அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, August 17, 2011

மிஸ்டர் எக்ஸ் Rocks


மிஸ்டர் எக்ஸ் முதல் முறையாக ஒரு ஏ.டி.எம் கார்டு வாங்கியிருந்தார். அதை எப்படி பயன்படுத்துவது என்று அவருக்கு தெரியவில்லை. பிறகு நண்பர்கள் கொடுத்த யோசனைப் படி ஒரு ஏ.டி.எம்மில் நுழைந்து அங்கிருந்த செக்கியூரிட்டியை அழைத்தார்,"எக்ஸ்க்யூஸ்மி, பணம் எடுக்கணும் கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?"
செக்கியூரிட்டி உள்ளே வந்து அவரிடம் கார்டை வாங்கினார், "உங்க பாஸ்வேர்ட் சொல்லுங்க" என்றார். பாஸ்வேர்ட் சொன்னதும் அதை அழுத்தி பணம் எடுத்துக் கொடுத்தார்.பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்த எக்ஸ்க்கு திடீரென்று ஒரு பொறி. "பாஸ்வேர்டை யாரிடமாவது சொல்லிவிட்டால் உடனே மாற்றிவிட வேண்டும்" என்று நண்பர்கள் சொல்லியிருந்தார்களே! டக்கென்று செக்கியூரிட்டியிடம் திரும்பி சொன்னார், "என்னோட பாஸ்வேர்டை மாத்தணும், கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?"

**************

மிஸ்டர் எக்ஸ் வேகவேகமாக ஒரு பேங்க் மேனேஜர் ரூமுக்குள் வந்தார்.
"என்ன சார், ஏ.டி.எம்.வச்சிருக்கீங்க? ஒரு நாளைக்கு மேக்சிமம் பத்தாயிரம் ரூபாய் எடுக்கலாம்னு ரூல் இருக்கு இல்ல? உங்க பேங்க் ஏ.டி.எம்.ல போய் கார்டை சொருகி, எட்டாயிரம் ரூபாய் வேணும்னு அழுத்தினா வர மாட்டேங்குது?

மேனேஜர் நிதானமாக சொன்னார், "சாரி சார், உங்க அக்கவுண்ட்ல ரெண்டாயிரம் ரூபாய்தான் இருக்குது"

*************

மிஸ்டர் எக்ஸ் ரொம்ப குண்டாக இருந்ததால், டாக்டர் அவரிடம், தினமும் அஞ்சு கிலோமீட்டர் வாக்கிங் போக சொல்லியிருந்தார். ஒரு நாள் காலை எக்ஸிடமிருந்து டாக்டருக்கு போன் வந்தது.
"சார், நீங்கதான என்னை தினமும் வாக்கிங் போகச் சொன்னீங்க, உங்களால் ட்ரெயின மிஸ் பண்ணிட்டேன்"
டாக்டர்:"புரியும்படி சொல்லுங்க"
எக்ஸ்:"நேத்து நைட் டெல்லிக்கு ட்ரெயின்ல புறப்பட்டேன், டாக்டர்! இன்னிக்கு காலையில வண்டி விஜயவாடா வந்துச்சு. உடனே, இறங்கி அஞ்சு கிலோமீட்டர் வாக்கிங் வந்தேன், ஆனா திரும்பி போனப்போ, ட்ரெயின் போயிடுச்சு!" 
*************
மிஸ்டர் எக்ஸ் தன பையனை போட்டு அடித்துக் கொண்டிருந்தார். 
அவர் மனைவி வந்து "ஏங்க, பையனைப் போட்டு அடிக்கறீங்க?"
எக்ஸ்: " பின்ன என்ன, நாளைக்கு Test இருக்குன்னு சொல்றான், ஆனா புக் வச்சு படிக்க மாட்டேன்றான்"
மனைவி: "ஐயோ, ஐயோ, நாளைக்கு இருக்கறது Typewriting Test"

*************


11 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

MANO நாஞ்சில் மனோ said...

முதல் எக்ஸ் நானே...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அனைத்து ஜோக்கும் அருமை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

என்று என் வலையில்

டென்ஷன் ஆகாதிங்க பாஸ்…

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இரண்டாவது எக்ஸ் நான்தான்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
Blogger MANO நாஞ்சில் மனோ said...

முதல் எக்ஸ் நானே...
//

உங்கatm password a சொல்லுங்க

அபு சனா said...

very funny...............

TERROR-PANDIYAN(VAS) said...

ha ha ha

TERROR-PANDIYAN(VAS) said...

ha ha ha

வெங்கட் நாகராஜ் said...

Good Ones.... Thanks for Sharing.

cho visiri said...

"நேத்து நைட் டெல்லிக்கு ட்ரெயின்ல புறப்பட்டேன், டாக்டர்! இன்னிக்கு காலையில வண்டி விஜயவாடா வந்துச்சு. உடனே, இறங்கி அஞ்சு கிலோமீட்டர் வாக்கிங் வந்தேன், ஆனா திரும்பி போனப்போ,

Please tell me which train from Delhi takes you to Vijayawada the next morning.

cho visiri said...

//ஐயோ, ஐயோ, நாளைக்கு இருக்கறது Typewriting Test"//


It is amazing that thereis still a school that has Typewriters and it conducts a test on Typewriting as well.