அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, December 9, 2009

வாழ்க்கையின் விசித்திரம்

டாமின் கையில் சிக்காமல்
புதுப்புது ஐடியாக்கள் மூலம்
தான் தப்பி
பூனையை மாட்டிவிட்ட
ஜெர்ரியை ரசித்தபின்
தூங்கப் போனேன் -
வடையை பொறியில் வைத்தபின்.

****************************


"ஐயா,
இந்த பத்து ரூபாயை
வைத்துத்தான்
இன்னைய பொழுதை
ஓட்டணும்"
சோகவசனம் பேசியபின்
சொகுசுக் காரில் பறந்தார்
அந்த படத்து ஹீரோ.

***********************************

8 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

shortfilmindia.com said...

முதல் கவிதை நன்றாக இருந்தது..

கேபிள் சஙக்ர்

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு கவிதை இரண்டும்

நல்வாழ்த்துகள்

Chitra said...

நிஜ வாழ்வின் யதார்த்தங்கள் - உங்கள் கவிதை இடுகையில்.

Paleo God said...

ம்ம்ம்ம் ... ஆரம்பிச்சிடீங்க .. உங்களது பரவலான தேடல் இன்னும் மிக அருமையான கவிதைகளை உங்களின் உள்ளத்திற்கு தரும்.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..

சங்கர் said...

முதல் கவிதையின் தலைப்பு "வட போச்சே"ன்னு வச்சுக்கலாமா?

புலவன் புலிகேசி said...

//மாட்டிவிட்டஜெர்ரியை ரசித்தபின்தூங்கப் போனேன் -வடையை பொறியில் வைத்தபின்.
//

ம்ம்ம் அருமையான சிந்தனை தான்...

vasu balaji said...

/தப்பிபூனையை மாட்டிவிட்டஜெர்ரியை ரசித்தபின்தூங்கப் போனேன் -வடையை பொறியில் வைத்தபின்.
/

ராத்திரி பசிக்குதுன்னு வடையெடுக்கப் போய் கை மாட்டிகிச்சா=))

Madhavan Srinivasagopalan said...

என்னத்த சொல்லுறது!
இதுக்கெல்லாம் மிருகவதை தடுப்பு சட்டம் செல்லாதோ?