அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, February 11, 2010

ஒரு இனிய நிகழ்வு குறித்து அறிவிப்பு

என்னுடைய பத்தாம் வகுப்பு நண்பனை வலைப்பூவின் மூலம் மீண்டும் தொடர்பு கொண்டதைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.  அதற்கு முன்னும் பின்னும் மேலும் பல இளமைக் கால நண்பர்களின் தொடர்பு கிடைத்திருக்கிறது.  இதுவரை கிட்டத்தட்ட முப்பது நண்பர்களின் தொடர்பு கிட்டியிருக்கிறது.

இந்தத் தொடர்பை எப்படி உபயோகமாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தபோது, ஒரு யோசனை தோன்றியது. நாங்கள் SSLC முடித்தது 1985 ல் என்பதால் அதன் வெள்ளிவிழாவை இந்த ஆண்டு கொண்டாடலாமே என்று நான் விரும்பினேன்.  அதன்படி நண்பர்களைத் தொடர்பு கொண்டபோது அனைவருமே அந்த ஐடியாவை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர்.

எனவே, வரும் மே மாதம் இரண்டாம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நாங்கள் படித்த பள்ளியில் நாங்கள் அனைவரும் கூடி வெள்ளிவிழாவைக் கொண்டாட முடிவு செய்துள்ளோம்.  எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அனைத்து ஆசிரியர்களையும் விழாவுக்கு அழைத்து மரியாதை செய்ய உள்ளோம் என்பதை மகிழ்வோடு அறிவிக்கிறேன்.

டிஸ்கி: மன்னார்குடி தேசிய மேனிலைப் பள்ளியில் படித்து 1985 ல் SSLC  முடித்த எவரும் என்னைத் தொடர்பு கொண்டு இந்த விழாவில் கலந்து கொள்ளலாம்

5 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

vasu balaji said...

நல்ல விஷயம். பாராட்டுகள்.

Chitra said...

நல்ல யோசனை. வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said...

//மன்னார்குடி தேசிய மேனிலைப் பள்ளியில் படித்து 1985 ல் SSLC//

1) மன்னார்குடி -- ok
2) தேசிய -- ok
3) மேனிலைப -- ok
4) பள்ளியில் -- ok
5) படித்து -- ok
6) SSLC -- ok
7) 1985 -- mismatch
for me.

I got 85.7 % only.. (6/7 matches)

ok ok nadaththunga.. nadaththunga..

ஜெட்லி... said...

உங்கள் எண்ணம் நிறைவாக அமைய வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

Good.