அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, August 25, 2011

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்!

முஸ்கி: நம்ம ப்ளாகில் சமைத்துப் பார் பகுதி வரவேண்டும் என்ற நேயர்களின் விருப்பத்தை(??!!) முன்னிட்டு இந்தப் பதிவு.
முதல் நாள் வடித்த சாதம் மீந்து விட்டதா? கவலையே வேண்டாம். நான் சொல்லும்படி செய்தால் பாயசம் தயார்!

தேவையான பொருட்கள்:
பால் - 4 கப்
சேமியா - 2 கப் (வறுத்தது, வறுக்காதது எதுவானாலும் ஓகே)
சீனி - 1 கப்
ஏலக்காய் பொடி  - ஒரு சிட்டிகை
ஒரு கரண்டி நெய்யில் வருத்த முந்திரி பருப்பு (10 ) + உலர் திராட்சை (6

  1. முதலில் மீந்த சாதத்தை அடுப்புக்கு பக்கத்தில் ரெடியாக வைத்துக் கொள்ளவும்.
  2. பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சுங்கள்.
  3. 3 கப் தண்ணீரை காய வைத்து அதில் சேமியாவை சேர்த்து  கொதிக்க விடவும். சேமியா வெந்ததும் தண்ணீரை நன்றாக வடித்து விடவும்.
  4. பால் கொதித்து கொஞ்சம் வற்றியதும் வேக வைத்த சேமியாவை சேருங்கள். சேமியாவை பாலிலும் வேக வைக்கலாம். ஆனால் எதாவது டெக்னிகல் பால்ட் ஆகி பால்திரிஞ்சு  போயிடுச்சுனா,அப்புறம் பாலும் கிடையாது! பாயசமும் கிடையாது!
  5. 5 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏல பொடி, சீனி சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது பாயசம் தயார்!
 இனிமேல்தான் முக்கியமான கட்டம் இருக்கிறது:
இப்பொழுது அடுப்புக்குப் பக்கத்தில் உள்ள சாதத்தை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வரவும்.
வாசலில் உள்ள குப்பைத் தொட்டியில் இந்த சாதத்தைக் கொட்டவும்(அல்லது ராஜு சொன்னபடி யாராவது பிச்சைக்காரனிடம் கொடுத்து விடவும்) solliyullathu pol .
வீட்டுக்குள் வந்து பாயசத்தை ருசிக்கவும்.

டிஸ்கி: ஏன் முறைக்கிறீங்க? விலைவாசி இருக்கற நிலைமையில கணக்கு பார்த்து சாதம்  வடிக்கனும், அதை விட்டுட்டு நிறைய வடிச்சு அது மீந்து போச்சேன்னு சாப்பிட்டா அதுனால வர்ற சில வியாதிக்கு தனியா பணம் செலவழிக்கனும்.  ஸோ, திட்டமிட்டு சமைங்க, நலமாக வாழுங்க!

டிஸ்கிக்கு டிஸ்கி: மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சு, அதான், ஹிஹி!

20 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Raju said...

ஏன் குப்பைத் தொட்டியில் கொட்டணும்..?!

எல்லாத் தெருக்களிலும் எங்காவது ஒரு மூலையில். 'அம்மா தாயே' கேட்கத்தான் செய்யும் பாஸ்.

பெசொவி said...

ராஜுவின் வேண்டுகோளுக்கிணங்க,
கொஞ்சம் மாற்றிவிட்டேன் தேங்க்ஸ் ராஜு!

rajamelaiyur said...

Kodura mokkai

rajamelaiyur said...

Super boss

முனைவர் இரா.குணசீலன் said...

>:))<

எஸ்.கே said...

tasty post:-)

Madhavan Srinivasagopalan said...

சோத்த நெறையா வடிச்சு வீணாக்கிட்டு (பழச திண்ணா உடல் நிலை கெடும்)
பாயசம் கேக்குதோ?அதுவும் முந்திரி, நெய், திராட்சை போட்டு..

வீணான சோத்துக்கு ஈடு கட்ட, ஒரு வேளை பட்னி கெடக்குறதுதான் சரின்னு எனக்குப் படுது.

தினேஷ்குமார் said...

சாதம் மீந்துபோனா காலைல மிக்சில கொஞ்சம் உப்பு காரம் போட்டு அரைச்சு வத்தல் போடுங்க சூப்பரா இருக்கும் கைமுறுக்கு மாதிரி வெறி டேஸ்ட்டி....

Chitra said...

மரண மொக்கை....... வாழ்க!!! ஹா,ஹா,ஹா,ஹா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பழைய சாதத்தை ஏன் கொட்டனும், வெச்சிருந்தா,உங்க ஃபார்முலா படி பண்ணி பாயசம் பாய்சன் மாதிரி வந்துடுச்சுன்னா, பழைய சாதமாவது மிஞ்சுமே?

இராஜராஜேஸ்வரி said...

திட்டமிட்டு சமைங்க, நலமாக வாழுங்க!

கோகுல் said...

அடங்கப்பா!இது உலகப்பதிவுடா சாமி!

குறையொன்றுமில்லை. said...

உங்க வீட்ல தினமும் பழைய சாதம்
மீந்து போயிடுமோ. அதான் புதுசு புதுசா
யோசிக்கிரீங்க.பரவால்லே. நல்லாதான்
இருக்கு.

middleclassmadhavi said...

சூப்பர் ஐடியாங்க!!!

வெங்கட் said...

" கொலை முயற்சி " வழக்குல இவரை
உள்ளே தள்ள சட்டத்துல எதாவது இடம் இருக்கா.??

ஸ்ரீராம். said...

:))))))

என்ன ஒரு ஐடியா....சூப்....பருங்கோ.... இனி இதையே ஃபாலோ பண்ணுவோம்.

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அருவாளுக்கு அடிக்கடி வேலை குடுக்காதீங்கலேய்....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழாவது ஓட்டு நானே....

Unknown said...

பாய்சனுக்கு ச்சே பாயாசத்துக்கு நன்றி ஹிஹி!

வைகை said...

மீந்துபோனா ஏன் இவ்ளோ சிரமப்படணும்? ரமேஷ கூப்புட வேண்டியதுதானே? :))