அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Friday, September 9, 2011

உங்கள் வெள்ளைத் துணியில் எலுமிச்சைக் கறையா?

வெள்ளை வெளேர் என்று உடை அணியும் பழக்கம் உள்ள சிலரும் நாட்டில் இருக்கத் தான் இருக்கிறார்கள். (நான் பெரும்பாலும் வண்ண உடைகள் தான் அணிவது வழக்கம். காரணம் என்னுடைய பணியில் வெள்ளை சீருடை அணிய வேண்டியிருப்பதால் மற்ற இடங்களுக்கு செல்லும்போது வண்ண உடைகள்தான் அணிவேன்.
போகட்டும். இப்போது வெள்ளை உடை அணிந்தவர்களுக்கு ஒரு முக்கிய சிக்கல் காத்திருக்கிறது. வெளியே செல்லும்போது ஏதேனும் கறை ஏற்படும்போது அதை போக்குவது எளிதான செயல் அல்ல. அப்படி ஏதேனும் கறை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி? அதுதான் இந்தப் பதிவில் சொல்ல வருகிறேன்.

பொதுவாகவே துணிகளைத் துவைக்கும்போது வெள்ளை நிற ஆடைகளை தனியாகவும், வண்ணத் துணிகளைத் தனியாகவும் தண்ணீரில் நனைக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதை நினைவில் வைத்திருக்கவும். 

சரி, உங்கள் வெள்ளை உடையில் எலுமிச்சைக் கறை ஏற்பட்டுவிட்டதா? (மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்) அதற்காக விளம்பரங்களைப் பார்த்து மயங்கி ஏதேனும் டிடர்ஜென்ட் சோப்பை வாங்கி அதை தேய்த்து தேய்த்து கஷ்டப் படவேண்டாம். மிக எளிய வழி ஒன்று இருக்கிறது.

கடைக்குப் போய் கொஞ்சம் எலுமிச்சம்பழங்களை வாங்கிக் கொண்டு வரவும். அதை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். இப்ப்போது அந்த சாறை சட்டையில் அங்கங்கு தெளித்து விட்டால், இப்போது அந்தக் கறைகள் ஒரு தனி டிசைனாகவே தெரியும் அல்லவா?(கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்)
இப்போது ஒரு புதிய சட்டை உங்களுக்குக் கிடைத்து விட்டது. எப்படி நம்ம ஐடியா?


டிஸ்கி : இதே போல் தக்காளி சாஸோ, வேறு ஏதாவது ஜூஸோ கறை  ஏற்படுத்திவிட்டாலும் இதே யோசனையைப் பயன்படுத்தலாம்.

டிஸ்கிக்கு டிஸ்கி: யார் துணியிலாவது ரத்தக் கறை ஏற்பட்டுவிட்டது என்பதற்காக என் ரத்தத்தை பயன்படுத்துவது குறித்து யோசனை எதுவும் செய்து விடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!


இன்ட்லியில் வோட்டு போட இங்கே சொடுக்கவும் (பட்டையில் ஏதோ சிக்கல், ஹிஹி_

31 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

அனு said...

கொலைவெறி பாண்டியரின் ரீ-எண்ட்ரி.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு பீட்ரூட்தான் புடிக்கும்........

NaSo said...

என்ன, பதிவைப் படிச்சீங்களா? பிடிச்சிருக்கா, சந்தோசம். பிடிக்கலையா, பரவாயில்லை. உங்கள் கருத்துகள் எதுவானாலும், என் வளர்ச்சிக்கு தேவைதான். உங்கள் கருத்துகளை இங்கே எழுதவும், நன்றி!

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எனக்கு பீட்ரூட்தான் புடிக்கும்........//

அந்த ரூட் எங்கே இருக்கு மாம்ஸ்?

NaSo said...

//அனு said...
கொலைவெறி பாண்டியரின் ரீ-எண்ட்ரி.. :)//

அது யாருங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எனக்கு பீட்ரூட்தான் புடிக்கும்........//

அந்த ரூட் எங்கே இருக்கு மாம்ஸ்?
///////

கேரட் பக்கத்துல இருக்கு......

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எனக்கு பீட்ரூட்தான் புடிக்கும்........//

அந்த ரூட் எங்கே இருக்கு மாம்ஸ்?
///////

கேரட் பக்கத்துல இருக்கு......//

கேரட் எங்கே இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எனக்கு பீட்ரூட்தான் புடிக்கும்........//

அந்த ரூட் எங்கே இருக்கு மாம்ஸ்?
///////

கேரட் பக்கத்துல இருக்கு......//

கேரட் எங்கே இருக்கு?
/////

சாம்பார்ல இருக்கு........

NaSo said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

கேரட் எங்கே இருக்கு?
/////

சாம்பார்ல இருக்கு........
///

பார்ல தான் ரூட் இருக்கா. இது தெரியாம போச்சே.. :((

அனு said...

@நாகா

//அது யாருங்க?//

யாருடைய பதிவைப் படிச்சதும்.. இவர் இருக்கிற இதே பூமியில் நம்மளும் வாழனுமான்னு தற்கொலை எண்ணம் மேலோங்குதோ, அந்த பதிவின் ஓனரே கொலைவெறி பாண்டியர்.. :)

பெசொவி said...

//அனு said...
கொலைவெறி பாண்டியரின் ரீ-எண்ட்ரி.. :)//

ஒரு யோசனை சொன்னா அந்த நல்லெண்ணத்தைப் பாராட்ட மாட்டேங்கறீங்களே!

பெசொவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எனக்கு பீட்ரூட்தான் புடிக்கும்........//

முதல் டிஸ்கியைப் படிக்கவும்

எஸ்.கே said...

துணியில ஓட்டை இருந்தா கூட இந்த மெத்தட் யூஸ் பண்ணலாமா?

NaSo said...

//எஸ்.கே said...
துணியில ஓட்டை இருந்தா கூட இந்த மெத்தட் யூஸ் பண்ணலாமா?//

சட்டை முழுக்க கிழிச்சிட்டு கீழ்ப்பாக்கம்னு கேட்டு பஸ் ஏறுங்க.. :)

பெசொவி said...

// நாகராஜசோழன் MA said...
என்ன, பதிவைப் படிச்சீங்களா? பிடிச்சிருக்கா, சந்தோசம். பிடிக்கலையா, பரவாயில்லை. உங்கள் கருத்துகள் எதுவானாலும், என் வளர்ச்சிக்கு தேவைதான். உங்கள் கருத்துகளை இங்கே எழுதவும், நன்றி!
//

உங்களுடைய மனுக்களை இங்கே அளிக்கவும். நான் வெற்றி பெற்றவுடனே அவை நிறைவேற்றப்படும்.
நன்றி : இந்தப் பக்கம்

Madhavan Srinivasagopalan said...

எலுமிச்ச கறை தெரியாமல் இருக்க எளிதான வழி..
மஞ்சள் கலர் சட்டை.. (ராமராஜன் ஸ்டைலுல..)

பெசொவி said...

@அனு
//யாருடைய பதிவைப் படிச்சதும்.. இவர் இருக்கிற இதே பூமியில் நம்மளும் வாழனுமான்னு தற்கொலை எண்ணம் மேலோங்குதோ, அந்த பதிவின் ஓனரே கொலைவெறி பாண்டியர்.. :)
//

ஓஹோ, இந்த ஒரு காரணத்துக்காகதான் நீங்க பதிவே எழுதறதில்லையா?
:))

பெசொவி said...

//எஸ்.கே said...
துணியில ஓட்டை இருந்தா கூட இந்த மெத்தட் யூஸ் பண்ணலாமா?//

இப்படியும் செய்யலாம், இல்லைனா அந்த ஓட்டைய கைத்தையல் போட்டு தச்சுட்டு, வெவ்வேறு இடங்களில் ஓட்டை போட்டு மறுபடியும் கைத்தையல் போட்டு புது டிசைன் ஏற்படுத்தலாம்!

:))

பெசொவி said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எனக்கு பீட்ரூட்தான் புடிக்கும்........//

அந்த ரூட் எங்கே இருக்கு மாம்ஸ்?
///////

கேரட் பக்கத்துல இருக்கு......//

கேரட் எங்கே இருக்கு?
/////

சாம்பார்ல இருக்கு........
//

யாருங்கையா இங்க சின்ன புள்ளைங்களை விட்டது? ஐஸ்பாய் விளையாடிகிட்டு இருக்காங்க!

பெசொவி said...

// நாகராஜசோழன் MA said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

கேரட் எங்கே இருக்கு?
/////

சாம்பார்ல இருக்கு........
///

பார்ல தான் ரூட் இருக்கா. இது தெரியாம போச்சே.. :((//

ஆஹா, இது பையங்க இல்ல, பெரிய்ய ஆளுங்க தான் போலிருக்கே?

செல்வா said...

எப்படியோ பிராடுத்தனம் பண்ணலாம்னு சொல்லுறீங்களானா ?

செல்வா said...

//யாருங்கையா இங்க சின்ன புள்ளைங்களை விட்டது? ஐஸ்பாய் விளையாடிகிட்டு இருக்காங்க!
//

நானு ?

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அருவாளுக்கு வேலை குடுக்கிறியே....

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
எனக்கு பீட்ரூட்தான் புடிக்கும்........//

'பீட்ரூட் பன்னிகுட்டி" ஹி ஹி இதெப்பிடி இருக்கு...?

தினேஷ்குமார் said...

என்ட தேவுடா வெள்ளிக்கிழமை தூங்கி எந்திருச்ச உடனே இந்த மாதிரி எல்லாம் நடக்கே .....

HVL said...

எலுமிச்சை சாதத்துல எலுமிச்சை கறை இருக்கே அதுக்கு ஏதாவது பண்ண முடியுமா?

rajamelaiyur said...

Yen? Yan? Entha veri.

ஸ்ரீராம். said...

உபயோககரமான குறிப்புகளுக்கு நன்றி.

Anonymous said...

//ஸ்ரீராம். said...

உபயோககரமான குறிப்புகளுக்கு நன்றி.///

"அபாயகரமான" குறிப்புகளுக்குன்னு எழுத நினைச்சி இப்படி மாத்தி எழுதிட்டீங்களோ?!!!

ஸ்ரீராம். said...

//"அபாயகரமான" குறிப்புகளுக்குன்னு எழுத நினைச்சி இப்படி மாத்தி எழுதிட்டீங்களோ?!!!//

ஷி-நிசி....
ரசித்தேன்.

cho visiri said...

A recall:- "To get rid of sins we can go to Ganga River. What if the Ganga dries because of sins? " (A dialogue in Thangappadakkam).
I have heard that to get rid of other stains, one can use lemon. I never thought that lemon stains can also be got rid of by adopting the method given by PSV.
By the way, my wife will be surprised to see the new design in my new white shirt tomorrow and she will be shocked as well while seeing the empty vegetable tray in the Refregirator (today after she had filled up the tray with lemon with an idea of making pickles tomorrow.)