நான் குடியிருந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் மிகவும் கோபக் காரர். தினமும் காலை எட்டு மணிக்கு எதிர் வீட்டு சிறுவன் அவரிடமிருந்து செய்தித் தாள் வாங்கிக் கொண்டு போவான். இவரும் அவனிடம் "பத்திரம் தம்பி" என்று எச்சரித்து அனுப்புவார். ஒரு நாள் நான் மட்டும் இருந்தேன். வீட்டுக் காரர் வெளியே சென்றிருந்தார். அப்போது அந்த சிறுவன் வந்தான்.
நான் அவனிடம் "வீட்டுக் காரர் எங்கேயோ போய் இருக்கார், தம்பி நீ அப்புறமா வா", என்றேன். அதற்கு, அவன் "பரவாயிலன்னே, நானே உள்ள போய் பேப்பரை எடுத்துக்கறேன்" என்றான்.
நான் "சாரிப்பா,அவர் இல்லாத நேரத்துல அவர் வீட்டுப் பேப்பரை எடுக்கறது தப்பு. அதோட அவர் பயங்கர கோவக் காரர் வேற, அதுனால நீ அப்புறமா வா" என்றேன். அவன் சொன்னான் பாருங்க ஒரு வார்த்த, ஆடிப் போயிட்டேன்.
அவன் சொல்றான் "நீங்க வேற கடுப்ப கிளப்பாதீங்கன்னே! அது எங்க வீட்டு பேப்பர். தினமும் காலையில ஆறு மணிக்கு எல்லாம் அவர் எடுத்துகிட்டு வந்துடுவாரு, அவர் படிச்சப்புறம் எங்ககிட்ட கொடுக்கறாரு!"
டிஸ்கி : இது உண்மை சம்பவம்னு சொன்னா நம்புவீங்க, இல்ல?
23 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
ஹவுஸ் ஓனர் இடத்துல ஆர். சுந்தர்ராஜனையும், உங்க இடத்துல சத்யராஜையும் வச்சிப் பார்க்கிறேன்... நல்லாதான் இருக்கு...!
கண்டிப்பா நம்புவோம்!
அது அந்தக் காலம்..
இப்பல்லாம் e -edition தான் இருக்குதே.. அனால்.. இன்டர்நெட் ஓசில எதிர்பார்ப்பாரோ இந்த ஆளு..
ஹஹஹ...செம காமெடி... படிக்கிறது ஓசில...அதுல அவருக்கு வீராப்பு வேற... எப்படில்லாம் இருக்காங்க மனுசங்க...:)))
Haa haa !!
:)). அடப்பாவி. அதான் பொறுப்பா பத்திரம்னு சொல்லி கொடுத்தாரா
//"நீங்க வேற கடுப்ப கிளப்பாதீங்கன்னே! அது எங்க வீட்டு பேப்பர். தினமும் காலையில ஆறு மணிக்கு எல்லாம் அவர் எடுத்துகிட்டு வந்துடுவாரு, அவர் படிச்சப்புறம் எங்ககிட்ட கொடுக்கறாரு!"//
*********
ஸ்ரீராம் சொன்ன மாதிரி, திருமதி பழனிச்சாமி படத்தில் கவுண்டமணி, சத்யராஜ் குடியிருக்கும் வீட்டு ஓனர் பாண்டு அவர்களிடம் வாடகை வசூலுக்கு வந்து போகும் காட்சி மனதில் நிழலாடியது...
நம்ம ஊர்ல, இது மாதிரி நிறைய டெர்ரர் ஃபேஸஸ் இன்ன்மும் நடமாடிட்டு தான் இருக்கு
ஹா,ஹா,ஹா,ஹா..... இப்படியும் சில மனிதர்கள்!
இது போன்ற சம்பவங்களை என் வாழ்விலும் கடந்திருக்கிறேன்... கடன் கேட்பவன் உரிமையோடு கேட்பான், கொடுத்த கடனை திருப்பி கேட்பவன் கூனிக்குறுகி கேட்பான்... அதுபோலத்தான் இதுவும்...
// இவரும் அவனிடம் "பத்திரம் தம்பி"
என்று எச்சரித்து அனுப்புவார். //
படிக்கறது ஓ.சி பேப்பர்ன்னாலும்
அதை பத்திரமா திருப்பி தரணும்கிற
அவர் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...!!!
//Congrats!
Your story titled 'ஒரு பழைய அனுபவம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 23rd July 2010 04:50:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/307965
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
//
Thank you Voters!
//வெங்கட் said...
படிக்கறது ஓ.சி பேப்பர்ன்னாலும்
அதை பத்திரமா திருப்பி தரணும்கிற
அவர் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...!!!
//
அந்த "பத்திரம்" அதுக்கு இல்ல வெங்கட். எங்கே பையன் பேப்பரை தொலைச்சுட்டான்னா, இன்னொன்னு வாங்கித் தர வேண்டியிருக்குமொங்கற கவலையில வந்தது.
//Altruist said...
இந்த மொக்கை ப்ளாகுக்கு இவ்ளோ கமெண்ட்ஸ் ...எவ்ளோ பேரு.... எவ்ளோ வேல வெட்டி இல்லாம இருந்தா இந்த மொக்கை போஸ்ட்ட படிச்சுட்டு அதுக்கு கமெண்ட்ஸ் வேற பொறுமையா குடுப்பாங்க??? அவார்டெல்லாம் உங்க ப்லொக்ச படிக்கறவங்களுக்கு தான் ஞாயமா குடுக்கணும் ......
//
உங்க யோசனையை ஏத்துக்கிட்டு அவார்ட் குடுக்கறதா முடிவு பண்ணியாச்சு. முத அவார்ட் உங்களுக்குத்தான். (பின்ன, மத்தவங்கல்லாம் தெரியாம செய்யற விஷயத்தை நீங்க தெரிஞ்சே பண்ணியிருக்கீங்களே!)
//Altruist said...
நான் வேல வெட்டி இல்லாம இருக்கேன்றது உங்களுக்கு இப்போதான் தெரியுமா? உங்க ப்ளோக நான் பாலோ பண்ணும்போதே தெரிஞ்சுக்க வேண்டாமா? உங்க ப்ளோக படிச்சுட்டு நீங்க ரொம்ப புத்திசாலி நு நினச்சேன்........
//
அப்போ உங்களுக்கு அவார்ட் வேணும்னு ஆசைப்பட்டுத் தான் போன கமெண்டை போட்டீங்களா? எதுக்கு இந்த சுத்து வழி, நேரடியாவே அவார்ட் கேட்டிருக்கலாமே?
//philosophy prabhakaran said..." கடன் கேட்பவன் உரிமையோடு கேட்பான்"
--------> ஆமாம்.. இல்லேன்னுட்டா, வேற ஆளுகிட்ட கேக்கலாமே ?
(கொடுத்த கடனை திருப்பி கேட்பவன் கூனிக்குறுகி கேட்பான்... )
-----> கொடுத்த கடனை, இவருக்கிட்டேந்து தான் திரும்பப் பெறனும்
//
அப்போ உங்களுக்கு அவார்ட் வேணும்னு ஆசைப்பட்டுத் தான் போன கமெண்டை போட்டீங்களா? எதுக்கு இந்த சுத்து வழி, நேரடியாவே அவார்ட் கேட்டிருக்கலாமே?//
இதான் உங்க டக்கா சார்?
//Altruist said...
//
அப்போ உங்களுக்கு அவார்ட் வேணும்னு ஆசைப்பட்டுத் தான் போன கமெண்டை போட்டீங்களா? எதுக்கு இந்த சுத்து வழி, நேரடியாவே அவார்ட் கேட்டிருக்கலாமே?//
இதான் உங்க டக்கா சார்?
//
Altruist-ன்னு பேர் வச்சுகிட்டு பொய்யா சொல்லப் போறீங்க? ஓ.கே.
அகில உலக..... வேணாம்........"அகில பேரண்ட வேலைவெட்டி இல்லா ப்ளாகர்" அவார்ட் Altruistக்கு வழங்கப் படுகிறது.
(விழா செலவெல்லாம் அவங்களே பாத்துக்குவாங்க!)
// "அகில பேரண்ட வேலைவெட்டி
இல்லா ப்ளாகர்" அவார்ட் Altruistக்கு
வழங்கப் படுகிறது. //
இதை கண்டித்து
நான் வெளிநடப்பு செய்கிறேன்..
பின்ன.., எங்க பெயரை எல்லாம்
பரிசீலனை பண்ணாம
இப்படி பொசுக்குன்னு அவார்டை
தூக்கி குடுத்தா யாருக்கு
தான் கோவம் வராது..??
//Altruist said...
என்ன டேமேஜ் பண்றதா நினச்சிட்டு உங்கள நிங்களே டேமேஜ் பணிக்கரிங்க......
//
இதில என்ன டேமேஜ் இருக்கு. உங்களுக்கு வேலைவெட்டி இல்ல, கமென்ட் போடறீங்க, எனக்கும் வேலைவெட்டி இல்ல, பதில் கமென்ட் போடறேன், அவ்வளவுதான?
@ வெங்கட்
//பின்ன.., எங்க பெயரை எல்லாம்
பரிசீலனை பண்ணாம
இப்படி பொசுக்குன்னு அவார்டை
தூக்கி குடுத்தா யாருக்கு
தான் கோவம் வராது..??
//
சாரி வெங்கட், காலையில் இருந்து நீங்க ஒரு கமென்ட் தான் போட்டிருக்கீங்க, ஆனா அவங்க கமென்ட் போடுறாங்க.....போடுறாங்க (அனேகமா இன்னும் போடுவாங்க) அதுனால அவங்களுக்குத் தான் அவார்ட் குடுக்கணும், அது தான் நியாயம்!
Post a Comment