அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, July 17, 2010

தொடர்பதிவு - நான் கடவுள்

டிஸ்கி 1 : இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த அருண் அவர்களுக்கு நன்றி!


டிஸ்கி 2 : இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. அஹம் பிரம்மாஸ்மி என்ற பழைய சொற்றொடர் நான் கடவுள் என்பதையே குறிக்கும். ஆனால் இந்த ரீதியில் பதிவு போட்டால், சீரியஸ் பதிவாகி, பல எதிர் பதிவுகளை சந்திக்க நேரிடும் என்று அஞ்சுவதால் இதை காமெடி மற்றும் காமெடியாகவே அணுக விரும்புகிறேன்.


கடவுள் ஒரு வார லீவில் செல்கிறார், என்னை தற்காலிக கடவுளாக நியமிக்கிறார். நான் என்ன செய்வேன்?


முதலில் மக்களுக்கு என்னைத் தெரியப் படுத்தி விடுவேன். நான் இருக்கிறேனா, இல்லையா என்ற விதண்டாவாதங்கள் தலை தூக்காமல் இருக்கும்.


God TV என்று ஒரு சானல் துவக்கி (இங்கிலிஷ்ல பேரு வச்சாதான் தமிழ்ச் செம்மொழிக்குப் பெருமை சார்!) மக்களிடையே பேசுவேன்.


"நான் கேட்கிறேன், யார் இந்த கடவுள், ஏன் ஒரு வாரம் லீவில் செல்கிறார்? மக்கள் மாள்கிறார்கள், ஒரு வேளை உணவுக்கு மாய்கிறார்கள், உனக்கு எதற்கு ஓய்வு? எங்களோடு வீதிக்கு வந்தாயா, பந்த் நடத்தினாயா? பார் புகழ மாநாடு நடத்தினாயா? தேர்தலில் நின்றாயா? வாக்குறுதி தந்தாயா? அட் லீஸ்ட், வோட்டுக்கு காசாவது தந்தாயா?

 

  
காடு அழிகிறது, கார்மேகம் பொய்க்கிறது, வயல் காய்கிறது, மக்கள் வயிறு காய்கிறார்கள், உனக்கு வாச ஸ்தலம் வானுலகமா? நான் கேட்கிறேன், ஒரு நாளாவது மக்கள் முன் நின்றிருக்கிறாயா?

கட்சி தொடங்கினாயா? காசு சேர்த்தாயா? பதவியில் இருந்த நாளில் பத்து சதவீதம் கமிஷன் தான் வாங்கினாயா? பதவி உனக்கு ஒரு கேடா? உனக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க மக்கள் தயாராகி விட்டார்கள்.


   என் அருமை மக்களே, நான் கடவுளானால்,

  • ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் என்ற வாக்கைப் பொய்யாக்கி விடுவேன், புரியலையா, ஏழை என்றே ஒருவன் இல்லாமல் செய்து விடுவேன்.
  • அடுப்பு எரிக்க மற்றும் வெளிச்சம் தர மட்டுமே அக்னி பகவானுக்கு உத்தரவிடுவேன். குறிப்பாக, மருமகளை மட்டுமே தாக்கும் காஸ் அடுப்பு, தலைவனுக்காகத் தீக்குளிக்கும் அல்லது தீக்குளிக்க வைக்கப்படும் தொண்டன் போன்ற நிகழ்வே இல்லாமல் செய்வேன்.
  • அடுத்து, வருண பகவானுக்கு தேவையான நேரத்தில் மட்டும் தேவையான அளவு பெய்ய வேண்டும் என்று உத்தரவிடுவேன். குறிப்பாக பக்கத்து மாநிலங்களுக்கு நீர் வழங்காத மாநிலங்களில் மழையே பெய்யக் கூடாது என்றும் சொல்லி விடுவேன். நீர் நிலைகளை எங்கெல்லாம் தூர்த்துவிடுகிறார்களோ அங்கெல்லாம் நிறைய மழை பொழிய வைத்து நீர் நிலைகளை அழியாமல் காப்பாற்றுவேன்.
  • வாயு பகவானை அழைத்து எல்லா வகையான அசுத்த காற்றையெல்லாம் விழுங்கிவிட்டு சுத்தமான ஓசோன் நிறைந்த குளிர்ந்த காற்றை மட்டுமே வீசும்படி கூறுவேன்.
  • குபேரனை அழைத்து உழைப்பவர்களிடம் மட்டுமே செல்வம் பெருகும்படி செய்யச் சொல்வேன். அடுத்தவனைப் பார்த்து பொறாமைப் படும், வயிற்றெரிச்சல் கொள்ளும் எல்லோருக்கும் மேலும் வறுமையைக் கொடுக்கச் செய்வேன்.
  • முக்கியமாக, காந்தி, காமராஜர் போன்று மக்களுக்கு உழைத்த, மனித குல மாணிக்கங்களை மீண்டும் பூமிக்கு அனுப்பி மக்களை வழிப் படுத்த ஏற்பாடு செய்வேன்.
  • நயன்தாராவை, சாரி, நயாகராவை சஹாராவுக்கு மாற்றுவேன், சகாராவில் சாகுபடி நடக்க வைப்பேன். 
  • பாலாறும், தேனாறும் பாயக் கூடிய நிலமாக இந்த பூமியையே மாற்றுவேன்

என்றெல்லாம் மக்களிடையே வாக்குறுதிகளை அள்ளி விடுவேன். ஒரு வார காலம் முடிந்ததும் நிஜக் கடவுள் வரும் சமயம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு நிரந்தர கடவுளாகி விடுவேன்.


டிஸ்கி : என்ன கேட்டீங்க, வாக்குறுதிகள் என்ன ஆகும் என்றா? அடுத்த எலக்சன் வரும்போது மீண்டும் மக்களிடம் மறு ஒலிபரப்பு செய்யப்படும். 

17 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Prathap Kumar S. said...

ஹஹஹ.... நல்லாருக்கு... ஆனா கடவுள் ஒரு வாரம் கழிச்சு திரும்ப வந்தா உங்ககிட்ட கோச்சுக்குவாரே...அவரு பண்ணக்கூடாதுன்னு முடிவோட இருக்கறதை நீங்க பண்ணீங்கன்னா....:))

ஆனா நீங்க கடவுளா இருந்து பண்ணபோறதாச்சொன்ன விசயத்தை மனிதர்களே பண்ணலாம்... நம்மால முடியாதது ஏதாச்சும் இருக்கா என்ன??? கடவுள் பண்றவரு இல்ல சார் பண்ண வைக்கிறவரு... அவனின்று ஒரு அணுவும் அசையாது...

vasu balaji said...

வாயு பகவான் எல்லா அசுத்த காற்றையும் உறிஞ்சி போய் சேர்ந்துடுவாரு:))

அனு said...

//மக்களின் ஏகோபித்த ஆதரவோடு நிரந்தர கடவுளாகி விடுவேன்.//

ஒரு அரசியல்வாதி ஆகுவதற்குரிய எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு.. அடுத்த தேர்தல்ல நீங்க ஏன் நிக்கக் கூடாது?? ஓட்டு போட ஒரு ஆள் ரெடி!!

கடவுள் ஆகிட்டா நம்ம நினைச்சது எல்லாம் நடந்திடும்.. அப்புறம், அதுல என்ன த்ரில் இருக்கு?? அடுத்து என்ன நடக்குமோ-ன்னு ஒரு suspenseஓட வாழ்க்கைய ஓட்டுறதே ஒரு தனி சுகம்.. (நீங்க கடவுள் ஆன எனக்கு மட்டும் நான் நினைக்குறது எல்லாம் நடக்கிற மாதிரி ஒரு வரம் கொடுங்க.. ஹிஹி)

அருண் பிரசாத் said...

தல, சூப்பர், கலக்கிடீங்க.

DreamGirl said...

இன்றைய நிலையில் பெரும்பாலும் தமிழ்நாட்டுக்கு ரொம்ப முக்கியமா 'கடவுள்' தேவையோ? போனாப் போகுதுன்னு, சஹாராவையும் இணைச்சுட்டீங்களா ?

Madhavan Srinivasagopalan said...

ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்குது.. ஒருவேளை கனவுல இந்தப் பதிவை, நீங்க போடுறதுக்கு முன்னாடியே பாத்துட்டேனோ..?

நன்றி 'நூறாவது நாள்' (தமிழ்ப் படம்)

பெசொவி said...

//கடவுள் பண்றவரு இல்ல சார் பண்ண வைக்கிறவரு... அவனின்று ஒரு அணுவும் அசையாது..//

நூத்துல ஒரு வார்த்த......உண்மை பிரதாப்!

பெசொவி said...

// வானம்பாடிகள் said...
வாயு பகவான் எல்லா அசுத்த காற்றையும் உறிஞ்சி போய் சேர்ந்துடுவாரு:))
//

இத யோசிக்கவே இல்லையே! ஓகே அப்போ அந்த இடத்துக்கு உங்களை நியமிச்சா போச்சு! சுத்த காத்தை மட்டுமே சுவாசிச்சு மத்தவங்களுக்கும் அதையே குடுக்கற வாயு பகவானா இருக்க உங்களுக்கு சம்மதம்தானா சார்?

பெசொவி said...

//ஓட்டு போட ஒரு ஆள் ரெடி!//

இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பிகிட்டு இருக்கு? ஹய்யோ.....ஹய்யோ!

பெசொவி said...

//Madhavan said...
ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்குது.. ஒருவேளை கனவுல இந்தப் பதிவை, நீங்க போடுறதுக்கு முன்னாடியே பாத்துட்டேனோ..?//

இந்த ESP ன்னு சொல்லுவாங்களே,அது எதுவும் இருக்கோ என்னவோ? ஓகே, நான் கடவுள் ஆனா துணைக் கடவுள் நீங்கதான் (கடவுள் கட்சின்னு ஒன்னு ஆரம்பிச்சுட வேண்டியதுதான்)

பெசொவி said...

//DreamGirl said...
இன்றைய நிலையில் பெரும்பாலும் தமிழ்நாட்டுக்கு ரொம்ப முக்கியமா 'கடவுள்' தேவையோ? போனாப் போகுதுன்னு, சஹாராவையும் இணைச்சுட்டீங்களா ?//

திஸ் இஸ் பிகினிங்..........ஸீ தி என்டிங்! (நன்றி - குரு சிஷ்யன்)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எ(இ)ப்படி எல்லாமா சிந்திக்கிறீங்க?
நல்லா இருக்கு!!

Srividhya R said...

are you in twitter?

Srividhya R said...

i got your name!

வெங்கட் said...

// குபேரனை அழைத்து உழைப்பவர்களிடம்
மட்டுமே செல்வம் பெருகும்படி செய்யச் சொல்வேன். //

ஒரு சின்ன தகவலுக்காக கேக்கறேன்..

ஆபீஸ்ல உக்கார்ந்துட்டு
Blog எழுதறவங்க.,
Blog படிக்கறவங்க.,
Comment போடுறவங்க எல்லாம்
இந்த லிஸ்ட்ல வருவாங்களா..??!!

பெசொவி said...

//ஆபீஸ்ல உக்கார்ந்துட்டு
Blog எழுதறவங்க.,
Blog படிக்கறவங்க.,
Comment போடுறவங்க எல்லாம்
இந்த லிஸ்ட்ல வருவாங்களா..??!!//


எனக்கு ஆபிஸ்ல கொஞ்சம் ஆணி அதிகம், அதுனால உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியல.........சாரி! (நாங்கல்லாம் யாரு?)
நல்லா கேக்குறாங்கையா டீடைலு!

பெசொவி said...

//Altruist said...
are you in twitter?//

Yes, But I don't tweet!