அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, July 19, 2010

புதிர் பக்கம்

பல பதிவர்கள் புதிர்கள் போட்டு வாசகர்களை யோசிக்க வைத்துக் கொண்டிருப்பதால், நாமும் ஏன் புதிர்கள் போடக் கூடாது என்று யோசித்தேன். அதுதான் இந்த பதிவு:

ஒரு யானையும் எறும்பும் போய்க் கொண்டிருந்தபோது...........
ஓ, யானை, எறும்பை வைத்து பல புதிர்கள் வந்துடுச்சோ! அப்ப சரி,

மூணு மாம்பழம் இருக்கு, ஒன்பது பேர்..........
ஓ, கணக்கு சம்பந்தப்பட்ட புதிர்கள் நிறைய பேருக்கு அலர்ஜி. அதுவும் வேண்டாம்,

அப்படி பார்த்தா, எனக்கு வேற புதிர்களே தெரியாதே, சரி விடுங்க. உங்க மூளையை சோதிக்கிற அளவுக்கு எனக்கு மூளை இல்ல, அதுனால எந்த கேள்வியும் கேக்கப் போறதில்ல.

என்ஜாய் தி டே.

டிஸ்கி : புதிர்களே இல்லாத ஒரு பக்கத்துக்கு புதிர் பக்கம்னு பேர் வச்சிருக்கேனே, ஏன்னு கேக்கறீங்களா, அது ஒரு புரியாத புதிராவே இருக்கட்டும், விடுங்க!

19 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

S.M.ராஜ் said...

புதிர் நல்ல இருக்கு ...

பெசொவி said...

நன்றி ராஜ்,


உங்கள் வலைமனையில்

பயோடேட்டா என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன? என்று கேட்டிருந்தீர்கள்,
"தற்குறிப்பு" (தன்னைப் பற்றிய குறிப்பு) என்று சொல்லலாமா?

அருண் பிரசாத் said...

ஏதோ புரியுது, ஆனா புரியல.

CS. Mohan Kumar said...

நறநற....

Srividhya R said...

//உங்கள் கருத்துகள் எதுவானாலும், என் வளர்ச்சிக்கு தேவைதான்//

take Horlicks twice everyday after every meal.

R.Gopi said...

தல

உங்க புதிர் போட்டில கலந்துக்க ஆவலா வந்தேன்... என்னை ஏமாற்றி விட்டீரே ஐயா...

இருந்தாலும், வந்தது வந்தாச்சு, இதையாவது சொல்லிட்டு போவோம்.

உங்க புதிருக்கு விடை சொன்னால், உங்களுக்கு புரியுமா, புரியாதா என்பது எனக்கு புரியாத புதிரா இருந்ததால், அந்த புதிருக்கு என்னால் விடை சொல்ல இயலவில்லை...

ஏதாவது புரியுதா?

Madhavan Srinivasagopalan said...

அடாடா காலங்கார்த்தாலேயே இப்படியா
அப்புறம் எதுக்கு 'enjoy the day' சொல்லுறீங்க?

பெசொவி said...

//அருண் பிரசாத் said...
ஏதோ புரியுது, ஆனா புரியல.
//

எப்பவுமே புரிஞ்சது புரியாம இருக்காது, புரியாம இருக்கறது புரியாது

பெசொவி said...

//மோகன் குமார் said...
நறநற....
//

அது!

பெசொவி said...

//Altruist said...
//உங்கள் கருத்துகள் எதுவானாலும், என் வளர்ச்சிக்கு தேவைதான்//

take Horlicks twice everyday after every meal.
//

ஆனா மீல்சே ஹார்லிக்ஸ் ஆனா...........? (தங்கப் பதக்கம் படம் ஞாபகம் வருதா?)

பெசொவி said...

//R.Gopi said...
உங்க புதிருக்கு விடை சொன்னால், உங்களுக்கு புரியுமா, புரியாதா என்பது எனக்கு புரியாத புதிரா இருந்ததால், அந்த புதிருக்கு என்னால் விடை சொல்ல இயலவில்லை...

ஏதாவது புரியுதா?
//

நீர் என் இனம் ஐயா!

பெசொவி said...

//Madhavan said...
அடாடா காலங்கார்த்தாலேயே இப்படியா

//

ஹி....ஹி.....கலாய்க்கறதுக்கு நேரம் காலமே பாக்கறது கிடையாது, நாம!

வெங்கட் said...

ஆஹா எவ்ளோ ஈஸியா இருக்கு
கேள்வி எல்லாம்..

13வது கேள்வி மட்டும் கொஞ்சம்
கஷ்டம்..

ஆமா அந்த 17வது கேள்விக்கு
நான் சொன்ன பதில் கரெக்ட் தானே..??

அதே மாதிரி 21 கேள்விக்கு கூட
இன்னொரு பதில் இருக்கு..
அது என்னான்னா...

என்ன எல்லோரும் முழிக்கறீங்க..??

நானும் உங்களை மாதிரி தான்
இங்கே வர்றதுக்கு முன்னாடி
நல்லாதான் இருந்தேன்..

பெசொவி said...

//வெங்கட் said...

நானும் உங்களை மாதிரி தான்
இங்கே வர்றதுக்கு முன்னாடி
நல்லாதான் இருந்தேன்..//

ஹலோ, வெங்கட், நான் இப்படி ஆனதே உங்க ப்ளாக் பக்கம் வந்ததுக்கு அப்புறம்தான்........

Srividhya R said...

/Altruist said...
//உங்கள் கருத்துகள் எதுவானாலும், என் வளர்ச்சிக்கு தேவைதான்//

take Horlicks twice everyday after every meal.
//

ஆனா மீல்சே ஹார்லிக்ஸ் ஆனா...........? (தங்கப் பதக்கம் படம் ஞாபகம் வருதா?)

-------நான் அந்த படம் பார்த்ததில்லை . ஏன் நீங்க அந்த படத்துல நடிச்சிருக்கீங்களா?

ஸ்ரீராம். said...

நல்ல பகிர்வு. நிறையத் தெரிந்து கொண்டேன்...!

Prathap Kumar S. said...

ஏன் சார் இப்படில்லாம் சோகிக்கிறீங்க...பாருங்க புள்ளை பயந்துருச்சு...

cheena (சீனா) said...

அன்பின் பெசொவி

இப்படி எல்லாம் இடுகை இடலாம்னு இப்பத்தான் எனக்குத் தெரியுது - பலே பலே - அதுக்கும் மறுமொழிகள் வருது - கலக்க்கல் போங்க

நல்வாழ்த்துகள் பெசொவி
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

மோகன் குமார் மறுமொழி எனக்கு ரொம்பப் பிடிக்குது