அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, March 24, 2010

ஸ்ரீ ராம நவமி

----------------------------------------------------------------------

அனைவருக்கும் இனிய ஸ்ரீ ராம நவமி  வாழ்த்துகள்!


வடுவூரில் சேவை சாதிக்கும்
சீதா லக்ஷ்மண, ஹனுமத் சமேத ஸ்ரீ கோதண்ட ராமர்.

ராமன் என்ற பெயர் காரணம் என் அப்பா கூறுவார் :
ரம்ய இதி ராம - அனைவருக்கும் இனிமை தருபவன் என்று பொருள் கொண்ட பெயர் ராம நாமம்.

"இன்று போய் நாளை வா " என்று ராவணனை கருணையோடு விட்ட இடத்தில் நினைத்துப் பாருங்கள். "பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே" என்ற பாரதி வரிகளுக்கு இதை விட பொருத்தமான இடம் எனக்கு தோன்றவில்லை.

வேடர் குல குகனையும், விலங்கு அனுமனையும் அசுரர் குலத்தில் உதித்த விபீஷணனையும் தம்பிகளாக ஏற்றுக் கொண்டான். சமத்துவம் காண்பதில் எல்லோருக்கும் முன்னோடி ராமன்.கீழ்  ஜாதியில் பிறந்த சபரி என்ற கிழவி ஊட்டிய எச்சில் பழங்களை அன்போடு ஏற்றுக் கொண்ட பண்பாளன், ராமன்.


"தந்தை சொல்லித்தான் போக வேண்டும் என்பதில்லை, நீங்கள் சொன்னாலும் நான் காட்டுக்குப் போகத் தயார்" என்று கைகேயியிடம் கூறுகிறானே, ராமன், யாருக்கு அவ்வளவு பக்குவம் வரும்?

போர் எல்லாம் முடிந்து, தசரதர் வானிலே தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டபோது,
"கைகேயியை மனைவி அல்ல என்றும் பரதனை மகன் அல்ல என்றும் நீங்கள் துறந்ததை மறந்து விட்டு அவர்களை மனைவி, மகனாகக் கொள்ள வேண்டும்" என்று வரம் கேட்ட ராமன், சக மனிதனை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கும் உதாரண புருஷனாகிறான்.

இன்னும் என்னென்னவோ சொல்லலாம், மொத்தத்தில் ராமன் கதை எல்லோருக்கும் ஒரு சிறந்த அறிவு நூல் என்பதில் ஐயப்பாடு இல்லை.

பார்வத் உவாச
கேனோ பாயேன லகுனா விஷ்ணோர் நாம சஹஸ்ரகம்
பட்யதேர் பண்டியதே நித்யம் ச்ரோதுமிச்சாம்யகம் பிரபோ!   


சிவனிடம் பார்வதி கேட்கிறாள், "இந்த அவசர யுகத்தில் நாராயணனுடைய ஆயிர நாமங்களையும் சொல்ல நேரம் இல்லாதபோது என்ன செய்வது?"

ஈஸ்வர உவாச :
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்த்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே.

சிவன் கூறுகிறார் "ஆயிர நாமங்களுடைய தத்துவங்களையும் ராம என்ற நாமம் கொண்டுள்ளது. எனவே, ஒருவன், ராம நாமத்தை மூன்று முறை ஜபிப்பதால் அந்த ஆயிர நாமங்களையும் ஜபித்தவன்  ஆகிறான்"

ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம்
நம்பிய பேருக்கு எது பயம்?

8 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan said...

Thanks for the arrangment of Rama Dharshan.. Couple of days back we had 'Krishna' Dharshan (idlyvadai) thanks to you.

The word 'Rama' is so simple to pronouce.. Great

Madhavan said...

ஸ்ரீ ராமநவமி வடை எனக்குத் தானா.. நல்ல (வர) பிரசாதம்.

ஸ்ரீராம். said...

ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்... .

RVS said...

I am rvsm here. Where are you? How are you?

Pl. do visit

http://mannairvs.blogspot.com

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// RVS said...
I am rvsm here. Where are you? How are you?

Pl. do visit

http://mannairvs.blogspot.com//

I visited your blog and posted a comment also.

Nice blog.

Keep it up, RVS(M)

R.Gopi said...

அனைவருக்கும் ஸ்ரீராமநவமி வாழ்த்துக்கள்.........

ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்...

ராம பக்தன் said...

ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்... . If any one has the link for this song please post. I would be greatful.