அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, February 14, 2010

சில பொது அறிவு கேள்வி பதில்கள்:

----------------------------------------------------------------------------------
உங்களுடைய  பொது அறிவினைச் சோதிக்கவே, இந்தப் பதிவு(?!)

1. சிவப்பு, வெள்ளை விளக்குகளின் பயன் என்ன?

2. (a+b)2=a2+2ab+b2    என்ற கணித விதி எதற்கு பயன்படுகிறது?

3. அவல், பொரிக்கடைகளின் பயன் என்ன?

4. புடலங்காயினால் ஒருவருடைய உயிரை காப்பாற்ற முடியும், எப்படி?

5. ஒருவனுடைய தங்கைக்கு கடுமையான ஜுரம், அப்போது அவனுடைய காதலி என்ன செய்தால் அவனுடைய அன்பைப் பெறலாம்?

பதில்கள் கீழே:


1. வில்லன் கொடூரமானவன் என்பதைக் காட்ட சிவப்பு விளக்கும், அவன் மனம் திருந்திவிட்டான் என்பதை நிரூபிக்க வெள்ளை விளக்கும் பயன்படுகின்றன.

2. ஹீரோவோ, காமெடியனோ தேர்வுக்குப் படிக்கிறார்கள் என்பதைக் காட்ட இந்த கணித விதிதான் பெரும்பாலும் பயன்படுகிறது.  சமயத்தில் வகுப்பறையில் ஆசிரியரும் இந்த கணித விதியைத்தான் கூறுவார்.

3. சந்தையில், தகராறுகள் வரும்போது, ஹீரோவோ, வில்லனோ, அவல், பொரிக்கடைகளில்  உள்ள பொருட்களைத் தட்டிவிட்டுத்தான் சண்டையைத் துவக்குவார்கள்.  இந்த சந்தை சண்டைக்கு, அவல் பொரிக்கடைகள் பெரிதும் உதவுகின்றன.

4. மேலே குறிப்பிட்ட மார்க்கெட் சண்டையின்போது, வில்லன் அரிவாளினால் வெட்ட வரும்போது, அங்கே உள்ள ஒரு கறிகாய் கடையில் தொங்கிக் கொண்டிருக்கும் புடலங்காயைத்  தான் வெட்டுவான். இதன் மூலம், மதிப்புமிக்க ஹீரோவின் உயிர் காப்பாற்றப்படும்.  (ஆனால், அதே சமயம், கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ வில்லனை வெட்டும்போது மட்டும் எந்த புடலங்காயும் காப்பாற்ற வராது.)

5. பக்கத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வேப்பிலை ஆடை அணிந்து கொண்டு ஒரு பாடல் பாட வேண்டும், அல்லது மஞ்சள் ஆடை அணிந்து ஈரத்துடன் அந்தக் கோவிலை அங்கப் பிரதட்சிணம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், தங்கையும் குணமாவாள், ஹீரோவும், அவள் காதலை புரிந்து கொள்வான்.

நன்றி : பிரபல (அல்லது பிரபலமாகாத) தமிழ் திரைப்படங்கள்.7 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ஸ்ரீராம். said...

இதுல ஏதோ விஷயம் இருக்கு போல...காதலர் தினத்துக்கும் இதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ...

Chitra said...

கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ வில்லனை வெட்டும்போது மட்டும் எந்த புடலங்காயும் காப்பாற்ற வராது.)

........ha,ha,ha,ha.....

cheena (சீனா) said...

நல்லாருக்கு - கேள்வி பதில்கள் - பொது அறிவுத் தேர்வு வைத்தால் 100 க்கு 100 நிச்சயம்

Madhavan said...

நா உண்மையிலே விடைகளை யோசிக்க ஆரம்பிச்சா.. இந்த மாதிரி 'மொக்கி'ட்டேன்களே சுவாமி .. நல்லா ரசிச்சேன்(நோன்துபோனேன்னு சொல்ல வெக்கமா இருக்கு)..
நீதி.. உலகத்துல எல்லோரையும் நம்மலப்போலவே நினைக்ககூடாது..

R.Gopi said...

இந்த சூட்சுமம் என்னான்னு தெரியலியே...

பார்ப்போம்... யார் யார் என்ன பதில் சொல்றாங்கன்னு...

சித்ராவின் கிளைமாக்ஸ் பதில் ரசித்தேன்...

kggouthaman said...

ஆஹா! நகைச்சுவையில் உங்களுக்கு நூற்றுக்கு நூறு!

அன்பரசன் said...

//3. சந்தையில், தகராறுகள் வரும்போது, ஹீரோவோ, வில்லனோ, அவல், பொரிக்கடைகளில் உள்ள பொருட்களைத் தட்டிவிட்டுத்தான் சண்டையைத் துவக்குவார்கள். இந்த சந்தை சண்டைக்கு, அவல் பொரிக்கடைகள் பெரிதும் உதவுகின்றன.//

Nice explanations..