அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, July 27, 2010

சவால் சமையல்

இது என் நண்பனோட அனுபவம்.

ஒரு முறை அவனுக்கும் அவன் மனைவிக்கும் சின்ன சண்டை. வாக்குவாதம் முற்றி அவனை சமைக்கச் சொல்லி சவால் விட்டுட்டாங்க. இவனும் எத்தனையோ சமைத்துப் பார் புத்தகங்கள் இருக்கற மிதப்புல ஒத்துகிட்டான்.

புத்தகம் வாங்கி வந்து அதுல இருக்கற மாதிரி பொருட்களையும், காய்கறிகளையும் தயார் செய்து வச்சிகிட்டான்.

அதுல சொல்லி இருக்கற மாதிரியே சில பல விகிதங்களில் எல்லாத்தையும் கலந்து அடுப்பில வச்சு சமைக்க ஆரம்பிச்சிருக்கான்.

வச்சுட்டு வெயிட் பண்றான், பண்றான், சமையல் ரெடி ஆகலை. வெறுத்துப் போய் மனைவிய சமாதனம் செஞ்சு (எஸ், கால்ல விழறதைதான் அப்படி நாசுக்கா சொல்லியிருக்கேன்) அவங்களை கூப்பிட்டு என்ன ஆச்சுன்னு பாக்க சொன்னான்.

அவங்களும் அவனை மன்னிச்சு ("தீபாவளிக்கு ஐயாயிரம் ரூபாயில பட்டுப் புடவை வாங்கித் தரனும்") கிச்சனுக்கு வந்தாங்க. வந்து பாத்துட்டு சொன்னாங்களாம்,

"சமைக்கணும்னா மொதல்ல அடுப்பைப் பத்த வைக்கணும்"

டிஸ்கி : பல்பு வாங்கற விஷயமா இருக்கும்போது எப்பவும் நண்பன் பேர்லதான் போடணும், இது என்னோட டிப்ஸ்.

12 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Srividhya R said...

me the first!

Prathap Kumar S. said...

இது சொந்த அனுபவம்தானே.... ஏன் மறைக்கிறீங்க... இதெல்லாம் ஜகஜகம்தானே..:))

அருண் பிரசாத் said...

இந்த முடிவை நான் எதிர்பார்த்தேன்.

நல்ல வேளை டிஸ்கி போட்டதால் உங்களை நான் நம்பிட்டேன்

செல்வா said...

அட .. இப்படி கூட நடக்குமா ...???

Madhavan Srinivasagopalan said...

somehow I could expect the later part of the story.

Chitra said...

பல்பு!! அதுக்கும் சுவிட்ச் on பண்ண தெரிந்து இருக்காதே.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

ஸ்ரீராம். said...

ஆமாம் மாதவன்... இது பிரபல ஜோக். ஒரு விசு படத்துல கூட வரும். ஆனாலும் மறுபடியும் ரசிக்கறதுல தப்பில்லையே...

'பரிவை' சே.குமார் said...

ATHU SARI...!

R.Gopi said...

சவால் சமையல எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே....

ஏதோ, உங்க சொந்த சோகத்த எங்க கிட்ட இறக்கி வச்சு இருக்கீங்க...

பரவாயில்ல.... நெக்ஸ்ட் டைம் சரியாயிடும்....

கௌதமன் said...

'சமைத்துப் பார்' புத்தகத்தைப் பார்த்துப் படித்து, பாயாசம் செய்த நான் - கடைசியில் 'பாயாசம் ஒரு தரம், பாயாசம் இரண்டு தரம், பாயாசம் மூன்று தரம்' என்று சொல்லி மணி அடித்தேன்.
என்ன? என்று புருவம் உயர்த்திய என் மனைவியிடம், புத்தகத்தில் எழுதி இருந்ததை சுட்டிக் காட்டினேன்.

'பாயாசம் மணக்க வேண்டும் என்றால் ஏலம் போடவும்.'

மங்குனி அமைச்சர் said...

இது நமக்கு தேவையா??? பேசாம இன்னொரு கல்யாணம் பண்ணிடுங்க சண்டை வந்தாகூட பிரச்சனை இல்லை

R.Gopi said...

//பாயாசம் ஒரு தரம், பாயாசம் இரண்டு தரம், பாயாசம் மூன்று தரம்' என்று சொல்லி மணி அடித்தேன்.
என்ன? என்று புருவம் உயர்த்திய என் மனைவியிடம், புத்தகத்தில் எழுதி இருந்ததை சுட்டிக் காட்டினேன்.

'பாயாசம் மணக்க வேண்டும் என்றால் ஏலம் போடவும்.//

கௌதமன் சார்....

நல்லா போட்டீங்க போங்க ஏலத்த....