அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, August 8, 2010

ஜோடி No. 1

சமீபத்தில் ஒரு கல்யாணத்துக்கு சென்றிருந்தேன்.

எல்லோரும் மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்க,

எனக்கு மட்டும் அங்கிருந்த பல ஜோடிகளில் ஒரு ராஜஸ்தான் ஜோடி தனியாக பார்ப்பதற்கே அழகாக தோன்றியது.

அந்த ஜோடியை ஒரு புகைப்படமும் எடுத்து கவனமாகப் பாதுகாத்து வருகிறேன்.

உங்கள் பார்வைக்கு இங்கே அந்தப் படத்தைப் போட்டிருக்கிறேன் ஜோடிப் பொருத்தம் சூப்பர் தானே?
:
:
:
:
:
:
:
:
:
:
:


11 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

கானகம் said...

மரண மொக்கைன்னா என்னான்னு அன்னிக்கு கேட்டீங்களே!!! உங்க பதிவ திரும்பப் படிங்க.. தெரியும்..

:-)

அருண் பிரசாத் said...

//அந்த ஜோடியை ஒரு புகைப்படமும் எடுத்து கவனமாகப் பாதுகாத்து வருகிறேன்//

புகைப்படத்தை தானே சொன்னீங்க?

Madhavan said...

Aahaa... creative thinking..

R.Gopi said...

ஃபோட்டோ மட்டும் எடுத்தேன் என்பது பொய்....

கூடவே அதையும்........

நாஞ்சில் பிரதாப் said...

உண்மையைச்சொல்லுங்க... அந்த செருப்பு கல்யாணத்துல சுட்டதுதானே... இதுல மறைக்க என்னது சார் இருக்கு...கல்யாணத்துல பப்படம் சுடறதும் செருப்பு சுடறதும் காலங்காலமாக நடக்கிறத தானே...:))

DrPKandaswamyPhD said...

தப்பா நினைக்கலேன்னா ஒண்ணு சொல்ல்லாம்னு நினைச்சேன். வேண்டாம், நம்ம தகுதிக்கு சரிப்படாது.

வெங்கட் said...

நிஜமா சொல்லுங்க....
செருப்பு அழகா இருக்கேன்னா
அதையே பார்த்திட்டு இருந்து..,
அதை வேற போட்டோ பிடிச்சீங்க..???

அது Ladies செருப்பா இருக்கேன்னு
கேட்டேன்...!!!

( நாராயணா., நாராயணா..!! )

For Your Kind Information :

இந்த மாதிரி செருப்பு போட்டிருக்குற
எந்த பொண்ணும் மண்டபத்து
வாசல்ல இதை கழட்டி விடாது...

இல்ல கழட்டி தான் விடணும்னா
இந்த செருப்பை போட்டுட்டு வராது..

So., இந்த செருப்பை நீங்க எப்படி
படம் எடுத்து இருப்பீங்கன்னு
எனக்கு 2 - 3 கற்பனை தோணுது..

அதெல்லாம் இங்கே சொல்லக்கூடாது..

வானம்பாடிகள் said...

:))

ஸ்ரீராம். said...

நல்லா இருக்குங்க.... ராஜஸ்தான் ஜோடியைச் சொன்னேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

//(பட்டதைச் சொல்பவன்......'பட்'டென்று சொல்பவன்)//

இதுக்கு நீங்க சொல்லாமலே இருந்து இருக்கலாம்..

ப.செல்வக்குமார் said...

கல்யாண வீட்டில் செருப்பைத் தொலைத்தவனின் கவிதை :
ஒரு ஜோடி சேர்ந்தது .
ஒரு ஜோடி தொலைந்தது.!
இது நான் எழுதினது இல்லீங்கோ ..
sms ல வந்தது .. நான் எழுதின மொக்கையா இருக்கும் ..!!