அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, October 18, 2009

வந்துட்டேன்யா வந்துட்டேன்.

இரண்டாம் பதிவாக ஒரு கவிதையும் கதையும் எழுதலாம் என்று...

கவிதை

அரசு பேருந்தில் சென்றால்
அவசரத்துக்கு ஆகாது,
private பஸ்ஸில் service
அருமையாக இருக்கும்
அவசரமாய் ஏறினார்.....

அந்த அரசாங்க அதிகாரி.


(குறுங்)கதை - வல்லவனுக்கு வல்லவன்

"என்னதான்டா சொல்றான் அந்த கிழவன்?" உறுமினார் துளசிங்கம்.

"ஐயா, அவங்க வீட்டு சுவரில எந்த கட்சி சின்னமும் வரையக் கூடாதாம். வரைஞ்சா, அந்த கட்சிக்கு வோட்டு போட மாட்டாராம். அவங்க வீட்டு ஓட்டு ஒன்னு கூட விழாதாம்."

"விடுங்க ஐயா, நம்ம கட்சி விளம்பரத்தை வேற இடத்தில் வரைஞ்சா போச்சு." ஆறுதல் கூறிய ஆறுமுகத்தை வெறியோடு பார்த்தார், துளசிங்கம்.

"முட்டாள் மாதிரி பேசறியே! அது நாலு ரோடு கூடற இடம். அது போக, அந்த வீட்டு பக்கத்திலேயே இரண்டு பூத்து இருக்குது தெரியுமில்ல? அங்க விளம்பரம் எழுதினாதான் நம்ம கட்சிக்கு ரொம்ப நல்லது. பேசாம கிழவனை ஒரு தட்டு தட்டிட்டு நம்ம கட்சி மயில் சின்னத்த வரைஞ்சுட்டு வாடா"

"ஐயா, அதிலே ஒரு பெரிய சிக்கல் இருக்கு. அந்த பெரியவருக்கு அந்த ஏரியாவுல செல்வாக்கு இருக்கு. அவர் கூடாதுன்னு சொன்னா, கிட்டத்தட்ட ஐந்நூறு வோட்டு நமக்கு எதிரா திரும்பிடும்"

"இப்ப என்னதாண்டா செய்யுறது?" கையைப் பிசைந்து யோசித்தார் துளசிங்கம்.

பட்டென்று ஒரு யோசனை தோன்றியது.

"ஏய், இப்படி செஞ்சா என்ன? அவங்க வீட்டு சுவத்திலே நம்ம எதிர் கட்சி சின்னமான பூனை படத்தை வரைஞ்சுட்டு எதிர் கட்சிக்கு வோட்டு கேட்டு எழுதிட்டு வந்துடு. அப்போ, எல்லா வோட்டும் நம்ம கட்சிக்கே வந்துடும். எப்படி?"

"ஐயா, சூப்பர் ஐடியாங்க. இப்படி செஞ்சா நிச்சயமா நம்ம கட்சி ஜெயிச்சிடுங்க. நான் ராத்திரியோட ராத்திரியா போய் வேலையை முடிச்சிடறேன்" உற்சாகமாக போனான் ஆறுமுகம்.

இரவு பன்னிரண்டு மணிக்கு பெரியவர் வீட்டை அடைந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே, அந்த சுவரில்....

துளசிங்கம் கட்சியின் சின்னமான மயில் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

நீதி: வல்லவனுக்கு வல்லவன், வையகத்தில் உண்டு.

19 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

R.Gopi said...

லேசாக‌ எதிர்பார்த்த‌ வித‌மாக‌ தான் முடிந்திருந்த‌து...

ஏனென்றால், நானும் இதுபோல் முடிவினை கொண்ட பல பதிவுகள் எழுதியதால்...

எனிவே... நல்ல சுவாரசியமாக இருந்தது...

என் தோப்பும்....புங்கை ம‌ர‌மும்...பின்னே ஞானும் ப‌டித்தால் உங்க‌ளுக்கு நான் ஏன் இப்ப‌டி சொன்னேன் என்று தெரியும்.... இங்கே சென்று ப‌டியுங்க‌ள்...
(தோப்பும்... புங்கை மரமும்... பின்னே ஞானும்
http://edakumadaku.blogspot.com/2009/08/blog-post_17.html)

பெசொவி said...

நன்றி R. gopi,

அழைப்பினை ஏற்று, பதிவைப் படித்து, பின்னூட்டமும் போட்டதற்கு மிக்க நன்றி.

தங்களைப் போன்றவர்களின் ஆதரவு என்னை மேலும் உற்சாகப்படுத்தும்.

வளர முயல்கிறேன்.

நன்றி.

வால்பையன் said...

கவிதை நல்லாயிருக்கு!

பெசொவி said...

மிக்க நன்றி Mr. வால்பையன்

Eswari said...

//வால்பையன் said...
கவிதை நல்லாயிருக்கு!//
repeatu...

நிலாரசிகன் said...

Mr.Bharath Style? :)

வாழ்த்துகள்.

பெசொவி said...

//Eswari said...
//வால்பையன் said...
கவிதை நல்லாயிருக்கு!//
repeatu...
//
வாங்க ஈஸ்வரி அக்கா, உங்களை மாதிரி பெரியவங்க வாழ்த்தும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நன்றி

மீண்டும் வருக.

fieryblaster said...

oru vishayam ungakitta romba piduchirukku. kavidai ezhudarathukku munnadi meleye kavidai nnu ezhudi kuzhappathai theerkareenga paarunga, adai chonnen. illanna kuzhanbiduvomakkum :)

பெசொவி said...

//fieryblaster said...
oru vishayam ungakitta romba piduchirukku. kavidai ezhudarathukku munnadi meleye kavidai nnu ezhudi kuzhappathai theerkareenga paarunga, adai chonnen. illanna kuzhanbiduvomakkum :
//
அதுல பாருங்க, எனக்கு சொல்லித் தந்தவங்கல்லாம் ஒரு வாக்கியத்தை மடிச்சு மடிச்சு எழுதினாலே அது கவிதைதான் அப்படின்னு சொன்னதுனால, நானும் கவிதை(ங்கற பேருல) எழுத ஆரம்பிச்சேன்.

அது போக, பூக்கடைக்கே விளம்பரம் தேவைப் படற காலம் ஆச்சுதுங்களா, அதுதான், தலைப்புலேயே, கதை, கவிதை அப்படின்னு நானே எழுதிடறேன்.

Anonymous said...

கவிதை, கதை ரெண்டுமே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

கதையும் நன்றாக இருக்கிறது, கவிதையும்.

வாழ்த்துக்கள்!

Prabhu said...

நல்ல நச்சு

Shakthiprabha (Prabha Sridhar) said...

குட்டிக் கதை! ரொம்ப எதிர்பார்த்து சடார்ன்னு (நச் என்று?) முடிந்து விட்டது. கதை ஒரு வரிக்கதை இல்லாமல் இன்னும் விவரித்திருந்தால் நச் effect இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். வெற்றி பெற வாழ்த்துக்கள்

பெசொவி said...

Thanks to
Ramalakshmi, Pappu and Shakthiprabha.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வழக்கம்போல் ஓட்டுப் போடும் மக்களின் சிந்தனையை கேள்வி கேட்கும் கதை

சதங்கா (Sathanga) said...

கவிதையும் கதையும் அருமை. வாழ்த்துக்கள்.

பெசொவி said...

My sincere thanks to Suresh and Sathanga.

Vidhoosh said...

அட. சும்மா நெத்தில நச்னு அடிச்சா மாதிரி இருந்துதுங்க..

-விதூஷ்

பெசொவி said...

Thank you very much Vidoosh.

I also expect your opinion on my new post in http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_06.html