அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, May 27, 2010

யதார்த்தக் கதைகள் - 3

"இன்னும் எத்தனை நேரம்தான் நிக்கிறதுன்னு தெரியலையே", முன்னால் நின்றிருந்த நபர் சலித்துக் கொள்ள, பின்னால் நின்றிருந்தவர் உறுமினார்,"இவங்க எப்பவுமே இப்படித்தான் சார், நம்மோட அவசரம் தெரியாது". இடம் : பேங்க் கேஷ் கவுண்டர்.

"அதுக்காக, இப்படியா? நானும் எத்தனையோ தரம் இங்க வந்திருக்கேன் சார், எப்ப வந்தாலும் உடனே வேலை முடிஞ்ச சரித்திரமே இல்லை. நம்ம டர்ன் வரும்போதுதான் எதாவது வேலை வரும், கிளம்பிப் போய்டுவாங்க"

"ஒரு நாளாவது காலைல பத்து மணிக்கு இவங்க வந்து பாத்திருக்கீங்களா? வர்றதே பத்தரைக்கு. கவுண்டர் முன்னாடி வரும்போது பதினோரு மணிக்கு. சரியா அரை மணி நேரம் தான் உக்காந்திருப்பாங்க. அப்புறம் வெளிய போய் ஒரு மணி நேரம் கழிச்சு வருவாங்க. கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாதுங்க".

"இவங்களைக் கேக்க ஆள் கிடையாதுன்னுதான் இந்த ஆட்டம் ஆடுறாங்க. நம்ம ஆளுங்களைச் சொல்லணும் சார், இவ்வளவு நேரம் நாம பேசிக் கிட்டிருக்கோமே, யாராவது துணைக்கு வர்றாங்களா? அவங்களுக்கு அவங்க வேலை தான் பெரிசு."

"உலகமே அப்படித் தான் சார் இருக்கு. யாருக்கும் சின்சியாரிட்டி இல்லை. வேலைல அக்கறை இல்லை"

ஒரு வழியாக கவுண்டர் அருகே வந்து வேலை முடிந்ததும் இருவரும் வெளியே வருகிறார்கள்.

"அப்புறம் சார், உங்களை சந்தித்ததுல ரொம்ப சந்தோசம்."

"எனக்கும்தான் சார். நீங்க என்ன செய்யறீங்க?"

"தாலுக்கா ஆபிஸ்லதான் சார் அசிஸ்டண்டா இருக்கேன். அப்ப நீங்க?"
"நான் கூட ரேஷன் கடை வேலைக்கு நடுவில தான் இங்க வந்திருக்கேன்."

"அப்புறம் பார்ப்போம், சார். ஆபிஸ்ல ப்ரீயா இருக்கும்போது உங்ககிட்ட பேசறேன், வரட்டுமா? அடுத்து முனிசிபாலிட்டில வேற ஒரு வேலை இருக்கு. நாளைக்கு பெர்மிஷன் போட்டுட்டு அங்கதான் போகணும்."

12 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

அனு said...

உங்க சொந்த கதை நல்லா இருக்குங்க..

ஆனா, யதார்த்தத்தை இப்படி நகைச்சுவை ஆக்கிட்டீங்களே..

ஸ்ரீராம். said...

ஊருக்கு உபதேசம்...

வெங்கட் said...

// ஆபிஸ்ல ப்ரீயா இருக்கும்போது உங்ககிட்ட
பேசறேன், வரட்டுமா..? //

ஆபீஸ்ல ப்ரீயா இருக்கும்போது
உங்க Friend-கிட்ட பேசுனீங்களா..? இல்லையா.?
அதை சொல்லவே இல்ல..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

வெங்கட் said...
//
ஆபீஸ்ல ப்ரீயா இருக்கும்போது
உங்க Friend-கிட்ட பேசுனீங்களா..? இல்லையா.?
அதை சொல்லவே இல்ல..
//
நாங்கள்லாம் ஆபீஸ்ல பிசியா இருக்கும்போதே பேசுவோமில்லே!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அனு said...
உங்க சொந்த கதை நல்லா இருக்குங்க..

ஆனா, யதார்த்தத்தை இப்படி நகைச்சுவை ஆக்கிட்டீங்களே..
//

அவ்வ்வ்வ்.........
கதை சொன்னா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது.

cheena (சீனா) said...

அன்பின் பெயர் சொல்ல விரும்பவில்லை

யதார்த்தமாய் எழுதப்பட்ட யதார்த்தக் கதை நன்று நன்று - நாட்டில் தினந்தினம் நடப்பவை தான் -ம்ம்ம்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

வெங்கட் said...

நீங்க பதிவு சீரியஸா போட்டாலும்..,
உங்க கமெண்ட் நல்ல ஜோக்கா இருக்கு..

ஆபீஸ்ல பிசியா இருப்பேன்னு
சொன்னீங்க பாருங்க...
அந்த ஜோக்கை கேட்டு என்னால
சிரிப்பை அடக்க முடியல..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இவனுகளை எல்லாம் நடுரோட்டுல நிக்க வெச்சு, செருப்ப சாணியில முக்கி அடிக்கணும் ..


தொடர்ந்து இந்த மாறி பொறுப்பில்லாத மனிதர்களைப் பற்றி எழுதுங்கள் நண்பரே...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...
நீங்க பதிவு சீரியஸா போட்டாலும்..,
உங்க கமெண்ட் நல்ல ஜோக்கா இருக்கு..

ஆபீஸ்ல பிசியா இருப்பேன்னு
சொன்னீங்க பாருங்க...
அந்த ஜோக்கை கேட்டு என்னால
//

போன் பேசறதே பிசிதான? அப்புறம் என்ன இப்படி ஒரு கமென்ட்?

Madhavan said...

நீங்க ரொம்ப ஓல்டா சார்..?
இப்பல்லாம்.. பெரும்பாலான வங்கி வேலைகளை ஆண்(?)-லயணுல செய்திடலாம்( ஹி.. ஹி.. ஆபீச்லேர்ந்துதாம்..)..
நாங்கலாம் ஆபீஸ் டயத்த இந்த மாதிரியான வேலைக்கெல்லாம் வெஸ்ட் செய்யாம,
பிளாக் எழுதுறது.... பின்னூட்டம் போடுறது.. முக்கியமா... ஷேர் மார்கெட்டுல விளையாடுறது.. இதெல்லாம் தாம் செய்யுவோம்..

பின் குறிப்பு : நகைச்சுவையா நீங்க(நா கூட) சொல்லுறது, நல்லா இருக்குது..

முனைவர்.இரா.குணசீலன் said...

அழகான வாழ்க்கைப் பிரதிபலிப்பு
அருமை!!

முனைவர்.இரா.குணசீலன் said...

நண்பா நீங்க ஏன் இந்த சிறுகதைப் போட்டியில் கலந்துகொள்ளக் கூடாது...?

http://gunathamizh.blogspot.com/2011/03/blog-post_23.html