அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, August 4, 2011

எப்படி சொல்வேன்?

எனக்காக ஒரு 
கவிதை எழுதுகிறாயா 
என்று கேட்டவளிடம்
எப்படி சொல்வேன்
உன்னைத்தான் கவிதையாய்
நினைக்கிறேன் என்று!

###########

கதை ஒன்று சொல்
என்று கேட்ட
மகளிடம்
எப்படி சொல்வேன்
ப்ளாக் எழுத
நேரமே இல்லை என்று!

############

நீ என்ன வேலை
செய்யறேப்பா
என்று கேட்ட
மகளிடம் எப்படி சொல்வேன்
இதைதான் என்
டேமேஜரும் கேட்கிறார் என்று!

###########

இந்த அம்மா 
ஏம்பா எப்பவும்
என்னை திட்டறா
என்று கேட்ட மகளிடம்
எப்படி சொல்வேன்
இதே கேள்வி
என் மனத்திலும் 
உண்டு என்று

##########

என் புகழ்ச்சியைக் 
கேட்டு சிரித்து
பொய் சொல்றதே
உங்களுக்கு வேலையாப் போச்சு
என்ற என் மனைவியிடம் 
எப்படி சொல்வேன்
அவள் சொன்னது
உண்மைதான் என்று!

#############

என்ன இது
ஏன் இந்தக் கிறுக்கல்
என்று கேட்ட டெரரிடம்
எப்படி சொல்வேன்
நானும் கவுஜர் தான் என்று! 

17 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

முனைவர்.இரா.குணசீலன் said...

எப்படிச் சொல்வேன்???

கவிதை நன்றாகவுள்ளது என்று!!!

:)

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை ஊர்தியை (இளங்கவிஞர்களுக்காக) என் வலையில் நிறுத்தி வைத்திருக்கிறேன்..

வாங்க கவிஞரே.

http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_03.html

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை நண்பரே.

சேட்டைக்காரன் said...

//என்ன இது
ஏன் இந்தக் கிறுக்கல்
என்று கேட்ட டெரரிடம்
எப்படி சொல்வேன்
நானும் கவுஜர் தான் என்று//

இஃகி..இஃகி! :-))))))

நீங்களுமா? அடிச்சுத் தூள் கெளப்புங்க!

Chitra said...

கவுஜ.....கவுஜ.... ஜூப்பரு!

எஸ்.கே said...

என்று கவிதைகள் நல்லா இருக்கு!:-)

Rathnavel said...

அருமை.

S.Sudharshan said...

கவிதைக்கு வாழ்த்துகள் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதைப் படிக்கும் போது
நினைத்து பார்க்கிறேன்
இதுதான் கவிதையா என்று....

வெங்கட் said...

// எனக்காக ஒரு கவிதை எழுதுகிறாயா
என்று கேட்டவளிடம் //

@ Mrs.பெ.சொ.வி...

இவர் உண்மையை தான் எப்பவும்
கவிதையா சொல்வாரு.. ஒருவேளை
நீங்க அவர்கிட்ட இப்படி கேக்கலைன்னா...

" இப்படி உங்ககிட்ட கேட்டது யார்னு.? "
ரெண்டு தட்டு தட்டி கேளுங்க..
உண்மை தன்னால வரும்..!

வைகை said...

என்ன இது
ஏன் இந்தக் கிறுக்கல்
என்று கேட்ட டெரரிடம்
எப்படி சொல்வேன்
நீயே ஒரு கிறுக்கன்தான் என்று!

mohan said...

வணக்கம் தல கலக்கற

mohan said...

வணக்கம் தல கலக்கற

DRபாலா said...

இந்த அம்மா ஏம்பா எப்பவும்என்னை திட்டறாஎன்று கேட்ட மகளிடம்எப்படி சொல்வேன்இதே கேள்விஎன் மனத்திலும் உண்டு என்று

சே....எல்லா இடத்திலும் இதே தானா!

நல்ல கவிதை!

Anonymous said...

நல்ல நகைச்சுவை கவி நண்பரே...

அருண் பிரசாத் said...

பெ சொ வி பிளாக் பக்கம் போகாதேனு சொன்னா கேட்டியா கேட்டியா....

kobiraj said...

கவிதை அருமை .அப்படியே என் தளத்திற்கும் வருகை தரலாமே மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்.இப்போது தமிழ் சினிமாவில் வெளிவரவுள்ள முக்கிய படங்கள் மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு. எதை முதலில் எழுதுவது எதை கடைசியாய் எழுதுவது என்று தீர்மானிக்கவே முடியாமல் கடைசியாய் இந்த வரிசையில் போட்டிருக்கிறேன்.இது வெற்றி வாய்ப்பு வரிசை முன்னிருந்துபின்னோ பின்னிருந்து முன்னோ அல்ல.http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_03.html