அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, April 18, 2010

சண்டேனா ஒண்ணு - 18.04.2010 (ஐ.பி.எல்.லும் இந்தியப் பொருளாதாரமும்)ஐ.பி.எல். (Indian Premier League) என்ற ஒன்று; அதன் தலைவர் லலித் மோடி; அவரின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

ஐ.பி.எல். அணிகளை வாங்குவதில் உள்ள போட்டா போட்டிகள் என்ன, அதில் புரளும் பணத்தின் அளவுதான் என்ன, ஐ.பி.எல். விளையாட்டுக்களைப் பற்றி செய்திகளை முந்தித் தரும் ஊடகங்களின் ஆர்வம்தான் என்ன.....என்று அவ்வையார் மாதிரி கேள்வி கேட்க ஆரம்பித்தால் முடிக்கவே முடியாது. இதில் மத்திய மந்திரியின் பெயர் வேறு அடி படுகிறது.

அப்படியாவது அதில் ஏதாவது சுவாரசியமாக இருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் இல்லை (என் கண்ணோட்டத்தில் சொல்கிறேன்). ஒரே அணியில் பல நாட்டு வீரர்கள் என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் என் கண்ணுக்குத் தெரியவில்லை.

இந்த நாட்டில் மட்டும்தான் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் அரசும் மக்களும் ஈடுபடுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

டிஸ்கி : இதில் பொருளாதாரத்துக்கு என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? சொல்ல மறந்து விட்டேனே, 2005 ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 42 சதவீத இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கிறார்கள். (அதாவது நாள் ஒன்றுக்கு 22 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள்). ஆதாரம் : விக்கிபீடியா 

1 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan said...

I am also not interested in IPL matches..