அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, July 5, 2010

ஒரு ப்ளாக்கரின் கடிதம்.

ப்ளாக் மற்றும் பின்னூட்டம் எழுதியே ஊறிப் போனவருக்கு ஒரு கடிதம் வந்தால் அதற்கு எப்படி பதில் போடுவார்? வாங்க, படிக்கலாம்.

முதலில் அவருக்கு வந்த கடிதம்:-

அன்புள்ள நண்பா,
நலம், எப்படி இருக்கிறாய்? ஏன் கொஞ்ச நாளா கடிதம் போடலை? எனக்கு மூன்று நாளாக ஒரு பிரச்சினை. அதுதான் உனக்கு இந்த கடிதம். என் தம்பி B.E. முடிச்சுட்டான். உன் தம்பியும் ஏதோ படிக்கிறான் இல்ல? உன்னப் போல இல்லாம அவன் நல்ல மார்க் வாங்கியிருப்பான்னு நினைக்கிறேன். உன்னோட இ-மெயில் ஐ.டி. கேட்டிருந்தேன், சொல்லவே இல்லை.
மனைவியை சமாளிக்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கு. சின்ன பிரச்சினாகூட கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்குப் போறேன்கிறா. என் தம்பி இன்னும் வேலைக்குப் போகவே இல்லை. அதுக்குள்ளே கல்யாணம் பண்ணி வைன்னு நச்சரிக்கிறான்.  இது பத்தி உன்னோட அபிப்ராயம் என்ன? உடன் பதில் போடவும்.

அன்புடன்,

நண்பன் பாலு.

இதுக்கு நம்ம ப்ளாகரோட பதில் கடிதம் (சாரி, பின்னூட்டம்)

//நலம்//
ரிப்பீட்டேய்!
//ஏன் கொஞ்ச நாளா கடிதம் போடலை?//
ஆபீஸ்ல கொஞ்சம் ஆணி ஜாஸ்தி பாஸ்!
// எனக்கு மூன்று நாளாக ஒரு பிரச்சினை//
:((
//அதுதான் உனக்கு இந்த கடிதம்//
வட எனக்குதானா?.
//என் தம்பி B.E. முடிச்சுட்டான்.//
ஒரு பூங்கொத்து பார்சல்! 
//உன்னப் போல இல்லாம அவன் நல்ல மார்க் வாங்கியிருப்பான்னு நினைக்கிறேன். //
அவ்வ்வ்வ்வ்....

//உன்னோட இ-மெயில் ஐ.டி. கேட்டிருந்தேன், சொல்லவே இல்லை.//

ஏற்கெனவே எழுதியிருக்கிறேன், இங்கே


//மனைவியை சமாளிக்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கு. சின்ன பிரச்சினாகூட கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்குப் போறேன்கிறா//
சேம் ப்ளட்!
//என் தம்பி ......கல்யாணம் பண்ணி வைன்னு நச்சரிக்கிறான்//
மாப்ள.....ஒரு ஆடு தானா வந்து மாட்டிகிட்டிருக்கு, மஞ்சத் தண்ணி ரெடி பண்ணி வை!

இப்படிக்கு
698064

டிஸ்கி : என்ன நம்பர்னு யோசிக்கிறியா, இது என்னோட பிளஸ் டூ பரிச்ச நம்பர்டா!

 

23 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

//
//நலம்//
ரிப்பீட்டேய்! //

ரிப்பீட்டேய்!


superb imagination

Prathap Kumar S. said...

ஹஹஹ... கலக்கல்....

அகல்விளக்கு said...

Super thala.........

CS. Mohan Kumar said...

ரைட்டு (இதுவும் ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டம்)

R.Gopi said...

தலைவா....

பலே பதிவு...

நீங்க ப்ராக்டிகலா யாருக்கோ பண்ணினத, ஒரு பதிவா போட்டு எங்க எல்லாருக்கும் கோடிட்டு காட்டி விட்டீர்கள்...

ஆனா ஒண்ணு, உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....

அருண் பிரசாத் said...

என்னா தல, நம்ம VKS புகழ் Tele Con கமெண்டை விடுடீங்களே.

நல்ல கற்பனை

vasu balaji said...

=)). அனியாய லொல்லுடா சாமி:))))

அனு said...

ஹாஹாஹா.. சூப்பர்.. கலக்கிட்டீங்க போங்க..

படிக்கும் போது, அப்படியே என்னைப் பார்த்த மாதிரி இருந்தது.. ஹிஹி..

ஒன்னு விட்டுட்டீங்களே..

"ஏன் இந்த கொலைவெறி??" ;-)

Chitra said...

அருமை... வாழ்த்துக்கள்!

(இதை மறந்துட்டீங்களே!)

http://rkguru.blogspot.com/ said...

தமிழ் எப்போதோ செத்து போச்சு இன்னும் ஏன் அதை....

Prasanna said...

அட்டகாசம் :)

எல் கே said...

hehehe superr

111 said...

kalakkals. hahahahaa

பெசொவி said...

//Congrats!

Your story titled 'ஒரு ப்ளாக்கரின் கடிதம்.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 6th July 2010 11:20:02 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/294616

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
//

Thank you voters!

ப்ரியமுடன் வசந்த் said...

superb...

மங்குனி அமைச்சர் said...

nice one

(இது )

பெசொவி said...

@
Madhavan,
நாஞ்சில் பிரதாப்
அகல்விளக்கு

Thanks!பெரிய ஆளுங்க பாராட்டும்போது சந்தோஷமாதான் இருக்கு.

@மோகன் குமார்

நன்றி! நிறைய டெம்ப்ளேட் விட்டுத்தான் போயிருக்கு, பதிவு பெரிசாயிடக் கூடாதேன்னுதான் சிலதை விட்டுட்டேன்.

@ R. Gopi

வாங்க தல, ஏன் இந்த கொலைவெறி?

பெசொவி said...

//அருண் பிரசாத் said...
என்னா தல, நம்ம VKS புகழ் Tele Con கமெண்டை விடுடீங்களே.
//

வெங்கட் காப்பி ரைட் கேப்பாறேன்னு பயந்துதான் விட்டுட்டேன். ஹி....ஹி...

Mythili said...

super interesting.
(you can also include this)

வெங்கட் said...

// நலம், எப்படி இருக்கிறாய்? //

ம்ம்.. உனக்கு Friend-ஆ இருந்துகிட்டு
நான் எப்படி நல்லா இருக்க முடியும்..??

// ஏன் கொஞ்ச நாளா கடிதம் போடலை? //

கொஞ்ச நாளாவது நிம்மதியா
இருக்கலாமேன்னு தான்.

// எனக்கு மூன்று நாளாக ஒரு பிரச்சினை.
அதுதான் உனக்கு இந்த கடிதம். //

( மனசுக்குள்.. )
நாம ஒண்ணும் பத்தவெக்கலையே...

// என் தம்பி B.E. முடிச்சுட்டான். //

ஓ.. அது தான் உன் பிரச்சினையா..??

// உன் தம்பியும் ஏதோ படிக்கிறான் இல்ல?
உன்னப் போல இல்லாம அவன் நல்ல
மார்க் வாங்கியிருப்பான்னு நினைக்கிறேன். //

ஹி., ஹி., ஹி..
என் தம்பியும் உன் தம்பி மாதிரி தான்..

// உன்னோட இ-மெயில் ஐ.டி. கேட்டிருந்தேன்,
சொல்லவே இல்லை. //

உன் இம்சை இ-மெயில்லயும் Continue
ஆகணுமா..?

// மனைவியை சமாளிக்கிறது ரொம்பவே
கஷ்டமா இருக்கு. சின்ன பிரச்சினாகூட
கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்குப் போறேன்கிறா. //

குடுத்து வெச்சவண்டா..

// என் தம்பி இன்னும் வேலைக்குப் போகவே
இல்லை. அதுக்குள்ளே கல்யாணம் பண்ணி
வைன்னு நச்சரிக்கிறான். //

பின்ன கேட்பான்ல..
அண்ணன் மட்டும் வேலைக்கா போறார்னு..!!

கௌதமன் said...

நல்லா இருக்கு பெ சொ வி. வாழ்த்துகள்.

மணிஜி said...

ரைட்டு..(அதுவும் உண்டு சார்)

Ravichandran Somu said...

Good observation!