அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Friday, April 2, 2010

டாப் 10 பதிவர்கள் - என் பார்வையில்

---------------------------------------------------------------------------------
எல்லோரும் ஜோரா கை தட்டுங்க, இது என்னோட ஐம்பதாவது பதிவு.

எனக்கு வலைப்பூக்கள் பரிச்சயம் 2006 லேயே வந்து விட்டது என்றாலும் முழு அளவில் நானே ஒரு வலைப்பூ துவங்கியது சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில்தான். ஒரு காமெடிக்காக(?) பெயர் சொல்ல விருப்பமில்லை என்ற பெயருடன் துவங்கிய என்னுடைய வலைப்பூ ஓரளவு பிரபலத்துடன் விளங்கி வருவதாக என் எண்ணம். (யாருப்பா, அங்கே நமுட்டு சிரிப்பு சிரிக்கிறது? சின்ன புள்ளத் தனமா இல்ல?)
கிட்டத்தட்ட இந்த ஆறு மாதத்தில் என்னுடைய வலைப்பூவை பின்தொடரும் followers எண்ணிக்கை 49.   அந்த நாப்பத்து ஒன்பது பேருக்கு நன்றி!

அவரவர் ஒரு நாளைக்கே ரெண்டு மூணு பதிவு போடும்போது, வாரத்துக்கு ஒரு பதிவு சமயத்துல ரெண்டு வாரத்துக்கு ஒரு பதிவு போடறதுக்கே இங்க மூச்சு முட்டுது.

சரி என்னோட ஐம்பதாவது பதிவா என்ன போடலாம்னு யோசிச்சப்போ, என் மனசுக்குப் பிடிச்ச டாப் 10 பதிவர்களைப் பற்றி எழுதலாம்னு தோணுது.  

இதோ என் டாப் 10 பதிவர்கள் :-

1. இட்லிவடை எனக்கு முதன்முதலில் அறிமுகமான வலைப்பூ. ஆரம்பத்தில் அறிவியல் சம்பந்தமான செய்திகள் பலவற்றை இங்கே படித்திருக்கிறேன்.  அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையோடு சொல்வதில் இட்லிவடையின் பாங்கு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. சக பதிவர்களுக்கு அனேக போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கி (எனக்கும் ஒரு பரிசு கிடைத்தது - விவரம் இங்கே)  கிட்டத்தட்ட ஆயிரம் பின்தொடர்வாளர்களுடன் (சரியான மொழிபெயர்ப்பு என்றே நினைக்கிறேன்) சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் இட்லிவடை என்னுடைய தினசரி காலை உணவு என்றே சொல்லலாம்.

2.  டோண்டு ஒரு மொழிபெயர்ப்பாளராக தன்னுடைய அனுபவங்களையும், ஒரு பக்திமானாக தன்னுடைய எண்ணங்களையும் ஒரு சிறந்த நிபுணராக பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதில்களையும் வழங்கிக் கொண்டிருக்கும் இவரது வலைப்பூவையும் அநேகமாக தினமும் படித்து விடுகிறேன், ஆனால் எப்போதாவதுதான் என் பின்னூட்டத்தை இடுகிறேன். போலி டொண்டுவினால் அவதிப் பட்டபோது தளராது போரிட்டு வெற்றிக் கனியை ருசித்தவர். கிட்டத்தட்ட 250 பின்தொடர்வாளர்களுடன் என் மனத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்த வலைப்பூ. எல்லாம் வல்ல தென்திருப்பேரை மகர நெடுங்குழைக் காதர் இவரை நன்கு காக்கட்டும்.

3. கேபிள் சங்கர் ஒரு சிறந்த இயக்குனர் ஆவதே தனது லட்சியமாகக் கொண்டிருக்கும் இவர் என்னுடைய சிறந்த நண்பர். இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதால் (எல்லாரும் கேட்டுக்குங்க, நானும் யூத்துதான்) இவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது நேரம் போவதே தெரியாது. இவருடைய பின்தொடர்வாளர்களுடைய எண்ணிக்கை 750 ஐ  நெருங்குகிறது.  அநேகமாக இவருடைய எல்லா பதிவுகளும் கொஞ்சம் ரொமான்டிக்காக இருக்கும் (யூத்துப்பா....) இவருடைய கொத்து பரோட்டாவின் மூலம் நிறைய உணவகங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார் (ரொம்ப அசைவ உணவுகளையே அறிமுகப் படுத்துவார், இவருடைய ஜோக்குகளைப் போல).

4. எடக்கு மடக்கு கோபி இவர் தான் என் பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்டவர் என்ற முறையில் இவரை ரொம்பப் பிடிக்கும். இவரிடம் chat செய்வது சுவாரசியமாக இருக்கும். வாழ்க்கை பற்றி சில பதிவுகளை நான் எழுத இவரின் தொடர் தான் காரணம். இப்போதும் வெற்றிக்கு வழி என்ற பெயரில் நிறைய தன்னம்பிக்கையூட்டும் தொடரை எழுதி வருகிறார். கோபி என் சிறந்த நண்பர். (அவர் என்னை விட இளையவர் - யூ....யூத்து!)

5. குசும்பன்  பெயருக்கு ஏற்றாற்போல் குசும்பு நிறைந்தவர்.  எப்பேர்பட்ட நரசிம்மராவ்களையும் சிரிக்க வைத்துவிடுவார் என்பது என் எண்ணம். எங்கள் (மன்னார்குடிக்குப் பக்கத்தில்) தஞ்சாவூர் காரர் என்பதால் இவர் மீது சிறப்பு கவனம் எப்போதும் இருக்கும்.

6. நாஞ்சில் எக்ஸ்பிரஸ் பிரதாப் : நாகர்கோயில் தம்பி.  என்னைவிட பத்து வயது இளையவர். (யூ...யூ....யூத்து!) சினிமா விமரிசனம், மொக்கை, நகைச்சுவை என்று பதிவுகளில் களை கட்டுபவர். இவருடைய எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்வது நன்றாக இருக்கும் என்றாலும் பல நேரம் வித்தவுட் தான் (பின்னூட்டம் போடாமல் வந்துவிடுவேன் ஹி....ஹி..) அவரும் அப்படித்தான் என் பதிவுக்கு பல நேரம் பின்னூட்டம் போடுவதே இல்லை.

7. தண்டோரா மணிஜீ - முதன் முதலில் இவருடைய இந்த பதிவைத்தான் படித்தேன். முதலில் புரியவில்லை. சற்று யோசித்தபோது மலைத்துப் போனேன், இப்படியும் அரசியல் கதை எழுத முடியுமா என்று.   இவருடைய கதைகள், கவிதைகள் எல்லாமே அருமையாக இருக்கும்.

8. ராஜூ மிக மிக இளம் வயது. ஆனால் நகைச்சுவை உணர்வு மிக மிக அதிகம். கேபிளாரைக் கேட்டால் சொல்லுவார், இவரின் நகைச்சுவைத் திறனை. இவருடைய பதிவுகள் அனைத்தும் நகைச்சுவைதான், சில சிந்திக்க வைக்கும் சமூக உணர்வுக் கட்டுரைகளைத் தவிர.

9. எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் உள்ளிட்டோரின் கூட்டணியில் வெளிவரும் இந்த பதிவில் ஒரு விசேஷம் நிறைய போட்டிகள் வைப்பார்கள். பாயிண்ட்டுகள் தருவார்கள். சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் நிறைய இருக்கும்.

10. வீடு திரும்பல் மோகன்  என் பள்ளிக் கால நண்பன். இவனுடைய ஒரு பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டு இவனுடைய வலைப்பூவை அறிந்தேன். இவனுடன் என் பள்ளிக்கால அனுபவத்தை இங்கே எழுதியிருக்கிறேன். வானவில் என்ற பெயரில் வாரா வாரம் பல நல்ல தகவல்களை/எண்ணங்களை தந்து வருகிறான்.

இன்னும் பல வலைப்பூக்கள் என்னால் கவனிக்கப் படுபவைதான். என்றாலும் என்னைக் கவர்ந்த டாப் 10 வலைப்பதிவர்களைப் பற்றித் தான் இங்கே எழுதியிருக்கிறேன்.

டிஸ்கி : எப்படியும் முதல் இரண்டு பதிவர்களும் பின்னூட்டம் இட மாட்டார்கள். மற்ற எட்டு பேரும், மேலும் பிற பதிவர்களும் தங்கள் கருத்துகளை சொல்லிட்டுப் போங்க.  

(எமது அடுத்த வெளியீடு : என்னைக் கவர்ந்த டாப் 10 பின்னூட்டாளர்கள்)

20 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

சைவகொத்துப்பரோட்டா said...

ஜோரா கை தட்டினேன் (கேட்டுச்சா)
வாழ்த்துக்கள் ஐம்பதுக்கு.

மன்னார்குடி said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

மணிஜீ...... said...

நன்றி. வாழ்த்துக்கள்...

நாஞ்சில் பிரதாப் said...

நன்றி அண்ணாச்சி... எங்கயோ தப்பு நடந்துருக்கோ??? :)))

இனிமே ஒழுங்கா பின்னூட்டம் போடறேன்... மீண்டும் நன்றி...

நாஞ்சில் பிரதாப் said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

malar said...

இதெல்லாம் ஒரு 50 தாவது பதிவான்னு சொல்லலான்னு பார்த்தா..பாவம் விட்டுறவோம்....

பதிவில் ஓட்டு பட்டை இல்லைங்கோ....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பதிவில் ஓட்டு பட்டை இல்லைங்கோ....//


கேட்டதுக்கு நன்றி....ஒரு உண்மை என்னன்னா....பட்டை எப்படி இணைக்கிறதுன்னு தெரியலை, அதுதான் விஷயம்

மோகன் குமார் said...

நன்றி நண்பா.. உன் நண்பன் என்பதால் என்னை சேர்த்திருக்கிறாய்.. நரசிம், கார்க்கி போன்ற முக்கிய புள்ளிகள் மிஸ்ஸிங்

Chitra said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்குப் பிடித்த பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

Anonymous said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

//நரசிம், கார்க்கி போன்ற முக்கிய புள்ளிகள் மிஸ்ஸிங்//

ஏங்க அதான் அவர் என்பார்வையில் டாப் 10 பதிவர்கள்னு கொடுத்திருக்காரே...அப்புறம் என்ன நர்சிம்,கார்க்கின்னு வலுக்கட்டாயாம திணிக்கிறிங்க...அவங்களை விட நல்லா எழுதற பதிவர்கள் இருக்கத்தான் செய்றாங்க...நீங்க என்ன நர்சிம்க்கும் கார்க்கிக்கும் பி.ஆர்.ஒ.வா???

♠ ராஜு ♠ said...

வழக்கம் போல அடிச்சு ஆடுங்கண்ணே..!

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்..!

அப்பறம்,நன்றி தல!!!

மங்குனி அமைச்சர் said...

தேங்க்ஸ் mr.வந்துட்டான்யா வந்துட்டான் , என்னோட ரெகொஷ்ட ஏத்துகிட்டு என்பேர போடாம விட்டதுக்கு , எனக்கு இந்த விளம்பரம எல்லாம் புடிக்காது (சித்ரா மேடம் சேம் ,, கண்டுகாதிக )

கார்க்கி said...

50க்கு வாழ்த்துக்கள் பாஸ்...

குசும்பன் said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

50வது தொடருபவனா நானே ஆகிவிட்டேன், அதுக்கு தனியா பொட்டியை அனுப்பிடுங்க.

நன்றி!

RVS said...

அண்ணே, கொஞ்சம் எங்க 'வலை'ப்பூக்கும் (http://mannairvs.blogspot.com) வந்து பார்த்துட்டு அடுத்த வார டாப் டென்ல கொஞ்சம் போடுங்க. தற்போதைய தமிழக தேர்தல்கள் மாதிரி ஏதாவது கவனிக்கனும்னாலும் ரெடியா இருக்கேன்... உங்க கையால ஒரு ரேங்க் நான் வாங்கணும், வாங்கி இந்த ஊர்ல பேரெடுக்கணும்.. இதுதான் இந்த ஜென்மத்து ஆசை... நிறைவேற்றி வையுங்களேன்... ப்ளீஸ் ..

ஊர்ப் பாசத்துடன்,
மன்னை ஆர்.வி.எஸ்

R.Gopi said...

அட.... என்று சொல்ல வைத்த 50வது பதிவு....

வாழ்த்துக்கள் தலீவா....

உங்களின் டாப்-10 வலைப்பதிவர்கள் லிஸ்டில் ஜாம்பவான்கள் இட்லிவடை... டோண்டு.... மணிஜீ (தண்டோரா)... கேபிளார்.... குசும்பனார்.... நாஞ்சிலார்.... டக்ளஸு (ராஜூ)..... மோகன் குமார் ஆகியோரோடு இந்த சிறுவனையும் குறிப்பிட்டதில் மிக்க மகிழ்ச்சி...

தற்போது என் எடக்கு மடக்கு வலையில் எழுதப்பட்டு வரும் தொடர் : “வெற்றியின் விழுதுகள்”.. தோழமைகள் படித்து விட்டு கருத்து கூறலாமே...

வெற்றியின் விழுதுகள் – (பகுதி-7) http://edakumadaku.blogspot.com/2010/04/7.html

அப்படியே என் இன்னொரு வலையான ஜோக்கிரிக்கும் வருகை தாருங்கள்....

”எந்திரன்” - ஒரு எலெக்ட்ரிக் சந்திப்பு http://jokkiri.blogspot.com/2010/03/blog-post_31.html

மிக்க நன்றி..........

ஸ்ரீராம். said...

நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை...'எங்களை' டாப் 10 இல் சேர்த்ததற்கு.

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

//http://manguniamaicher.blogspot.com/2010/03/blog-post_14.html
பின்னூட்ட "குலசாமிக்கு" ஒரு படையல் (தொடர் பதிவு )//

நானும் ஒரு பின்னூட்ட பதிவு போட்டேன் போய் பாருங்க

வெற்றி said...

50க்கு வாழ்த்துக்கள்..நான் உங்களுக்கு 20-30 வயதிருக்கும் என நினைத்திருந்தேன்..தவறுதான் :)

@Anonymous
மோகன்குமார் சொல்லித்தான் நர்சிம்,கார்க்கி நல்லா எழுதுறாங்கன்னு தெரியணுமா என்ன? லிஸ்டில் இடம்பெற்றவர்களை விட அவர்கள் இருவரையும் வாசிப்பவர்கள் அதிகமிருப்பதால் அவர் அவ்வாறு சொல்லியிருக்கிறார்..உடனே 'நீ என்ன மோகன்குமாருக்கு பி.ஆர்.ஓ வா?' என எதிர்கேள்வி கேட்டு விடாதீர் :)

Madhavan said...

எனக்கு எத்தானாவது இடமுங்கோ ?
நூத்துக்குள்ள இருப்பேனா ?