அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, July 20, 2010

சிங்கப்பூர் சுத்தி பாப்போமா?

பல பதிவர்கள் தாங்கள் சென்று வந்த வெளிநாட்டு அனுபவங்களை எழுதி நம்மையும் அந்த நாட்டைப் பற்றி தெரிந்து கொள்ள வைக்கிறார்கள்.

அந்த விதத்தில் நான் சிங்கப்பூர் சுத்தி பார்த்த அனுபவம் இங்கே :

பொதுவாவே பல வெளிநாடுகள் நம்மைக் கவர்ந்தாலும் சிங்கப்பூர், மலேஷியா இரண்டும் தமிழர்கள் மனத்தைக் கவர்ந்த நாடுகள் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அந்த வகையில் என் மனத்தைக் கவர்ந்த நாடு சிங்கப்பூர். வாழ்நாளில் ஒரு முறையாவது சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த என் நண்பனிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அவன், "விடு மாப்ள, இது ஒரு பெரிய விஷயமே இல்ல, இப்ப என்ன உனக்கு சிங்கப்பூர் சுத்தி பார்க்கணும், அவ்வளவுதான? கவலையை விடு" என்றவன் சில தினங்களிலேயே என் ஆசையைத் தீர்த்து வைத்தான்.

சரி, நான் சிங்கப்பூர் சுத்தி பாத்ததை பதிவிடவில்லை என்றால் என்னாவது. அதுதான், இதோ பாருங்க....
...........
...........
.............
..............
...............
...............




இது தான் சிங்கப்பூர் "சுத்தி".  பாக்க அப்படியே நம்ம ஊரு சுத்தி போலவே இருக்கில்ல?

டிஸ்கி : இது போல் அமெரிக்கா, ஆப்ரிக்கா சுத்தி பாத்த அனுபவம் இருந்தா யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா!

14 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

அருண் பிரசாத் said...

நான் ஏமாறலயே! நான் ஏமாறலயே!! ஏன்னா நாமல்லாம் ஒரே கட்சி. நான் உங்களுக்கு மொரீசியஸ் சுத்தி காட்டுறேன்

Madhavan Srinivasagopalan said...

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலிய
'சுத்தி' பார்த்தஅனுபவம் இல்லீங்கோ.. ஆனால் அப்படி
'கத்திப்' பார்த்த அனுபவம் உண்டுங்கோ..

பெசொவி said...

//ஆனால் அப்படி
'கத்திப்' பார்த்த அனுபவம் உண்டுங்கோ..//

வெரி குட். அதுவும் இந்திய "கத்தி" மாதிரிதானே இருந்துச்சு?

Madhavan Srinivasagopalan said...

நான் 'கத்தி'ன்னு சொன்னது 'making loud sound', not, 'knife'

பெசொவி said...

//நான் ஏமாறலயே! நான் ஏமாறலயே!! //

நானும் ஏமாத்தலையே, சொன்ன மாதிரி சுத்தி காமிச்சேனா, இல்லையா?

ஜெட்லி... said...

ஏன்..இப்படி...??

R.Gopi said...

தல.........

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

உள்ளூர்லயே இருக்கீங்களே... சமீபத்துல சிங்கப்பூர் சுத்தி பார்த்ததா எழுதினா, யாராவது நம்புவாங்களா...

நெக்ஸ்ட் டைம் வேற மெத்தட்ல ட்ரை பண்ணுங்க... இல்லேன்னா, சுவாமி ஓம்கார் கிட்ட கேளுங்க...

சீக்கிரமே உங்களுக்கு துபாய் சுத்தி காமிக்கறேன்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சிங்கப்பூர் ”சுத்தி” ..சூப்பர்...

//ஒரு முறையாவது சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.//


எப்படியோ உங்க கனவு..நனவாக வாழ்த்துக்கள்...ஹி..ஹி

ஸ்ரீராம். said...

இன்னும் என்னென்னா புதுப் புது ஐடியா எல்லாம் வச்சிருக்கீங்களோ.... இந்திய பீதியில் இருக்கேன்..!!

வெங்கட் said...

உங்க Wife-க்கும் " சிங்கப்பூர் சுத்தி "
காட்டினீங்களாமே..?!!

( ஆமா சுத்தியால நடு மண்டையில
அடி வாங்கினா ரொம்ப வலிக்குமா..? )

RVS said...

நமக்கெல்லாம் முன்னோடியா பிள்ளையார் செஞ்ச மாதிரி, அப்பா அம்மாவை நிறுத்தி வச்சு ஒரு முறை சுத்தி வந்துட்டா உலகத்தை சுத்தி வந்ததை பற்றி விலாவாரியா ஒரு பதிவு எழுதலாம். உங்களோட ரசிகர்களுக்காக இந்த ஆசையை பூர்த்தி செய்யுங்க..

அன்புடன் ஆர்.வி.எஸ்.
http://mannairvs.blogspot.com

பெசொவி said...

//ஸ்ரீராம். said...
இன்னும் என்னென்னா புதுப் புது ஐடியா எல்லாம் வச்சிருக்கீங்களோ.... இந்திய பீதியில் இருக்கேன்..!!
//

உங்க கையில "சுத்தி" இல்லாத வரைக்கும் எனக்கு கவலை இல்ல :)

பெசொவி said...

//வெங்கட் said...
( ஆமா சுத்தியால நடு மண்டையில
அடி வாங்கினா ரொம்ப வலிக்குமா..? )
//
தெரியாது, உங்களுக்குத் தெரிஞ்சு எனக்குத் தெரியாத விஷயங்கள்ல இதுவும் ஒண்ணு பாஸ்!
(அப்புறம், ஷாப்பிங்லாம் எப்படி நடந்துகிட்டிருக்கு?)

பெசொவி said...

//Congrats!

Your story titled 'வந்துட்டான்யா வந்துட்டான்: சிங்கப்பூர் சுத்தி பாப்போமா?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st July 2010 09:56:03 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/306453

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
//

Thank you voters!