ஒருவேளை, பூமி இப்போது சுற்றும் திசைக்கு நேர் எதிராக அதாவது கிழக்கிலிருந்து மேற்காக சுற்றினால் என்ன ஆகும், என் கற்பனை இதோ:
1 தற்போது நியூசிலாந்து ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் முதலில் சூரிய வெளிச்சம் பெறுகின்றன; அமெரிக்க நாடுகள் கடைசியில் பெறுகின்றன. பூமியின் சுற்றும் திசை மாறினால், இந்த அமைப்பும் மாறிவிடும். சுருங்கச் சொன்னால், அமேரிக்கா நேரத்திலும் நம்மைவிட முந்தியிருக்கும்
2 இதன் விளைவாக, ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிகளை இரவிலும், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் போட்டிகளை அதிகாலையிலும் காண நேரிடும்.
3 இதை விட முக்கியமான மாற்றம் ஒன்று நிகழும். தற்போது இருக்கும் புவியின் சுழற்சியால், வானில் கிழக்கிலிருந்து மேற்காக தோன்றும் மேஷம், ரிஷபம் முதலிய ராசிகள் எதிர் திசையில் செல்ல நேரிடும். அப்போது, முதலில் மீனம், பிறகு கும்பம் என்று ராசி சக்கரங்கள் எதிர் திசையில் தோன்றும். எனவே,தமிழ் மாதங்கள் பங்குனி, மாசி, தை, மார்கழி, கார்த்திகை, ஐப்பசி, புரட்டாசி, ஆவணி, ஆடி, ஆனி, வைகாசி, சித்திரை என்று மாறிவிடும்.
மற்ற விஷயங்களை எல்லாம், மாதவனும் எங்கள் ப்ளாகும் ஏற்கெனவே எழுதிவிட்டதால் நான் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
5 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
ok.. compact & nice
hi mr.peyar solla virupamiladavare....ungal pinootathai padithen......maruthisai enbadhu unmaya?
நன்று. இதைத் தொடர நீங்கள் இருவரை அழைக்க மறந்து விட்டீர்களே.... ப்ரியமுடன் வசந்த்தின் விருப்பம் இது சங்கிலித் தொடர் போல நீள வேண்டும் என்பதுதானே...
//இதன் விளைவாக, ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிகளை இரவிலும், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் போட்டிகளை அதிகாலையிலும் காண நேரிடும்.
*******
தலைவா... நாம தான் கண் முழிச்சு மேட்ச் பார்ப்போமே... அதனால, இதெல்லாம் நமக்கு பத்து படி... இல்ல அத்துப்படி...
//தமிழ் மாதங்கள் பங்குனி, மாசி, தை, மார்கழி, கார்த்திகை, ஐப்பசி, புரட்டாசி, ஆவணி, ஆடி, ஆனி, வைகாசி, சித்திரை என்று மாறிவிடும்.//
யப்பா... மெய்யாலுமா?
//சுருங்கச் சொன்னால், அமேரிக்கா நேரத்திலும் நம்மைவிட முந்தியிருக்கும்//
********
எங்களுக்காக கொஞ்சம் நீட்டி சொல்லிப்பாருங்க... அப்போ என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்...
//இதன் விளைவாக, ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிகளை இரவிலும், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் போட்டிகளை அதிகாலையிலும் காண நேரிடும்.//
இத தான் ஆண்டாண்டு காலமா பண்ணிட்டு இருக்கோமே... ஸோ, நமக்கு இது பத்து படி... இல்ல... அத்துப்படி.. நெக்ஸ்ட்...
//தமிழ் மாதங்கள் பங்குனி, மாசி, தை, மார்கழி, கார்த்திகை, ஐப்பசி, புரட்டாசி, ஆவணி, ஆடி, ஆனி, வைகாசி, சித்திரை என்று மாறிவிடும்.//
யப்பா... இது பெரிய டேஞ்சர் ஆச்சே... இந்த மேட்டர் “தல”க்கு தெரியுமா? முரசொலியில எழுதிடப்போறாரு...
Post a Comment