அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, August 10, 2010

'99 - சில நடப்புகள்

'99-ஐ என்னால் மறக்கவே முடியாது. அந்த வருடம் நடந்த சில நிகழ்வுகள்:-

  • ஒரு ஒட்டு குறைந்ததால் பா.ஜ.க.ஆட்சி கவிழ்ந்தது.
  • நல்லெண்ண நடவடிக்கையாக இந்தியா பாகிஸ்தான் இடையே பேருந்து விடும் ஐடியா செயல்படுத்தப் பட்டது.
  • பதிலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளை கார்கில் எல்லையில் நுழைய விட்டது.
  • நமது விமானம் ஒன்று தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஒரு பயணியை சுட்டுக் கொன்றார்கள்.
நல்ல செய்தியே இல்லையா என்று கேட்கிறீர்களா?
அந்த வருடம் தான் எனக்கு திருமணம் நடந்தது.

எல்லாம் சரி, 99-ஐப் பற்றி இப்போது ஏன் எழுதுகிறேன் தெரியுமா? இது என் 99-வது பதிவு.


டிஸ்கி : இதுக்கே இப்படி மூச்சு வாங்குதே, நூறாவது பதிவுக்கு என்ன செய்யப் போகிறேனோ, தெரியலையே, எல்லாம் அந்த ஆண்டவன்தான் வழி காட்டணும்.

10 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

வெங்கட் said...

// நல்ல செய்தியே இல்லையா என்று கேட்கிறீர்களா?
அந்த வருடம் தான் எனக்கு திருமணம் நடந்தது. //

ஒரு நிமிஷம் Wait பண்ணுங்க..

இது நிஜமாலுமே நல்ல செய்தி தானான்னு
உங்க மனைவிகிட்டயும் கேட்டு
தெரிஞ்சிக்கறேன்..

வெங்கட் said...

// இதுக்கே இப்படி மூச்சு வாங்குதே,
நூறாவது பதிவுக்கு என்ன செய்யப்
போகிறேனோ, தெரியலையே, //

எதுக்கு Feel பண்றீங்க..?
அதான் Year 2000 இருக்குல்ல..
அப்ப என்ன நடந்ததுன்னு போடுங்க..
இப்படியே 2001 - 2010 வரை
10 பதிவுக்கு ஒப்பேத்திடலாம்..

அப்புறம் என்ன பண்றதுன்னு
கேட்கறீங்களா..??

கவலைய விடுங்க
இருக்கவே இருக்கு 1911....

ஸ்ரீராம். said...

தொண்ணூற்று ஒன்பதுக்கும் வாழ்த்துக்கள். நூறாவதுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் said...

99 க்கு வாழ்த்துக்கள்!

100 வது பதிவுக்கு 100 முறை 100ன்னு டைப் பண்ணுங்க

TERROR-PANDIYAN(VAS) said...

வரா வரா இந்த VKS ரொம்ப நக்கல் அதிகம் ஆகி போச்சி... நான் கூட எதோ 99 விஷயம் சொல்ல போறிங்க நினைத்தேன்.... சரி 100க்கு அட்வான்ஸ் வழ்த்துகள்.... :)

வானம்பாடிகள் said...

100kkuவாழ்த்துகள்:)

மோகன் குமார் said...

Congrats for 99. Hit the century soon....

Madhavan said...

99 Not out.... GREAT..

All the Best to you..

PS. The entire INDIAN CRICKET TEAM got only 88, yesterday (ie 10th Aug 2010)

ப.செல்வக்குமார் said...

//வரா வரா இந்த VKS ரொம்ப நக்கல் அதிகம் ஆகி போச்சி... நான் கூட எதோ 99 விஷயம் சொல்ல போறிங்க நினைத்தேன்.... சரி 100க்கு அட்வான்ஸ் வழ்த்துகள்.... :)///

விடுங்க .. என்னதான் எழுதினாலும் VAS அளவுக்கு வரமுடியுமா ..?
சரி சரி .. 100 பதிவுக்கு வாழ்த்துக்கள் ..!!

cheena (சீனா) said...

ஏன் திருவாடிப்பூரம் - மன்னார்குடி திருவிழா - இன்னும் பப்ளீஷ் ஆகல = நூறாவது இடுகைக்குக் நல்வாழ்த்துகள் = பெ.சொ.வி - விஏஎஸ்

நட்புடன் சீனா