனத்துல பி.ஹெச்.டி.பட்டம் வாங்கி இருப்பாங்க போல இருக்கு...//

ஏன் சார் இப்படி??

@பெ.சொ.வி

//இதற்கு நான் விஞ்ஞான ரீதியா ஒரு விளக்கம் சொன்னேன்//

இன்னும் நீங்க என்ன சொன்னீங்கன்னு சொல்லவே இல்லயே...

பெசொவி said...

////இதற்கு நான் விஞ்ஞான ரீதியா ஒரு விளக்கம் சொன்னேன்//

இன்னும் நீங்க என்ன சொன்னீங்கன்னு சொல்லவே இல்லயே...//


நீங்க புத்திசாலி, அவ்வளவுதான் சொல்வேன்!

கௌதமன் said...

நான் சின்னக் குழந்தைகளுடன் டி வி பார்க்க நேரிட்டால், என்னுடைய சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வேன், தெளிந்து கொள்வேன்.

வாசிம்கான் said...

எல்லொருக்கும் ஒரு சின்ன ஊக்கம் குழந்தைகலுக்கு நல்லதைய் சொல்வொம் நல்லதைய் காமிப்பொம் நல்லதைய் கர்பிப்பொம்,,

நண்றீ

இது என் wasimkhanaskar.blogspot.com
என்னுடைய பதிவயொம் பாருங்ல் அதர்க்கு தர்க்க பதில் இடுங்ல்