அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, February 28, 2010

வாழ்க்கை - ஞாபக மறதி

"இங்கேதான் எங்கேயோ வச்சேன், எங்க போச்சுன்னு தெரியலையே?"


"ரொம்ப நல்ல பேருங்க, சட்டுன்னு மறந்து போச்சு"


"பாழாப் போன ஞாபக மறதி என்னை எப்புடி ஆட்டுவிக்குது?"


என்றெல்லாம் புலம்பித் தவிக்கிறீர்களா? இதோ, உங்களுக்குத்தான் இந்தப் பதிவு:


மறதி ஒரு கொடுமையான வியாதி.  வள்ளுவன் கூறுகிறான்,


நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்


(பொருள்: காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், தேவையற்ற தூக்கம் நான்கும் கெட்டுப் போகும் தன்மையுள்ளவர்கள் மிகவும் ஆசையோடு விரும்புகின்ற ஆபரணங்கள்)


ஆனால், மறதி ஒரு விதத்தில் நன்மையும் கூட.  ஆம், மறதி மட்டும் இல்லையென்றால், நம்முடைய பழைய சோகங்கள் நம்முடைய மனத்திலேயே தங்கி எதிர்காலத்தைப் பாழாக்கிவிடும்.  எனவே, ஞாபக சக்தியை நம்முடைய முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகி விடுகிறது.


சரி சின்னச் சின்ன விஷயங்களை மறக்காமல் இருப்பது எப்படி?


உண்மையைச்  சொல்லுங்கள்  - தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட உங்கள் பெயரை மறக்காமல் சொல்லுவீர்கள் அல்லவா? உங்களுடைய   காதலிபெயரைக் கேட்டால் உடனே சொல்லுவீர்கள், அல்லவா? (மனைவி ஒருவரிடம் தவிர?!)


காரணம், நம்முடைய பெயர், நம் காதலி பெயர் போன்றவை நம் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றுவிடுகின்றன.  அதை நினைக்கும்போதெல்லாம், நம் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.  யாரோ ஒருவர் நம் பெயர் கொண்டவர் ஒரு சாதனை செய்யும்போது, அந்தப் பெயரை ஊடகங்களில் பார்க்கும்போது எதோ நாமே அந்த சாதனையைச் செய்து விட்டதுபோல் ஒரு மகிழ்ச்சி.  காரணம், நாம் நம் பெயர் மேல் வைத்துள்ள பிரியம்.  நமக்குப் பிரியமான எதுவுமே நமக்கு மறப்பதில்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட நாள், நேரத்தைச் சொல்லி ஒரு இடத்துக்கு வந்தால் லட்ச ரூபாய் கொடுப்பதாக யாராவது சொன்னால், அந்த இடம், நாள், நேரம் எப்போது நமக்கு மறக்காது அல்லவா? 

எனவே, செய்யும் செயலைப் பிரியத்துடன் செய்யும் போது, நாம் அதை மறப்பதில்லை.  அந்த செயலின் விளைவு மகிழ்ச்சிகரமானதாக இருந்தால், அதுவும் நினைவில் என்றும் நிற்கும்.


பொதுவாகவே, செய்யும் செயலை
  • அன்புடன் செய்யுங்கள் - நமக்காக நம்முடைய விருப்பத்துக்காக செய்கிறோம் என்ற எண்ணத்தோடு செய்தால் அது எப்போதும் மறக்காது. 
  • ஆர்வத்தோடு செய்யுங்கள் - செய்யும் செயல் நமக்கு நன்மையைத் தரப் போகிறது என்ற எண்ணமே ஆர்வத்தை அதிகரிக்கும்
  • இன்முகமாகச் செய்யுங்கள் - உங்கள் உள்ளத்தை மகிழச் செய்யும் காரியம் என்ற எண்ணத்தை வளர்த்தால் தன்னால் இன்முகத்தோடு செய்ய முடியும்.
  • உண்மையாகச் செய்யுங்கள் - ஏதோ கடமைக்கு செய்யாமல், உள்ளத்தை ஊன்றிச் செய்யுங்கள், அதுதான் முக்கியம்.
  • ஊக்கத்தோடு செய்யுங்கள் - இது நமக்கு பேரும் புகழும் பெற்றுத் தரும் செயல் என்ற எண்ணத்தோடு செய்ய வேண்டும்.
  • எடுத்துச் செய்யுங்கள் - இது நம்முடைய கடமை, பிறர் சொல்லித்தான் செய்ய வேண்டும் என்ற தேவை இல்லை, நாமே செய்ய வேண்டும் என்று உரிமையோடு செய்யுங்கள்.


பொதுவாக, மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், நகராட்சிக் கட்டணம், எரிவாயு சிலிண்டர் போன்றவற்றுக்குத் தான் ஞாபகம் இருப்பதில்லை. அதற்கு, அலைபேசி இருப்பதால், அதில் நினைவூட்டல் வசதி இருக்கிறது - அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  (ஆனால், ஞாபகமாக அவ்வப்போது செல் பாட்டரி சார்ஜ் செய்ய வேண்டும்).



காலப் போக்கில் செல் நினைவூட்டல் இல்லாமலேயே இவை ஞாபகத்தில் இருக்கும்.

இன்னொரு விதத்தில் நம் நினைவில் இருக்கவேண்டியதை நாள்காட்டியிலோ, மாத காலண்டரிலோ எழுதி வைக்கலாம். (ஆனால் மறக்காமல் தேதி கிழிக்கவேண்டும்).  

எனவே, ஞாபக சக்தியை வளர்ப்போம், மறதியை வசதியாய் பயன்படுத்துவோம், வாழ்வில் உயர்வோம்!

டிஸ்கி 1 : என்னுடைய இரு பதிவுகளுக்கான கால இடைவெளிக்கும் இந்தப் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.

டிஸ்கி 2 : பதிவைப் படிச்சதுக்கு நன்றி. மறக்காம, பின்னூட்டம் போட்டுட்டுப் போங்க, ரொம்ப ரொம்ப நன்றி! 

8 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ஸ்ரீ. வரதராஜன் said...

So Tou accept that there was considerable time gap since your last posting

vasu balaji said...

மிக நல்ல பகிர்வு. நன்றி

ஸ்ரீராம். said...

நான் எப்பவுமே என்ன செய்யணுமோ அதை ஒரு பேப்பர்ல எழுதி சட்டைப் பைல வச்சுட்டு, அதை ஞாபகமா எடுத்துப் பார்க்கனும்னு செல்லுல ரிமைன்டர் போட்டு ரிமைன்டர் பார்க்கணும்னு காலண்டர்ல எழுதி வச்சி, காலண்டரைப் பார்க்கணும்னு சுவர்ல எழுதிட்டு, சுவரைப் பார்க்கணும்னு மனைவி கிட்ட ஞாபகப் படுத்தச் சொல்லிட்டு, மனைவி கிட்ட என்ன விஷயம்னு கேட்கணும்னு இன்னொரு துண்டு பேப்பர்ல எழுதி சட்டையோட இன்னொரு பாக்கட்ல வச்சுடுவேன்.

ஒண்ணே ஒண்ணு ... அந்த இன்னொரு துண்டு பேப்பரை எடுக்கணும்னுதான் மறந்து போய்டும்

Prathap Kumar S. said...

நல்ல பகிர்வுங்க... எனக்கு செம மறதி... மதியம் சாப்பாடு ஆர்டர் பண்ண மறந்து சிலநாட்கள் மதியம் பட்டினி இருந்திருக்கேன்... நீங்க சொன்னமாதிரி முயற்சிக்கிறேன்... :)

ஸ்ரீராம் சொன்னதை படிச்சு சிரிக்காம இருக்க முடில... இது முத்திப்போன மறதிங்க..ஒண்ணு பண்ண முடியாது :)

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல வழிமுறைகள் பெ.சொ.வி.வி

ஸ்ரீராம் செம்ம காமெடி...

:))))))

CS. Mohan Kumar said...

பதிவு அருமை.

ஸ்ரீராம் பின்னூட்டம் ஹா ஹா ஹா

Chitra said...

ஆனால், மறதி ஒரு விதத்தில் நன்மையும் கூட. ஆம், மறதி மட்டும் இல்லையென்றால், நம்முடைய பழைய சோகங்கள் நம்முடைய மனத்திலேயே தங்கி எதிர்காலத்தைப் பாழாக்கிவிடும். எனவே, ஞாபக சக்தியை நம்முடைய முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகி விடுகிறது.

.......... :-)
பதிவு அருமை.

Anonymous said...

Nandri. Unga Pathivai nan one month ah padichutu varen, intha pathivai padikum pothu oru arumaiyana nigalvu niyabagam varuthu, athai ungalidam pakirnthu kolla asai padukiren. oru samayam krishnar um arjunarum anthisayum velai la nadanthu poitu irunthaanga...appo arjunar krishnar kita athu eppadi krishnar ellathuyume niyabgam vechu iruka...entha ugam la ethu nadanthallum marakama iruka nu kekurar...athuku krishnar, paarthava unnaku Subhadra eppothu muthan muthalil paarthaai nu niyabagam iruka nu ketar, arjunan naal, neram entha matri tharunathil partathu muthar kondu solla arabithu vitaan.udaney krishnar, nee Subhadra vai paarthu pala varudam agiyum eppadi unnaal maraka mudiyavila intha nikalvai endru ketka, atharku eppadi maraka mudiyum antha inimaiyana tharunathai, naan rasitha antha nalai eppadi maraka mudiyum sonnar. athu pola thaan arjuna nanum, oru oru nigaivai yum rasithu, inimaiyaga athai paarkiren nu bathil koorinaar. thanai vaithey arumaiyana vilakam kodutha krishnarai parthan vanangi vidaipetran. nanum vanagi menmellum avanidam katrukolvomaga. Nandri Swami