அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, August 28, 2010

தங்கமணிகிட்ட பயமா, ஹா.....ஹா......!

ச்சே, உலகத்தை நினைச்சா ஆத்திரமா வருது, அது என்ன, தங்கமணிக்கு பயப்படுறது? வெக்கமா இல்ல? கலாய்க்கறோம்னு  கோபப் படற VKS மக்களே, நீங்களே சொல்லுங்க, இது நியாயமா?
இந்தப் பதிவுல ரங்கமணிகளை எல்லாம் சந்தோஷப் பட வச்ச அவரு, இந்த பதிவுல குப்புற கவுந்துட்டாரே, இது சரியா?

இவ்வளவு பயம் இருந்தா ஏன் முதல் பதிவு போடணும்? எனக்கு என்னிக்குமே என்னோட தங்கமணிகிட்ட பயம் இருந்ததே கிடையாது, இதை நான் ஆணித்தரமா எங்க வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் சூடம் கொளுத்தி சத்தியம் செய்யத் தயார்.  மனுசன்னு இருந்தா ரோசம் மானம் சுய கவுரவம் எல்லாம் இருக்கணும் சார், இத நல்லா புரிஞ்சுக்குங்க!

டிஸ்கி : வலையுலக மக்களே! தங்கமணின்னா  வலையுலகத்துல என்ன அர்த்தம்னு என் மனைவிகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க, அப்புறம் நானும் ஒரு (தலைகீழ்)பதிவு போட வேண்டியிருக்கும், ஹிஹி.....!

18 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

அனு said...

ஹாஹா..

முதல் பதிவு ஒரு 'கெத்'-க்காக போட்டது..
ரெண்டாவது ஒரு மொத்துனால போட்டது... :)

//தங்கமணின்னா வலையுலகத்துல என்ன அர்த்தம்னு என் மனைவிகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க//

உங்க மனைவியோட ஃபோன் நம்பர் ப்ளீஸ்...

நாஞ்சில் பிரதாப் said...

ஹஹஹ மீசையை முறுக்கும்போதே நினைச்சேன் அது ஒட்டு மீசையாத்தான் இருக்கும்னு...


இந்த ஒரு பதிவு போதும் உங்களை மிரட்டறதுக்கு...:)) ஊருக்கு வந்துட்டு வச்சுக்கறேன்...:))

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ anu
//உங்க மனைவியோட ஃபோன் நம்பர் ப்ளீஸ்...//

நான் யாருக்கும் எந்த போன் நம்பரும் கொடுக்கறதில்லை, இருந்தாலும் சங்கத் தலைவி நீங்க கேக்கறதால சொல்றேன், குறிச்சுக்குங்க
0 00 000

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நாஞ்சில் பிரதாப் said...

இந்த ஒரு பதிவு போதும் உங்களை மிரட்டறதுக்கு...:)) ஊருக்கு வந்துட்டு வச்சுக்கறேன்...:)) //

உங்க மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன், நீங்க என்ன தங்கமணியா? (எதுவா இருந்தாலும் பேசித் தீக்கலாம் பிரதாப் கண்ணு, ஹூம்.....கல்யாணம் ஆகியிருந்தா தெரிஞ்சிருக்கும், நம்ம வேதன.......!)

ப.செல்வக்குமார் said...

நாங்க எப்பங்க அவுங்களுக்கு பயந்துட்டோம் அப்படின்னு சொன்னோம் .. நீங்களாகவே ஒன்ன கற்பனை பண்ணிக்கிட்டு சொல்ல வேண்டியது.
நாங்க அவுங்கள கிண்டல் பண்ண மாட்டோம் அப்படின்னு தான் சொன்னோம் ..!! தப்பா புரிஞ்சுக்கறதுல VKS காரங்கள மிஞ்ச விட முடியாது ..

என்னது நானு யாரா? said...

எப்படியோ போங்க! வீட்டு மானத்தை Blogல ஏத்தறீங்க!

அடிதடி வரை போகாம் இருந்தா சரிதான்! புது பதிவு ரெடி!!!

ராம்சுரேஷ் said...
This comment has been removed by the author.
வெங்கட் said...

என் Blog-ல என்னை கும்மறது
பத்தாதுன்னு இங்கே வேறயா..??!!

இது Blog தாண்டிய தீவிரவாதம்..!!

இதை நான் வன்மையாக
கண்டிக்கிறேன்..

வானம்பாடிகள் said...

இப்புடித்தான் கொள்ளப் பேரு தெரியாதுன்னு நினைச்சி மாட்டிக்கிறது:))

Chitra said...

டிஸ்கி : வலையுலக மக்களே! தங்கமணின்னா வலையுலகத்துல என்ன அர்த்தம்னு என் மனைவிகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க, அப்புறம் நானும் ஒரு (தலைகீழ்)பதிவு போட வேண்டியிருக்கும், ஹிஹி.....!


........ஹஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... செம.

TERROR-PANDIYAN(VAS) said...

//நான் ஆணித்தரமா எங்க வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் சூடம் கொளுத்தி சத்தியம் செய்யத் தயார். //

உங்க தங்கமணி முன்னாடி சொல்லுங்க போதும்...எப்படியும் அவங்க தங்கமணி யாரு கேப்பாங்க. நீங்க பயத்துல உண்மை ஒலரிடிவிங்க... எப்படி சோலி முடிச்சாங்க வந்து சொல்லுங்க...

ஸ்ரீராம். said...

அன்புள்ள ரங்கமணி,

தங்கமணிக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்க வேண்டாம்.. அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள். போனாப் போகுதுன்னு விட்டிருக்காங்க...!!

Jey said...

அட.. நம்ம கோஷ்டி...

வாடாச் செல்லம்... நாம தனியா கூடிப் பேசி... தங்ஸ்கிட்டேர்ந்து எப்படி அடிவாங்காம வாழ்றதுன்னு டிஸ்கஸ் பண்ணி ஒரு முடிவு எடுப்போம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விடுங்க பாஸ். என்னதான் எதிர்கட்சியா இருந்தாலும் ஹாஸ்பிட்டல்ல இருக்குறவரை பாக்க போறதுதான் நாகரீகம். வாங்க வெங்கட்டை பாத்துட்டு வரலாம்..

ராம்சுரேஷ் said...

அஞ்சுவது அஞ்சாமை பேதைமைன்னு அய்யன் சொன்னதை அறியீரோ?

இதான் நான் நேத்து போட்ட கமெண்டு, ரெண்டு வந்ததுன்னு ஒண்ணை டெலீட்டினேன், ரெண்டும் டெலீட்டாயிருச்சு போல.

Madhavan said...

what is that 'Gold Bell' ?

R.Gopi said...

சமாளிப்பு திலகமே....

நீர் வாழி....

உன் கொற்றம் வாழி....

உன் தைரியம் வாழி.....

அன்பரசன் said...

நான் இந்த வெளையாட்டுக்கே வரல..
இன்னும் பேச்சிலருங்கோ..