அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, April 11, 2010

சண்டேனா ஒண்ணு - 11.04.2010மேலே உள்ள புகைப்படத்தை சென்ற வெள்ளிக்கிழமை தேதியிட்ட தினத்தந்தியில் பார்த்திருக்கலாம்.  தெரியாதவர்களுக்காக இந்த விபரம்.  சென்னையில் ஒரு இடத்தில் தண்டவாள ஓடுபாதைக்கு மேலே மேம்பால வேலை நடந்து கொண்டிருக்கிறது.  இரு பக்கமும் கட்டப்பட்ட நிலையில் நடுவில் இன்னமும் முடிக்கப் படாமல் இருக்கிறது.  இந்த விவரம் தெரியாமல் ஒரு நபர் தன் காரை இந்த மேம்பாலத்தின் மேல் ஓட்டி வந்து கார் கீழே விழுந்து விட்டது.  இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் கார் விழுந்த தண்டவாளத்தில் அல்லாமல் வேறொரு தண்டவாளத்தில் ஒரு ரயில் வந்திருக்கிறது. ஆகவே, ஓட்டி வந்த நபர் காயங்களுடன் தப்பி விட்டார். (போட்டோ உதவி : தினத் தந்தி)

இங்கே எனக்கு வந்த சந்தேககங்கள் :

மேம்பால வேலை நடை பெறுகிறது : Take Diversion என்ற எச்சரிக்கை போர்டு இரு பக்கமும் வைக்க வில்லையா? அப்படி என்றால் அவ்வாறு எச்சரிக்கை செய்யாத அரசுத் துறை மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

"சாலை பாதுகாப்பு வாரம் - போக்குவரத்து விதிகளை மதியுங்கள்" என்பதெல்லாம் பொது மக்களுக்குத்தானா? அரசு அதிகாரிகளுக்கு இல்லையா?

என்ன கொடும சார், இது? 

டிஸ்கி : மக்களே, எது எப்படி இருந்தாலும், நாம் போக்குவரத்து விதிகளையும், (போக்குவரத்து விதிமீறல்களையும்) புரிந்து கொண்டு அனுசரித்து போவது, நம்முடைய வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று.

6 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Chitra said...

டிஸ்கியில் சொல்லி இருப்பது நல்ல கருத்து. ம்ம்ம்ம்......

சைவகொத்துப்பரோட்டா said...

மனித உயிருக்கு இவ்வளுவுதான்
மதிப்பு.

Sangkavi said...

யரைச்சொல்லியும் என்ன செய்வது......
நாம தான் பார்த்து போய்க்கனும்....

மோகன் குமார் said...

எனக்கு தெரிந்து மத்த நாள் அளவு சண்டே பலரும் ப்ளாக் பக்கம் வருவதில்லை நண்பா;

நீ எழுதிய விஷயம் வருத்தமான ஒன்று :(

Madhavan said...

ooops.. our system is in very bad shape.

We have already seen lot of deaths / injuries particularly children, due to unclosed(unsafe), bores drilled on public places.

Shankar said...

I also understand that the Police is initiating action against the driver.
Most probably the driver was drunk. It always happens in such instances.
No matter what, our road traffic system has a long way to go.
Shankar