அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, July 24, 2010

கவிதையும் அதன் உள்ளர்த்தங்களும்!

இன்றைய சூழ்நிலையில் ஒரு காதலன் எழுதும் கவிதையும் அதன் உள்ளர்த்தங்களும்: (அடைப்புக்குறியுள் உள்ளவை உள்ளர்த்தங்கள்)

ஏனோ தெரியவில்லை
(ங்கொய்யால, தெரிஞ்சுகிட்டேதான் சொல்றேன்)
உன்னை மறக்க முயன்றேன்
இயலவில்லை
(இன்னொன்னு மட்டும் செட் ஆகட்டும், மறந்துடலாம்)
தவிர்க்க நினைத்தேன்
முடியவில்லை
(எப்படிப் போனாலும் அணை கட்டி வந்துடறியே!)
இந்த உலகமே எதிர்த்தாலும்
கவலை இல்லை
(சொல்லித்தான் பாக்கறேன், ஒரு பய குரல் உட மாட்டேன்றான்)
நீ எனக்குத்தான்
நான் உனக்குத்தான்
(கிரகம் யாரை விட்டது?)

7 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Chitra said...

இந்த உலகமே எதிர்த்தாலும்
கவலை இல்லை
(சொல்லித்தான் பாக்கறேன், ஒரு பய குரல் உட மாட்டேன்றான்)


...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம காமெடி.

Madhavan Srinivasagopalan said...

all are very good

vasu balaji said...

ஆமாம். கெரகம் யார விட்டது:))

வார்த்தை said...

சூப்பரப்பு...

ஸ்ரீராம். said...

:))))

கௌதமன் said...

ஏனோ தெரியவில்லை,
(கவிதை என்று தலைப்பில் இருந்ததால்) தவிர்க்க நினைத்தேன், முடியவில்லை. இனி இந்த உலகமே எதிர்த்தாலும் கவலை இல்லை -
என் (இண்ட்லி)வோட்டு உங்க பதிவுகளுக்குத்தான்!

R.Gopi said...

//நீ எனக்குத்தான்
நான் உனக்குத்தான்
(கிரகம் யாரை விட்டது?)

ஹா...ஹா...ஹா...ஹா...

அதிரடி தலைவா.....

கலக்கல்.....