அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, March 14, 2010

அநேகமாகத் தெரிந்த கதையும் அவசியம் தெரிய வேண்டிய பின்கதையும்

--------------------------------------------------------------------

தெரிந்த கதை : 

ஒரு குல்லாய் வியாபாரி கூடை நிறைய குல்லாய்களை வைத்துக் கொண்டு வியாபாரத்துக்கு சென்றான். நண்பகல் வெயில் தாங்காமல் அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் இளைப்பாறினான். சிறிது நேரம் கண்ணயர்ந்தபின் திடீரென்று விழித்தவன் அதிர்ந்தான்.

  
 பக்கத்தில் கூடையில் வைத்திருந்த குல்லாய்களெல்லாம் காணவில்லை. மேலே நிமிர்ந்து பார்த்தால் மரத்தில் அமர்ந்திருந்த குரங்குகளின் தலையில் குல்லாய்கள். ஒரு கல்லை எடுத்து அவற்றின் மேல் வீசினான். பதிலுக்கு குரங்குகளும் மரத்திலிருந்த காய்களை எடுத்து வீசின. சிறிது நேரம் யோசித்தான். பின் தன் தலையில் இருந்த குல்லாயை தரையில் வீசினான்.  குரங்குகளும் தம் தலையில் இருந்த குல்லாய்களை எடுத்து தரையில் வீசின.  வியாபாரியும் மகிழ்ச்சியோடு அவற்றை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான். 


தெரிய வேண்டிய பின்கதை :

சில காலம் சென்றன. இப்போது அந்த வியாபாரிக்கு ஒரு பேரன் இருந்தான். அவனிடம் தன்னுடைய அனுபவத்தைக் கூறிய அவன், இந்த குரங்குகளிடம் ஏற்பட்ட அனுபவத்தையும் விவரித்தான்.  பேரனும் இதனை மனத்தில் பதிய வைத்துக் கொண்டான்.  சிறிது நாட்கள் கழித்து பேரன் தன் தலையில் குல்லாய்க் கூடையை வைத்துக் கொண்டு விற்பனைக்கு சென்றான். நண்பகல், ஒரு மரத்தின் நிழலில் இளைப்பாறினான். கண்விழித்துப் பார்த்தால், கூடை காலி, ஆம், குல்லாய்கள் மரத்தின் மேலிருந்த குரங்குகளின் தலையில்.  யோசித்துப் பார்த்த அவனுக்கு தாத்தாவின் யோசனை ஞாபகம் வந்தது.  சட்டென்று தன் தலையில் இருந்த குல்லாயை தரையில் வீசினான்.  குரங்குகள் சும்மா இருந்தன. திரும்பவும் எடுத்து வீசினான், இப்போதும் குரங்குகள் சும்மா இருந்தன.

அலுத்துப் போய் தரையில் உட்கார்ந்தான்.

அப்போது ஒரு குரங்கு சத்தமாகக் கூறியது :
"உனக்கு மட்டும்தான் தாத்தா கதை கூறுவாரா? எங்கள் தாத்தா அவர் ஏமாந்த கதையை எங்களுக்கு கூற மாட்டாரா?"

5 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan said...

காலம் செல்ல செல்ல, குரங்கு கூட நல்லா think செய்யுறது.. வேற என்னத்தச் சொல்ல..?

ஸ்ரீராம். said...

குரங்கிலிருந்து பிறந்தவன்...............மனிதன்.

Chitra said...

:-)

டக்கால்டி said...

எங்கே பேரன் வீசின அந்த குல்லாவையும் குரங்கு எடுத்துடுச்சுனு முடிச்சிடுவீங்களோனு நெனச்சேன்..ஆனால் இறுதியில் வேறு மாதிரி தாத்தா மனிதனையும் , குரங்கையும் வெச்சு சிரிக்க வெச்சுட்டீங்க பாஸ்...
சூப்பர்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்த பேரன் நீங்கதான?