அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, June 27, 2010

கவிதை

மாற்றமில்லா மாற்றம்.

ஏனோ தெரியவில்லை,

நேற்று வரை மலராய் தெரிந்ததெல்லாம்
இன்று முள்ளாய் தெரிகிறது.

அன்புடன் பேசும் மனைவியிடம்கூட
ஆத்திரம் வருகிறது.

கொஞ்சிப் பேசிய
குழந்தையிடம் கூட
"சீ! போ சனியனே "

டி.வி. பார்க்க பிடிக்கவில்லை,
பேப்பர் படிக்க நேரமில்லை,
எத்தனை யோகா செய்தாலும்
எள்ளளவு கோபம் குறையவில்லை.

ஒவ்வொரு திங்கட்கிழமையும்
இப்படித்தான் ஆகிறது -
"ஆபீஸ் போகனுமே"

டிஸ்கி : நானும் பிரபல பதிவர் ஆக விரும்பினேன். அதுதான் இந்த மீள் பதிவு.
  

11 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

malgudi said...

எளிய அழகான வரிகள்.
வாழ்த்துக்கள்.

அனு said...

சேம் ப்ளட் :(

என்னுடைய attendanceல பாத்தா நான் எடுத்த முக்கால்வாசி லீவ் mondayவா தான் இருக்கும்..

மீள் பதிவு என்றாலும் நான் இப்பொழுது தான் முதல் முறை படிக்கிறேன்.. நல்லா இருக்குது..

Madhavan said...

oh ho.. repeating the post after 4-5 months is called 'meel pathivu'..?

I am not convinced..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// கொஞ்சிப் பேசிய
குழந்தையிடம் கூட
"சீ! போ சனியனே " //

கொஞ்சிப் பேசிய குழந்தை
" சீ.! போ ராட்சஷனேன்னு
சொன்னா பரவாயில்லையா..?

அவங்களும் திங்கட்கிழமை
School-க்கு போறாங்கல்ல..

வெங்கட் said...

@ அனு.,

// என்னுடைய attendanceல பாத்தா நான்
எடுத்த முக்கால்வாசி லீவ் mondayவா
தான் இருக்கும்.. //

லீவ் எடுக்கறதுன்னு ஆயிடிச்சி..
அதென்ன முக்கால்வாசி லீவ்..
முழுசா லீவ் எடுக்க வேண்டியது தானே..!!

வானம்பாடிகள் said...

:)). ஆனா இன்னைக்கு ஞாயிறுதானே:))

Chitra said...

Monday Blues!!! :-)

மோகன் குமார் said...

நான் இப்ப தான் முதல் மீள் பதிவு போட்டேன்; என்னை கிண்டல் பண்றீங்களா? :))

வழிப்போக்கன் said...

monday ஸ்கூல் போற உங்க பொண்ணு உங்கள திடாம இருந்தா சரி

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Congrats!

Your story titled 'கவிதை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 28th June 2010 06:44:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/287462

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
//

Thank you voters

ஸ்ரீராம். said...

திங்கள் திண்டாட்டங்கள்...!