அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, August 15, 2011

சுதந்திர தினம் அன்று சினிமா நிகழ்சிகள் ஏன்?

முதலில் இந்தியர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

இன்றைய டிவி நிகழ்சிகள் அனைத்துமே சினிமா தொடர்பாக தான் இருக்கின்றன என்று எல்லோருக்கும் தெரியும். சிலருக்கு இதனால் கோபம் கூட வந்திருக்கும். ஆனால் சினிமாவுக்கும் சுதந்திரத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

திரையுலகில் பிதாமகரான திரு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் சுதந்திரத்திற்கு முன் எடுத்த திரைப்படம் "நாம் இருவர்". இதில் தான் பாரதியின் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என்ற சிறந்த தேச பக்தி பாடல் இடம்பெற்றது. அதற்கு முன்னமே 1931-ல் வந்த "காளிதாஸ்" திரைப்படத்தில் (கதை என்னமோ அந்தக் காலத்து மகா கவி காளிதாசனைப் பற்றித் தான் என்றாலும்), "ராட்டினமே காந்தி கை பாணமே" என்று சுதந்திர தாகத்தை ஊட்டும் விதமாக பாடல் இடம்பெற்றது

சுதந்திரத்திற்குப் பிறகு வந்த பல படங்களில் நம்முடைய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.  கப்பலோட்டிய தமிழன், வீர பாண்டிய கட்ட பொம்மன் போன்ற பல படங்களில் கலைத் தாயின் தலைமகன் சிவாஜி அவர்களின் மிளிர்ந்த நடிப்பில் சுதந்திரக் கனல் வீசும் பல வசனங்களில் நம்முடைய தேசத் தலைவர்கள் காந்தியும், பாரதியும் வ.உ.சியும் என்னென்ன துயரங்கள் பட்டு நம்முடைய நாட்டு விடுதலைக்கு பாடுபட்டார்கள் என்பதை நாம் அறிந்தோம்.  சுதந்திரம் தெறிக்கும் சிவாஜியின் பிரபலமான வசனம் இதோ உங்கள் காட்சிக்காக:


எல்லாம் சரி, இன்றைய திரைப்படங்கள் அப்படி சுதந்திர தாகத்தை ஊட்டுகின்றனவா என்று கேட்கிறீர்களா? நிச்சயம் ஊட்டுகின்றன.
குறிப்பாக பெண்களுக்கு  உடை சுதந்திரம் வேண்டும் என்று "காட்டு"கிறார்கள்.
சிந்தனை சுதந்திரம் அதாவது "சிந்திப்பதிலிருந்து சுதந்திரம்" என்ற கோட்பாட்டுடன் வசனங்களும் காட்சிகளும் அமைக்கிறார்கள்.  கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பள்ளி செல்லும் மாணவர்களின் காதலை உயர்த்தி சொல்லுகிறார்கள். எல்லாவற்றையும் விட தலை சிறந்த படங்கள் வெளியான தமிழகத்தில் இது போன்ற கேவலமான படங்கள் வருவதிலிருந்து சுதந்திரம் கிடைக்காதா என்ற ஆதங்கத்தை உண்டாக்கி நம்முடைய சுதந்திர வேட்கையை அதிகரிக்கவே செய்கின்றன, இந்தக் காலத்து படங்கள்   ஆகவே இந்தக் காலத்து படங்களும் சுதந்திர தாகத்தை ஊட்டவே செய்கின்றன.

கடைசியாக உங்களுக்கு சொல்வது என்னவென்றால், இன்றைய சினிமா நிகழ்ச்சிகள் எதையும் பார்க்காமல் டிவிக்கும் மின்சாரத்திற்கும் சுதந்திரம் கொடுப்பதுதான் நம் தேசத் தலைவர்களுக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் நாம் செலுத்தும் மரியாதையாகும்.


ஜெய் ஹிந்த்! 

17 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

கலாநேசன் said...

என் இனிய சுதந்திரதின வாழ்த்துகள்!

மாணவன் said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
ஜெய் ஹிந்த்!

Anonymous said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan said...

கடைசியாக உங்களுக்கு சொல்வது என்னவென்றால், இன்றைய சினிமா // நிகழ்ச்சிகள் எதையும் பார்க்காமல் டிவிக்கும் மின்சாரத்திற்கும் சுதந்திரம் கொடுப்பதுதான் நம் தேசத் தலைவர்களுக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் நாம் செலுத்தும் மரியாதையாகும்.//

இந்தப் பதிவு...
நெத்தியடி.. (விளக்கம் தேவையில்லை)
சுத்தியடி (சுத்தி சுத்தி அடிச்சதுனால)
பத்தியடி (பத்தி பத்தியா எழுதினதச் சொன்னேன்)
கத்தியடி (கத்தி முனைபோல கூர்மையான வார்த்தைகளால் அடி)

வைகை said...

என்ன கொடுமை சார் இது? அப்ப குஷ்பூ அக்கா பேட்டி வந்தா பார்க்ககூடாதா?

சேட்டைக்காரன் said...

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

குஷ்பூ அக்கா பேட்டி வந்தா//

kushboo voda akkaa yaaaru?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Happy independence day . . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இனிய சுதந்திரதின வாழ்த்துகள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
என்ன கொடுமை சார் இது? அப்ப குஷ்பூ அக்கா பேட்டி வந்தா பார்க்ககூடாதா?
//////

உனக்கு கலாக்கா பேட்டிதான் பொருத்தமா இருக்கும், அது வந்தா பாரு.....!

எஸ்.கே said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

Jey said...

இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். சினிமா நிகழ்ச்சிகள்.... ஒன்றும் சொல்வதிற்கில்லை.... எல்லா நாட்களிலும் சினிமாதான் இவற்றில். இது போன்ற பண்டிகை, தேசிய நாட்களில் இவர்கள் போடும் படங்களுக்கும் அந்நாளுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. மக்களை இடியட் பாக்ஸ் முன் உட்கார வைத்திருக்கும் உக்தி.... :(

அனு said...

அதான் டீவிய ஆஃப் பண்ணிட்டு லேப்டாப்-ப கையில எடுத்துட்டேன்.. :)

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!

Anonymous said...

கடைசியா சொன்னது வாஸ்தவம்

Priya said...

நல்ல பதிவு.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com