அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, December 28, 2009

வைகுண்ட ஏகாதசி - ஒரு விளக்கம்

ஒரு முன் டிஸ்கி: எல்லாரும் ஜோரா கை தட்டுங்க........இது என்னுடைய இருபத்தைந்தாவது பதிவு

இன்று (28.12.2009) எல்லா வைணவக் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி என்னும் புண்ணிய தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. பரமபத வாசல் திறப்பு என்னும் வைபவமும் நடைபெறுகிறது. பலரும் அதை சொர்க்க வாசல் திறப்பு என்றே கூறி வருகிறார்கள்.


இது குறித்து சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.அது சொர்க்க வாசல் அல்ல, பரமபத வாசல். வைணவ சித்தாந்தப்படி, புண்ணியம் செய்த ஆத்மாக்கள் வாழும் இடம் சுவர்க்கம். பாவம் செய்த ஆத்மாக்கள் வாழும் இடம் நரகம்.

இவை எல்லாவற்றையும் விட உயர்ந்த இடத்தில் இருப்பதுதான் பரமபதம். இதை வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். இங்குதான் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய திவ்ய மஹிஷியான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் நித்ய வாசம் செய்து வருகிறார். ஒரு ஆத்மா, தன்னுடைய புண்ணிய பாவங்களை எல்லாம் விட்டு ஒழித்தபின் ஸ்ரீமன் நாராயணனுடைய கருணையாலே, அந்த உயர்ந்த ஸ்தானமாகிய பரமபதத்தை அடைகிறான் என்று வைணவ சித்தாந்தம் கூறுகிறது.

சற்று விரிவாகக் கூறினால், சுவர்க்கம் சென்ற ஆத்மாக்களும் கூட மறுபடியும் இந்த பூமிக்கு வந்து பிறப்பெடுத்து திரும்பவும் கஷ்டப் பட நேரிடும். ஆனால், பரமபதத்தை அடைந்து விட்ட ஆத்மா ஒரு போதும் பூமிக்கு மீண்டும் வருவதில்லை. அது எப்போதும், அங்கேயே இருந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணனுடைய பாதங்களில் சேவை செய்து மகிழ்வோடு இருக்கிறது.

அதை நினைவூட்டும் விதமாகத்தான் இந்த பரமபத வாசல் திறப்பு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் எல்லா வைணவ திருக்கோயில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசி கொண்டாடும் எல்லா வைணவ அன்பர்களுக்கும் என்னுடைய வைகுண்ட ஏகாதசி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எண்ணப் படி, இந்த பூவுலகை நீக்கும் காலம் வரும்போது, அந்த எம்பெருமானின் திருப்பாதங்களில் சேவை செய்யும் பாக்கியத்தை உங்களுக்கு ஸ்ரீமன் நாராயணன் அருளட்டும் என்று நானும் வேண்டுகிறேன்.

கொஞ்சம், எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்களேன், ப்ளீஸ்!
 
டிஸ்கி : ஹிந்து மத திருவிழாக்களுக்கு வாழ்த்துகள் யாரும் தெரிவிப்பதில்லையே என்று அங்கலாய்த்துக் கொண்ட maddy73 அவர்களுக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன்.

10 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Mohan Kumar said...

25-க்கு வாழ்த்துக்கள். மேலும் பல நூறு இடுகைகள் இடுக. 25 என்பதாலேயே வைகுண்ட ஏகாதசி பற்றி எழுதினாயோ ?

cheena (சீனா) said...

அனைவருக்கும் வைகுண்ட ஏகாதசி நல்வாழ்த்துகள் - பரமபத சோபன படம் விளையாண்டிருக்கிறேன் - ஆகையால் ஸ்ட்ரெய்ட்டா பரமபதம் தான்

பிரியமுடன்...வசந்த் said...

25வது வெள்ளிவிழா இடுகைக்கு வாழ்த்துக்கள் பாஸ்

புலவன் புலிகேசி said...

25க்கு வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள்...

இந்த நிலைகளைப் பற்றி ஒரு யோகியின் சுய சரிதை புத்தகத்திலும் படித்திருக்கிறேன்..

kandathai sollugiren said...

பரமபதம் பற்றிய விளக்கம் அருமை! எத்தனை பேர் இது போல் உருப்படியான தகவல்கள் தருகிறார்கள்? நல்ல விளக்கம்! என். சக்தி. எழும்பூர்.

வானம்பாடிகள் said...

நல்ல விளக்கம். 25க்கு கை தட்டினேன். கேட்டுச்சா:))

maddy73 said...

I request the author to 'dedicate' this article to all those who believe in GOD & spiritual deeds.

Thanks for explaining the difference between 'Paramapatham'( ??) & 'Swargam'(Heaven).

Infact with above two, 'Narakam' is also in Hindu philosophy. Only hindu religion talks about 're-birth' (days after life in earth-swargam/narakam) in earth once again. Born with physical/mental handicap are believed to have acquired sin in previous birth as per hinduism.

These are what I heard from others/elders. If I am wrong, it may be corrected please.

Thanks the author once again for a nice article.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// 'Paramapatham'( ??) & 'Swargam'(Heaven).//

We can say "Paramapadham" as "the abode of Lord Sriman Narayana".

cho visiri said...

Indran is the head of Swargalogam Indran has a fixed Tenure and after the tenure is over he goes to SriVaikundam (Paramapadam) where Sriman Narayanan, the Paramaatma (with Sri lakshmi)accepts prayers of all other Atmaas.