அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, August 1, 2010

விருப்பமுடன் சொல்கிறேன் (ஒரு சுய விளம்பரம்தான்.....)


இது ஒரு தொடர்பதிவு. அழைத்த ப்ரியமுடன் வசந்த்துக்கு நன்றி!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பெயர் சொல்ல விருப்பமில்லை (அட அதுதாங்க பதிவுலகத்தில் என் பெயர்!)

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

நிச்சயமாக அந்தப் பெயர் உண்மைப் பெயர் இல்லை. கொஞ்சம் வித்தியாசமாக பெயர் இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் அப்படி வைத்தேன். முதலில் சொல்ல விருப்பமில்லை என்றுதான் பெயர் வைத்திருந்தேன். ஆனால் "சொல்ல விருப்பமில்லை said" என்று வந்தால் லாஜிக் ஒத்து வரவில்லை, எனவே பெயர் சொல்ல விருப்பமில்லை என்று வைத்து விட்டேன்.


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அது ஒரு அருமையான இரவு. இந்த இரவிலே திடீரென்று ஒரு தேவதை வானில் தோன்றி என் முன்னே வந்து தமிழ்ப் பதிவுலகில் என் சேவை மிகவும் தேவை என்று கூறி..................
என்றெல்லாம் சொன்னால் நம்புவீர்கள், இருந்தாலும் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. 2005 முதல் பலருடைய பதிவுகளையும் படித்து comments மட்டும் போட்டு வந்த நான் திடீரென்று 2009 தீபாவளி அன்று என் முதல் பதிவை எழுதினேன். 
  
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

என்னுடைய ஆதர்சன வலைப் பதிவு இட்லிவடை தான். அதில் வரும் பதிவுகளை எல்லாம் படித்த நான், என் பதிவுகளும் எல்லோரையும் எட்ட வேண்டும் என்று ஆசைப் பட்டதென்னவோ நிஜம்தான்.  ஆனால் நான் பிரபலம் அடைவதற்கு என்று தனியாக எதுவும் செய்ய வில்லை. என் மனத்தில் தோன்றிய எழுத்துகளை என் பதிவில் எழுதினேன். ஆனால் பிறருடைய பதிவுகளை நிறையப் படித்து அங்கங்கே எனக்குத் தோன்றிய கமெண்ட்ஸ் எழுதினேன். கொஞ்சம் வித்தியாசமான பெயர் என்பதாலோ என்னவோ, என் வலைப்பூ ஓரளவு புதிய ஆதரவாளர்களைச் சம்பாதித்தது. தமிளிஷ்ல என் பதிவுகளை இணைத்ததன் மூலமும் ஓரளவு பிரபலம்(?!) ஆகியிருக்கேன்
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நிறைய எழுதியிருக்கேன். என் பெற்றோரைப் பற்றியும், என் அண்ணனைப் பற்றியும் எழுதினேன். எங்கள் பள்ளியில் நாங்கள் வெள்ளி விழா கொண்டாடியது பற்றியும் எழுதினேன். இது எனக்கு மன நிறைவைத் தந்ததோடு அல்லாமல், நிறைய பின்னூட்டங்கள் இந்த வகைப் பதிவுகளில் எனக்கு வந்தன.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

"இது பொழுது போக்கும் பதிவு அல்ல, நம் நாட்டின் பழுது போக்கும் பதிவு" என்றெல்லாம் கப்சா விட நான் தயாரில்லை. அதே நேரத்தில் சம்பாதிப்பதற்காகவும் தான் எழுதுகிறேன். அதாவது, மக்களின் மனங்களை சம்பாதிப்பதற்காக.........(மனசைத் தொட்டுட்டேனா?

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒரு பதிவுக்குத் தான் சொந்தக்காரன். என்றாலும், இது உங்கள் சொத்து என்ற லாஜிக் படி, எங்கள் கிரியேஷன்ஸ்  வலைதளத்தில் சில படங்களை வரைந்து அதைப் பதிவாக வெளியிட்டிருக்கிறார்கள். எங்கள் ஊர்த் திருவிழாவைப் பற்றி இட்லிவடையிலும் எழுதியிருக்கிறேன்.  

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

அவரவர் கருத்துகளை அவரவர் பாணியில் சொல்கிறார்கள், இதில் கோபப் பட நியாயமில்லை. ஆனால் பொறமை,எஸ், நிறையவே உண்டு, குறிப்பாக, இட்லிவடை, கோகுலத்தில் சூரியன் வெங்கட்  ப்ரியமுடன் வசந்த், இன்னும் நிறைய இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி என் டாப் 10௦ வலைப்பதிவர்கள் என்ற பதிவிலும் என் டாப் 10௦ பின்னூட்டாளர்கள் என்ற பதிவிலும் பாராட்டியிருக்கிறேன்.  

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
முதல் கமென்ட் போட்டவர் எடக்குமடக்கு கோபி தான். மற்றபடி என்னைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாததால் யாரும் தானாக என்னைப் பாராட்ட வில்லை, ஆனால், நானாகத் தொடர்பு கொண்ட சில பதிவர்கள் இன்றும் என் ரெகுலர் followers லிஸ்டில் இருக்கிறார்கள்.  குறிப்பாக கோகுலத்தில் சூரியன் வெங்கட்  என் எழுத்துகளை விமரிசிக்கும் விதமே தனி. அவை என் எழுத்துகளை ஓரளவு சீர் செய்ய உதவியிருக்கின்றன.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்... 

என் பதிவு டைட்டில் கூறுவதுபோல், நான் எப்போதும் பட்டதைச் சொல்பவன், பட்டென்று சொல்பவன். என் எழுத்துகள் என் சிந்தனையில் தோன்றும் விஷயங்களே தவிர யாரையும் மனம் நோகச் செய்வது என் எண்ணம் அல்ல. முழுக்க, முழுக்க, நகைச்சுவைக்காகவும், பொழுது போக்குவதற்காகவும் மட்டுமே நான் பதிவுலகை பயன்படுத்துகிறேன், பயன் படுத்துவேன். இன்னும் படுத்துவேன்(?!)

இந்தப் பதிவுத் தொடருக்கு நான் அழைக்கும் பதிவர்கள் :(என்னை ரெண்டு பேரும் வெவ்வேறு தொடர்களில் மாட்டிவிட்டதால் அவர்களை அழைக்கிறேன்!)

27 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

நாஞ்சில் பிரதாப் said...

பேரைச் சொல்லிடவா...சொல்லிடவா..?? :))) உங்ககிட்ட பேசும்போது முதல்ல கேட்டது உங்கப்பெரைத்தான்... ஞாபகமிருக்கா சார்??:)))

நாஞ்சில் பிரதாப் said...

//மக்களின் மனங்களை சம்பாதிப்பதற்காக.........(மனசைத் தொட்டுட்டேனா?//

அய்யோ... சொறிய வச்சுட்டிங்ளே சார் :)))

நாஞ்சில் பிரதாப் said...

//நான் பதிவுலகை பயன்படுத்துகிறேன், பயன் படுத்துவேன். இன்னும் படுத்துவேன்//

ரொம்ப படுத்துறீங்களே....:))

நாஞ்சில் பிரதாப் said...

//சொல்ல விருப்பமில்லை said" என்று வந்தால் லாஜிக் ஒத்து வரவில்லை, //

ஓகோ...லாஜீக்லாம் பார்த்துதான் பிளாக்குக்கு பேரை வச்சிருக்கீங்க போல...
நல்லவேளை நியுமராலஜீ பார்க்காம வுட்டீங்களே....:))

சௌந்தர் said...

அடுத்து நம்ம அருண் பிரசாத்.....ஹி ஹி ஹி

TERROR-PANDIYAN(VAS) said...

அப்போ கடைசிவரை உங்க பெயர் சொல்ல மாட்டிங்க.... கண்டுபிடிக்கிறேன்...

அருண் பிரசாத் said...

ஆஹா, திருப்பி கொடுத்துடீங்களா. சந்தோஷம்.

சரி, எல்லோரும் தயாரா இருங்க. உங்களைதான் நான் மாட்டிவிடப் போறேன்.

அவருடைய பெயர் ஒரு இடதில் இருக்கு, கண்டுபிடிங்க. அப்புறம் Clue தரேன். மறக்காம ஓட்டு போடுங்க, அவருக்கு

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//அவருடைய பெயர் ஒரு இடதில் இருக்கு, கண்டுபிடிங்க. அப்புறம் Clue தரேன். மறக்காம ஓட்டு போடுங்க, அவருக்கு //

ஜெய் தலை....... மாட்டிகிட்டிங்க...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அருண் பிரசாத் said...
ஆஹா, திருப்பி கொடுத்துடீங்களா. சந்தோஷம்.

சரி, எல்லோரும் தயாரா இருங்க. உங்களைதான் நான் மாட்டிவிடப் போறேன்.

அவருடைய பெயர் ஒரு இடதில் இருக்கு, கண்டுபிடிங்க. அப்புறம் Clue தரேன். மறக்காம ஓட்டு போடுங்க, அவருக்கு//

பயங்கர டெர்ரரா இருக்கே! any way, என் அழைப்பை ஏத்துக்கிட்டதுக்கு நன்றி!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நாஞ்சில் பிரதாப் said...
பேரைச் சொல்லிடவா...சொல்லிடவா..?? :))) உங்ககிட்ட பேசும்போது முதல்ல கேட்டது உங்கப்பெரைத்தான்... ஞாபகமிருக்கா சார்??:)))//

பிரதாப்பு, வச்சிடாதப்பா ஆப்பு!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// TERROR-PANDIYAN(VAS) said...
அப்போ கடைசிவரை உங்க பெயர் சொல்ல மாட்டிங்க.... கண்டுபிடிக்கிறேன்..//

அது ஒன்னும் கஷ்டமான வேலை இல்லைப்பா....விருப்பமில்லை அவ்ளோதான்

Jey said...

என்னயா, இங்க ஏதோ என்னை வச்சி ஏதோ சதி நடக்குராப்ல இருக்கு...... ஏதா இருந்தாலும் பேச்சித் தீர்த்துக்கலாம்யா....

ப்ரியமுடன் வசந்த் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை இல்லைன்னு சொல்லி சொல்லியே ரெண்டுதடவ உங்க பேரை பதிவில் சொல்லியிருக்கீங்க...

பேரைச்சொல்லவா அது நியாயமாகுமா?

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி சார் தொடர்ந்தமைக்கு

rk guru said...

yenna yellorum ithu pola kilambittinga valaipathivil naan yeppadi pattavan yendru athiga pathivu varuthu......

ஸ்ரீராம். said...

பெயர் விஷயத்தை சாமர்த்தியமாக மெயின்ன்டைன் பண்ணிட்டீங்க...! சுவாரஸ்யமான பகிர்வு.

Chitra said...

என் பதிவு டைட்டில் கூறுவதுபோல், நான் எப்போதும் பட்டதைச் சொல்பவன், பட்டென்று சொல்பவன். என் எழுத்துகள் என் சிந்தனையில் தோன்றும் விஷயங்களே தவிர யாரையும் மனம் நோகச் செய்வது என் எண்ணம் அல்ல. முழுக்க, முழுக்க, நகைச்சுவைக்காகவும், பொழுது போக்குவதற்காகவும் மட்டுமே நான் பதிவுலகை பயன்படுத்துகிறேன், பயன் படுத்துவேன். இன்னும் படுத்துவேன்(?!)


...... நல்ல கொள்கை...... I like it! Super!

Madhavan said...

நிதர்சனமா எழுதியிருக்கிறீர்கள்.... உங்களின் 'எழுத்துக்கள் / எண்ணங்கள் / செய்திகள்' - முக்கியம்.. எனவே பெயர் சொல்லாததால் பரவாயில்லை. பலர், புனைபெயராலே குறிப்பிட / பேசப் படுகின்றனர்.
தொடர அழைத்தமைக்கு நன்றி.. முயற்சி செய்கிறேன்..

வெங்கட் said...

// ஆனால் பொறமை, எஸ், நிறையவே உண்டு,
குறிப்பாக, இட்லிவடை, கோகுலத்தில் சூரியன் வெங்கட்
ப்ரியமுடன் வசந்த், //

அட நம்மள பாத்து
பொறாமைபடகூட ஆளிருக்கா..??

என்னை வெச்சி காமெடி.,
கீமெடி பண்ணலையே...!!

சரி., இட்லிவடை, ப்ரியமுடன் வசந்த்,
இவங்ககூட எல்லாம் நம்மள Compare
பண்ணியிருக்கீங்களே..

இதை கேள்விபட்டு அவங்க எதாவது
Feel பண்ணபோறாங்க.. பாத்துக்கோங்க
( தன்னடக்கமுங்கோ.. )

Karthick Chidambaram said...

nalla pathivu ... peyarthaan ungal palamo ?

Kalakkal nadai. Ungal peyar therinjavuga neray irukkaanga.

அருண் பிரசாத் said...

தல தொடர்பதிவு போட்டாச்சு

http://arunprasathgs.blogspot.com/2010/08/blog-post.html

R.Gopi said...

விருப்பமுடன் சொல்கிறேன்...

//நான் பதிவுலகை பயன்படுத்துகிறேன், பயன் படுத்துவேன். இன்னும் படுத்துவேன்//

எந்த அளவுக்குன்னு சொன்னா, அதுக்கு ஏத்த மாதிரி நாங்களும் தாங்க தயாராவோம்ல....

//சொல்ல விருப்பமில்லை said" என்று வந்தால் லாஜிக் ஒத்து வரவில்லை//

நாஞ்சில் சொன்ன மாதிரி நியூமராலஜி பார்த்து இருந்தீங்கன்னா, 1,2,3 சொன்னேன் ஒத்து வரவில்லை என்று ப்ளாக் பெயர் வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

கே.ஆர்.பி.செந்தில் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை ..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//
Congrats!

Your story titled 'விருப்பமுடன் சொல்கிறேன் (ஒரு சுய விளம்பரம்தான்.....)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 2nd August 2010 10:00:05 AM GMTHere is the link to the story: http://ta.indli.com/story/313699

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

Thank you, voters!

ப.செல்வக்குமார் said...

///அது ஒரு அருமையான இரவு. இந்த இரவிலே திடீரென்று ஒரு தேவதை வானில் தோன்றி என் முன்னே வந்து தமிழ்ப் பதிவுலகில் என் சேவை மிகவும் தேவை என்று கூறி.................////

அந்த புள்ளிகளில் நாங்க நினைக்கறது போட்டுக்கலாமா ..??

தமிழ் மகன் said...

இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

V.Radhakrishnan said...

:) யதார்த்தம். இட்லி வடை சாப்பிடதான் ருசியாக இருக்கும். படிக்கவுமா? விரைவில் படித்துவிடலாம்.