அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Friday, June 4, 2010

சுற்றிலும் பார்ப்போம், சுத்தம் காப்போம்

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது பழமொழி. சுற்றம் பார்க்கா விட்டால் குற்றம் என்பது புதுமொழி. ஆம், நம்முடைய சுற்றுப்புறம் எப்படி இருக்கிறது என்பதை ஒட்டியே நம்முடைய வாழ்க்கை இருக்கிறது.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. சுற்றுப்புறம் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருப்பது மிகவும் அவசியம்.

இந்த சுற்றுச் சூழல் என்பது வெறும் குப்பை இல்லா இடம் என்பது மட்டும் அல்ல. இன்றைய வளர்ந்துவிட்ட அறிவியல் யுகத்தில் கரிப் புகை மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளையும் ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். Green House Effect என்பது பற்றி நிறைய சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.


1972 ம் ஆண்டு ஜூன் மாதம் 5 முதல் 16 முடிய நடை பெற்ற ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுப் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி சுற்றுச் சூழல் நாளாக கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது.


நம்மால் முடிந்த வரை பூமி வெப்பத்தைக் கட்டுப் படுத்துவோம். பிளாஸ்டிக் கழிவுகளையும் கரிப் புகையையும் தவிர்ப்போம். நம்முடைய வருங்கால சந்ததிக்கு ஒரு வளமான எதிர்காலத்தைத் தர முனைவோம். முடிந்தவரை ஒவ்வொருவரும் ஒரு மரக் கன்று நட்டு வனம் வளர்ப்போம்; மழை பெறுவோம்.



HAPPY WORLD ENVIRONMENT DAY





1 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

krpsenthil said...

good posting..

Congrats..