கள்ளாமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் களவு செய்யாமல் இருக்க வேண்டிய அவசியத்தை நன்கு விவரிக்கிறார்.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
அதாவது ஒருவன் களவு செய்து பொருள் ஈட்டுவானேயானால் அந்தப் பொருள் அதிகம் சேர்ந்து விட்டதைப் போல் தோன்றி முழுவதுமாக அழிந்துவிடும் என்கிறார்.
ஆகவே, ஒருவன் களவு செய்பவனாக, அதாவது களவாணியாக இருப்பது அவனுக்கு அவமானத்தையும் பொருள் இழப்பையும் தரும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
இதுபோல் இன்னும் ஒன்பது குறள்களில் கள்ளாமையின் சிறப்பை கூறுகிறார் திருவள்ளுவர்.
எனவே, களவாணித் தனம் இல்லாமல் இருப்பதற்கு முயற்சி செய்வோம்.
டிஸ்கி : ஆஹா, களவாணி படத்தைப் பத்தி விமரிசனம் எழுதலையா? ஆத்தா சுருக்குப் பையை மட்டும் தனியா வச்சுட்டுப் போகட்டும், கொஞ்சமா பணம் எடுத்துகிட்டு, போயி பாத்துட்டு வந்து அப்புறமா விமரிசனம் பண்றேன், ஓகே? இப்போதைக்கு ஒரு ஸ்டில் மட்டும் போட்டு வைக்கிறேன்.
11 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
சூப்பர் விமர்சனம் தலைவா..
கேபிளார விட நல்லா எழுதி இருக்கீங்களான்னு தெரியல... ஆனாலும் நல்லா இருக்கு....
”களவாணி” படத்தோட விமர்சனத்த விட, இந்த விமர்சனம் நல்லா இருக்கு...
ஆனா, சிங்கப்பூர் சுத்தி, களவாணி விமர்சனம்னு பதிவுகள் எல்லாம் ஒரே ஸ்டைல்ல இருக்கே...
அடுத்த போஸ்டிங்ல பார்ப்போம்...
ஏன்.. ஏன்..??
ஏன் இந்த கொலைவெறி..??
எங்கல்லாம் பார்த்தா
உங்களுக்கு பாவமா
இல்லையா..?
உங்க ப்ளாக் ல நான் பாகர்தே கமெண்ட்ஸ் மட்டும் தான் . அதான் படிக்கற மாதிரி இருக்கு.
Note:don't take this seriously
நேத்து சுத்தி, இன்னைக்கு களவானி, நாளைக்கு? சாமி, யாராவது எங்களை காப்பாத்துங்க.
மறுபடியும் மொக்கை போட்டீங்க, மொக்கைதிலகம்னு அவார்டு வரும் ஜாக்கிரதை
// Altruist said...
உங்க ப்ளாக் ல நான் பாகர்தே கமெண்ட்ஸ் மட்டும் தான் . அதான் படிக்கற மாதிரி இருக்கு.
Note:don't take this seriously
//
எங்க அப்பன் குதிருக்குள் இல்லைங்கறீங்க? ஓகே!
ஆனா ஒண்ணு புரியலை. இப்போ இந்த கமெண்டை சீரியஸா எடுத்துகிட்டா பதிவு சரியில்லை, கமெண்ட்ஸ் நல்லா இருக்குன்னு அர்த்தம். ஆனா இதை சீரியஸா எடுத்துக்கலைனா, கமெண்ட்ஸ் மட்டமா இருக்குன்னு ஆகாதோ?
I hope you also don't take this comment seriously :)
:)). வள்ளுவர் மேல என்ன கோவம். புலி வருது கதை மாதிரி நிஜம்மா விமரிசனம் போட்டாலும் வள்ளுவர் ஏதோ சொல்லியிருப்பாருன்னு ஆயிடப்போறது:))
// Altruist said...
உங்க ப்ளாக் ல நான் பாகர்தே கமெண்ட்ஸ் மட்டும் தான் . அதான் படிக்கற மாதிரி இருக்கு.
Note:don't take this seriously
//
எங்க அப்பன் குதிருக்குள் இல்லைங்கறீங்க? ஓகே!
ஆனா ஒண்ணு புரியலை. இப்போ இந்த கமெண்டை சீரியஸா எடுத்துகிட்டா பதிவு சரியில்லை, கமெண்ட்ஸ் நல்லா இருக்குன்னு அர்த்தம். ஆனா இதை சீரியஸா எடுத்துக்கலைனா, கமெண்ட்ஸ் மட்டமா இருக்குன்னு ஆகாதோ?
I hope you also don't take this comment seriously :) //
//
இப்போ தான் உங்க ப்ளாக் டைட்டில்க்கு அர்த்தம் புரியுது
சுவத்துல ஆணி அடிக்கணும். வீட்டுல பார்த்தேன். இல்லை. ஞாயிற்றுக் கிழமை வேற...கடை கிடையாது. எதிர் வீட்டுக் கதவு திறந்திருக்க உள்ளே நுழைந்து பேசிக் கொண்டே 'நைசா'க அவர்கள் வீட்டு சுவரில் இருந்த ஆணியை நகர்த்திக் கொண்டு வந்து விட்டேன். அதாங்க களவாடிக் கொண்டு வந்து விட்டேன்... இப்போ என் கையில் பார்க்கிறேன்...அட, களவு ஆணி...களவாணி..!! நானும் பார்த்துட்டேங்க...
@ ஸ்ரீராம்
ஆணிக்கு போய் இப்படி கஷ்டப் படலாமா? இங்க நம்ம ஆபீஸ்லேயே ஆணி அதிகம் பாஸ், சொல்லியிருந்தா ஒரு லாரி அனுப்பியிருப்பேனே.......!
//வெங்கட் said..." ஏன்.. ஏன்..?? ஏன் இந்த கொலைவெறி..?? எங்கல்லாம் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா..?//
ஒரு படத்துல, வெண்ணிற ஆடை மூர்த்தி, 'என்னது ரெட்ட வசனத்துல பேசற?' அப்படீம்பாரு, ஒடனே அடுத்தவர் (வடிவேலுனு நெனைக்கிறேன்), அவருகிட்டே, 'அதை நீங்க சொல்லுறீங்களா னு கேப்பாரு'
நா என்ன சொல்ல வரேன்னு புரியுதா ?
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//@ ஸ்ரீராம் ஆணிக்கு போய் இப்படி கஷ்டப் படலாமா? இங்க நம்ம ஆபீஸ்லேயே ஆணி அதிகம் பாஸ், சொல்லியிருந்தா ஒரு லாரி அனுப்பியிருப்பேனே.......!//
அமாம்.. போனவாரம் வரைக்கு எங்ககூடவே ஒரு மாசம் இருந்துச்சி.. அதான் 'ஆனி'
ஆணி அதிகமா இருந்தா சிங்கப்பூர் சுத்தி வெச்சி பிடுங்குங்க, இல்லை அந்த களவு ஆணியை அடிக்கவும் அதே சுத்தி யூஸ் பண்ணிக்குங்க.
இது தான் நம்ம தீர்பு
Post a Comment