இந்தப் போட்டோ நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எடுத்தது. இதில் நான் தரையில் வலது ஓரத்தில் அமர்ந்திருக்கிறேன். அந்தக் காலத்திலேயே தியானத்தில் இருப்பது போல் போஸ் கொடுத்திருக்கிறேன் அல்லவா? (சாப்பாட்டுப் பந்தியில் கூட இப்படித்தான் உட்காருவார்கள் என்று யாரும் பின்னூட்டம் இட வேண்டாம்)
"அந்தக் காலத்திலே நாங்கல்லாம் படிக்கும்போது" என்று சில பெரியவர்கள் புலம்புவதற்கான காரணம் இந்தப் போட்டோவைப் பார்க்கும்போது புரிகிறது.
"இனியும் வருமோ அந்த வசந்த காலம்!"
படித்தேன்,
பணியில் இணைந்தேன்,
மணம் புரிந்தேன்
மழலைகள் பெற்றேன்
மகிழ்ச்சியுற்றேன்,
காலம்தான்
கணப்பொழுதில்
எப்படிச் செல்கிறதென!
நிழற்படம் கண்டேன்,
நினைவுகள் பின்னோக்க,
வருத்தமுற்றேன்,
நிகழ்ந்த காலம்
இனி
நிகழாதே என!
டிஸ்கி : பழைய நினைவுகள் வந்தால், கவிதை நடையில் சொல்ல வேண்டும் என்று ஒரு உந்துதலில் இந்த கவிதை(?!) யாரும் சண்டைக்கு வர வேண்டாம்.
6 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
யாரும் சண்டைக்கு வர வேண்டாமா..
என்ன ஒரு தன்னடக்கம்..
///
நிழற்படம் கண்டேன்,
நினைவுகள் பின்னோக்க,
வருத்தமுற்றேன்,
நிகழ்ந்த காலம்
இனி
நிகழாதே என!
///
அருமையான வரிகள்.. ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க..!
தொடர்ந்து எழுதுங்க..
அட.. இந்த படத்தைப் பத்த வொடனே எனக்கு என்னோட பள்ளிக்கூட நாளு நெனைப்பு வந்துச்சி.. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு, இங்குண கமெண்ட்டு கூடப் போடாம போயிட்டேன்.. இப்ப 'ரிபீட்டாய்' வந்துகுனு படத்தப்போட்ட உங்களை பாராட்டுறேன்..
படித்த காலம், வளர்த்த இடங்களே.... இனிமை (இளமை) நினைவை இசைக்கும் இசைக்கும் புகைப் படம்...
NHSS-ல் படிக்கும்போது எடுத்த படமா? ஆசிரியரின் பெயர் என்ன?
//ரவிச்சந்திரன் said...
NHSS-ல் படிக்கும்போது எடுத்த படமா? ஆசிரியரின் பெயர் என்ன?
//
இந்த படம் எடுத்த கல்வி ஆண்டு :1980-81
ஆசிரியர் திரு சற்குணம் அவர்கள். நீங்கள் இந்தப் பள்ளி பழைய மாணவரா? ஆம் என்றால், எந்த வருடம் என்ன படித்தீர்கள்? (சொன்னால், ஒரு புதிய நட்பு கிடைத்த மகிழ்ச்சி, அவ்வளவுதான்)
சேம்.. பிளட்.. :)
( கவிதையெல்லாம் பலமாயிருக்கு..
ரொம்ப மூளைகாரரா இருப்பீர் போல..)
Post a Comment