அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, May 16, 2010

சண்டேனா ஒண்ணு - அட்சய திருதியை

இன்று தங்கம் வாங்கினால் வளம் கொழிக்குமா?  விடை டிஸ்கியில்.
இன்று அட்சய திருதியை எனப்படும் ஒரு புனித நாள்(நம்பறவங்களுக்கு மட்டும்). வடமொழியில் அட்சய என்றால் குறைவற்ற எனப் பொருள். இன்று தொடங்கும் எந்தத் தொழிலும் நன்றாக வளரும் என்று ஒரு நம்பிக்கை.

என்னைப் பொறுத்தவரை அதிர்ஷ்டத்திற்கும் உழைப்பிற்கும் ஒரு ஒற்றுமைதான் - அதாவது இரண்டுமே கண்ணுக்குத் தெரியாது. ஆனால் வேறுபாடுகள் பல உள்ளன:-
1 . அதிர்ஷ்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பலர் உண்டு - உழைப்பின் பெருமையை உணராதார் அநேகமாக இல்லை.

2 . அதிர்ஷ்டத்தால் பலன் விளைந்தாலும் அது நீடிக்குமென சொல்ல முடியாது - உழைப்பின் பயனாய் கிடைக்கும் எதுவும் நாம் கவனமாய் இருக்கும்வரை நம்மிடமே நீடிக்கும்.

3 . அது இஷ்டத்துக்கு வருவதால்தான் அதன் பெயர் அதிர்ஷ்டம். அதேபோல், அது இஷ்டத்துக்கு போய் விடவும் வாய்ப்பு உண்டு. ஆனால் உழைப்பின் கதி அப்படி இல்லை. நம் இஷ்டத்துக்கு உழைத்தால் நம் இஷ்டத்துக்குப் பொருள் ஈட்டலாம்.

எனவே, அட்சய திருதியை அன்றுதான் என்று இல்லை, எந்த நாளுமே நாம் தீவிரமாக உழைத்தால் நல்ல வழியில் செல்வம் ஈட்டலாம், சுகமாய் வாழலாம்.

எனவே, உழையுங்கள்...உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்துங்கள்! 

ஒரு கவிதை (என்னிக்கோ ஒரு நாள் எழுதறேன், படிச்சுத் தான் பாருங்களேன்!)

அதிர்ஷ்டம்
நிச்சயம் 
பலன் தரும்
- உழைக்கும்
ஜோசியக்காரனுக்கு!

டிஸ்கி : அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், நிச்சயம் வளம் கொழிக்கும் - விற்பவர்களுக்கு!

5 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

பனித்துளி சங்கர் said...

இறுதியில் கவிதையில் அழுத்தமாக சொல்லி இருக்கிறீர்கள் . அருமை !

Madhavan Srinivasagopalan said...

இன்றைய தினம் தங்கம் வாங்குவது என்பது, வியாபாரநோக்கில் அமைந்து விட்டது.
அக்ஷய என்பதற்கு நீங்க சொல்லிய அர்த்தம் அறிந்தால், எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யலாம் இன்று.

வெங்கட் said...

கவிதை சூப்பர்..
நாலே வரியில் சும்மா
" நச்னு " இருக்கு..

கணக்கு தணிக்கை said...

\\உழைக்கும்
ஜோசியக்காரனுக்கு!\\
சூப்பர் வரிகள்.

கணக்கு தணிக்கை said...

\\உழைக்கும்
ஜோசியக்காரனுக்கு!\\
சூப்பர் வரிகள்.